ஜின் (பாடகர்)
Appearance
கிம் சியோக்-ஜின் (கொரியம்: 김석진; பிறப்பு : டிசம்பர் 4, 1992)[1], அல்லது அவரது மேடைப் பெயரான ஜின் எனப்படுபவர், ஒரு தென் கொரிய பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். மேலும் இவர் தென் கொரிய ஆண்கள் இசைக்குழுவான பி.டி.எஸ் இல் உறுப்பினராக ஜூன் 2013ல் இணைந்தார்[1]. ஜின் பிடிஎஸ் உடன் இணைந்து, மூன்று தனி தடங்களை வெளியிட்டுள்ளார், அவை: "அவேக்" (2016), "எபிஃபானி" (2018) மற்றும் "மூன்" (2020) ஆகியவை[2]. இவை அனைத்தும் தென் கொரியாவின் காவ்ன் டிஜிட்டல் தரவரிசையில் பட்டியலிடப்பட்டன. 2019 ஆம் ஆண்டில், ஜின் தனது முதல் தனிப்பெரும் மின்னணு தடமான "டுனைட்" ஐ வெளியிட்டார். பி.டி.எஸ் உறுப்பினர் வி உடன் இணைந்து 2016ஆம் ஆண்டு ஹ்வாரங்: தி பொயட் வாரியர் யூத் என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பாடல் ஒன்றில் அவர் தோன்றினார்.
கிம் சியோக்-ஜின் | |
---|---|
மே 1, 2019ல் [[பில்போர்ட்|பில்போர்டு] இசை விருதுகளின் போது ஜின் | |
தாய்மொழியில் பெயர் | 김석진 |
பிறப்பு | திசம்பர் 4, 1992 குவாச்சியோன், கியோங்ஙி-டோ, தென் கொரியா |
மற்ற பெயர்கள் | ஜின் |
குடியுரிமை | தென் கொரியன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | கொன்குக்கு பல்கலைகழகம் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2013–தற்போது |
சொத்து மதிப்பு | 20 மில்லியன் அ.டா. |
உயரம் | 179 செ.மீ./5'10.5" |
எடை | 62 கி.கி/ 137lbs |
விருதுகள் | ஹ்வாகன் கலாச்சார விருது (2018) |
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் |
|
இசைக்கருவி(கள்) | குரலிசை |
வெளியீட்டு நிறுவனங்கள் | பிக் ஹிட் |
இணைந்த செயற்பாடுகள் | பிடிஎஸ் |
Korean name | |
Hangul | 김석진 |
Hanja | 金碩珍 |
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல் | Gim Seok-jin |
McCune–Reischauer | Kim Sŏkchin |
கையொப்பம் | |
வலைத்தளம் | |
https://ibighit.com/bts |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "பிடிஎஸ் ஜின் இன் பிறந்தநாள்". K Profiles.
- ↑ "ஜின் வெளியிட்ட தனிப்பாடல்கள்". Elite daily.