குர்சித் ஆலம் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குர்சித் ஆலம் கான்
12வது கருநாடக ஆளுநர்
பதவியில்
6 ஜனவரி 1992 – 2 திசம்பர் 1999
முதலமைச்சர்சாரெகொப்பா பங்காரப்பா
வீரப்ப மொய்லி
தேவ கௌடா
ஜே. ஹெச். படேல்
சோ. ம. கிருசுணா
முன்னையவர்பானு பிரதாப் சிங்
பின்னவர்வி. எஸ். ரமாதேவி
2வது கோவா ஆளுநர்
பதவியில்
18 ஜூலை 1989 – 17 மார்ச் 1991
முதலமைச்சர்பிரதாப்சிங் ரானே
சர்ச்சில் அலமாவ்
லூயிஸ் ப்ரூட்டோ பார்பசோ
இரவி நாயக்
முன்னையவர்கோபால் சிங்
பின்னவர்பானு பிரகாஷ் சிங்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1984–1989
முன்னையவர்தயா ராம் சாக்யா
பின்னவர்சந்தோஷ் பார்த்தியா
தொகுதிபரூக்காபாத் மக்களவைத் தொகுதி
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
5 ஜூலை 1980 – 6 திசம்பர் 1984
தொகுதிஉத்தரப் பிரதேசம்
பதவியில்
16 ஏப்ரல் 1974 – 15 ஏப்ரல் 1980
தொகுதிதில்லி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
குர்சித் ஆலம் கான்

(1919-02-05)5 பெப்ரவரி 1919
பரூக்காபாத், ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போதைய உத்தரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு20 சூலை 2013(2013-07-20) (அகவை 94)
தில்லி, இந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சாயீதாகுர்சித்
உறவுகள்சாகீர் உசேன் (மாமனார்)
பிள்ளைகள்சல்மான் குர்சித்
முன்னாள் கல்லூரிஆக்ரா பல்கலைக்கழகம்
பென்சில்வேனியா பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி

குர்சித் ஆலம் கான் (Khurshed Alam Khan) (5 பிப்ரவரி 1919–20 ஜூலை 2013) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த தலைவராவார்.[1]. 1991 முதல் 1999 வரை கர்நாடக ஆளுநராகவும், 1989 முதல் 1991 வரை கோவா ஆளுநராகவும் இருந்தார். அதற்கு முன், இவர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரது அமைச்சரவையில் வெளி விவகாரத் துறையில் இணை அமைச்சராக இருந்தார். மேலும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையவர் .

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர், 5 பிப்ரவரி 1919 அன்று உத்தரப் பிரதேசத்தின் பரூக்காபாத் மாவட்டத்திலுள்ள பிடாரா கிராமத்தில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்விக்குப் பிறகு, ஆக்ரா பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மாணவராகவும் இருந்தார். அங்கு இவர் மேலாண்மை படிப்பில் ஒரு பாடத்தை வெற்றிகரமாக முடித்தார்.

கான், கல்வியில் நிலையான ஆர்வம் கொண்டிருந்தார். இவர் புது தில்லி முனைவர் ஜாகிர் உசேன் நினைவு கல்லூரியின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்தார். இவர் பரீதாபாத்தின் ஒய்எம்சிஏ பொறியியல் நிறுவனத்தின் ஆட்சி மன்றத் தலைவராக பணியாற்றினார். இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர், மாநிலங்களவை உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பெருமையைப் பெற்றார். இவர், 1974–84 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், 1984–89 வரை எட்டாவது மக்களவை உறுப்பினராகவும் இருந்தார். இவர், பருகாபாத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும், மத்திய அமைச்சர்கள் குழுவிலும் உறுப்பினராக இருந்தார். அதில் வெளிவிவகாரம், சுற்றுலா, பயணிகள் விமானப் போக்குவரத்து, துணி மற்றும் வணிகம் போன்ற பல்வேறு துறைகளைக் கையாண்டார்.

இவர் 18 ஜூலை 1989 அன்று கோவா ஆளுநராக நியமிக்கப்பட்டபோது தனது மக்களவை உறுப்பினர் பதவியை விட்டு விலகினார். இவர், மகாராட்டிராவின் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார். 6 ஜனவரி 1991 முதல் கர்நாடக ஆளுநராகவும், கேரள ஆளுநராகவும் பதவி வகித்தார்.

இவர், இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் சாகீர் உசேனின் மூத்த மகள் சயீதா குர்ஷித்தை மணந்ததன் மூலம் அவருக்கு மருமகன் ஆனார். முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்சித் இவரது மகனவார். இவருக்கு மேலும் மூன்று மகள்களும் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. PTI (1994-12-11). "Former Union minister Khurshed Alam Khan passes away at 95 – The Economic Times". Economictimes.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2013-07-21.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்சித்_ஆலம்_கான்&oldid=3862629" இலிருந்து மீள்விக்கப்பட்டது