பிடிஎஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிடிஎஸ்
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம்சியோல், தென் கொரியா
இசை வடிவங்கள்
இசைத்துறையில்2013–தற்பொழுது வரை
வெளியீட்டு நிறுவனங்கள்
  • பிக் ஹிட்
  • போனி கனியன்
  • டெஃப் ஜாம் ரெக்கார்டிங்ஸ்[1]
  • கொலம்பியா ரெக்கார்ட்ஸ்[2][3]
இணைந்த செயற்பாடுகள்ஸ்டீவ் ஆகி
இணையதளம்bts.ibighit.com
உறுப்பினர்கள்
கொரியப் பெயர்
அங்குல் எழுத்துமுறை방탄소년
Hanja防彈少年
சப்பானியப் பெயர்
Kanji 防弾少年団
ஹிரகனா எழுத்துக்கள் ぼうだんしょうねんだん

பிடிஎஸ் (BTS/방탄소년단) அல்லது பாங்டன் ஸொனென்தன் என்பது ஜின், ஆர்.எம்., ஜுங்கூக், ஜே-ஹோப், சுகா, வி மற்றும் ஜிமின் போன்ற ஏழு உறுப்பினர்களைக் கொண்ட தென் கொரிய நாட்டு ஆண்கள் இசைக்குழு ஆகும். இது 2010 இல் உருவாக்கப்பட்டு 2013 இல் பிக் ஹிட் என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் கீழ் அறிமுகமானது. இவர்களின் பாடல் பெரும்பாலும் தனிப்பட்ட மற்றும் சமூக வர்ணனைகளை மையமாகக் கொண்டது. இதனால் இவர்களின் பாடல் வரிகள் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானது. இவர்களின் படைப்புகளில் பெரும்பாலும் இலக்கியம் மற்றும் உளவியல் கருத்துக்கள் பற்றிய குறிப்புகள் மற்றும் மாற்று பிரபஞ்சக் கதையையும் உள்ளடக்கியது. இந்த குழு பல ஆல்பங்களை வெளியிட்டு பல உலக சுற்றுப்பயணங்களில் நிகழ்த்தியுள்ளது.

இக்குழு 2013 ஆம் ஆண்டில் அவர்களின் ஒற்றை ஆல்பமான '2 கூல் 4 ஸ்கூல்' என்ற பாடலுடன் அறிமுகமானது. பின்னர் அவர்களின் முதல் கொரிய மொழி இசுடுடியோ ஆல்பமான 'டார்க் & வைல்ட்' மற்றும் ஜப்பானிய மொழி இசுடுடியோ ஆல்பமான 'வேக் அப்' ஆகியவற்றை 2014 இல் வெளியிட்டது. இவர்களின் இரண்டாவது கொரிய இசுடுடியோ ஆல்பமான 'விங்ஸ்' (2016) என்ற ஆல்பம் தென் கொரியாவில் முதன்முதலில் ஒரு மில்லியன் பிரதிகள் விற்று சாதனையை படைத்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டளவில் பிடிஎஸ் உலகளாவிய இசை சந்தையில் நுழைந்து அமெரிக்காவிலும் ஏராளமான விற்பனை சாதனைகளை முறியடித்தது.

பிடிஎஸ் இசைக்குழு இதுவரைக்கும் 6 அமெரிக்க இசை விருதுகள், 5 பில்போர்டு மியூசிக் விருதுகள் மற்றும் 24 கோல்டன் டிஸ்க் விருதுகள் மற்றும் கிராமி விருது மற்றும் பிரிட் விருதுக்கான பரிந்துரைகள் உட்பட அவர்களின் படைப்புகளுக்கு ஏராளமான விருதுகளையும் மற்றும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "シングル「血、汗、涙」を5月10日にリリース!". BTS Universal Music Japan Page (in ஜப்பானியம்). Universal Music LLC, Japan. March 23, 2017. Archived from the original on March 24, 2017. பார்க்கப்பட்ட நாள் March 24, 2017.
  2. Kim, Jae-Ha (26 February 2021). "The Racism BTS Continues to Face Is Part of Larger Anti-Asian Xenophobia". Teen Vogue. பார்க்கப்பட்ட நாள் 27 February 2021.
  3. Romano, Aja (5 October 2020). "With "Dynamite," BTS beat the US music industry at its own cheap game". Vox. பார்க்கப்பட்ட நாள் 27 February 2021.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிடிஎஸ்&oldid=3530349" இலிருந்து மீள்விக்கப்பட்டது