கோபால் சிங் (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபால் சிங்
நாகாலாந்து ஆளுநர்
பதவியில்
20 ஜூலை 1989 – 3 மே 1990
பின்வந்தவர் எம். எம். தாமஸ்
கோவா ஆளுநர்
பதவியில்
30 மே 1987 – 17 ஜூலை 1989
பின்வந்தவர் குர்சித் ஆலம் கான்
கோவா துணைநிலை ஆளுநர்
பதவியில்
24 செப்டம்பர் 1984 – 29 மே 1987
முன்னவர் இத்ரிஸ் அசன் லத்திப்
தனிநபர் தகவல்
பிறப்பு 29 நவம்பர் 1917
இறப்பு 8 ஆகஸ்ட் 1990
தேசியம் இந்தியர்
வாழ்க்கை துணைவர்(கள்) சிறீமதி இந்திரஜீத் கௌர்

முனைவர் கோபால் சிங் (Gopal Singh)(1917-1990) அரசியல்வாதியும், மாயவாதியும், கவிஞரும், எழுத்தாளரும் தத்துவவாதியுமாவார். இவர் கோவா ஆளுநராகவும் நாட்டின் சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் தலைவராகவுமிருந்தார்.[1]

கோவாவின் துணை நிலை ஆளுநராக இருந்த இவர், மே 1987 முதல் கோவா மாநிலத்தின் ஆளுநராகவும், நாகாலாந்தின் ஆளுநராகவும் இருந்தார்.[2] 3 ஏப்ரல் 1962 முதல் 2 ஏப்ரல் 1968 வரை மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

ஓர் எழுத்தாளரான இவர், சீக்கிய வேதமான கிரந்த சாஹிப்பை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஆங்கில-பஞ்சாபி அகராதி, குரு நானக், குரு கோவிந்த் சிங் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றாசிரியரும் ஆவார். [3]

மேற்கோள்கள்[தொகு]