வி (பாடகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிம் டே-ஹியூங் (கொரியம்: born; பிறப்பு டிசம்பர் 30, 1995)[1], அல்லது அவரது மேடைப் பெயரான வி என பரவலாக அறியப்படும் இவர், ஒரு தென் கொரிய பாடகர், பாடலாசிரியர் மற்றும் நடிகர் ஆவார்[2]. அவர் தென் கொரிய ஆண்கள் இசைக்குழுவான பிடிஎஸ் இன் பாடகர் ஆவார்.

வி
Upper body shot of V posing with arms folded wearing a dark blue, patterned jacket and a large, round gold earring with a red jewelled center on his left ear
மே 1, 2019ல், பில்போர்ட் இசை விருதுகளின்போது சிவப்ப கம்பளத்தில் வி
பிறப்புகிம் டே-ஹியூங்
திசம்பர் 30, 1995 (1995-12-30) (அகவை 28)
ஸியோ மாவட்டம்,தேகு, [[தென் கொரியா]
பணி
  • பாடகர்
  • பாடலாசிரியர்
  • நடிகர்
விருதுகள் ஹ்வாகன் கலாச்சார விருது (2018)
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)குரலிசை
இசைத்துறையில்2013 (2013)–தற்போது
வெளியீட்டு நிறுவனங்கள்பிக் ஹிட்
இணைந்த செயற்பாடுகள்பிடிஎஸ்
Korean name
Hangul
Hanja
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்Gim Tae-hyeong
McCune–ReischauerKim T'aehyŏng
Stage name
Hangul
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்Bwi
McCune–ReischauerPwi
கையொப்பம்

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

கிம் டே-ஹியூங், 1995 திசம்பர் 30 அன்று, தென் கொரியாவின் டேகுவின், சியோ மாவட்டத்தில், ஜியோசாங் பகுதியில் வளர்ந்தார். அவரது பெற்றோருக்கு பிறந்த மூன்று குழந்தைகளில் மூத்தவர், இவருக்கு ஒரு தம்பி (கிம் ஜௌங் கியு) மற்றும் தங்கை (கிம் இயன் ஜின்) உள்ளனர்[3]. அவரது தந்தை ஒரு ஏழை உழவர், தாய் இல்லத்தரசி. குடும்ப வறுமை காரணமாக வி தனது சிறு வயதில் தன் பாட்டியுடன் வளர்ந்தார்[4].

கல்வி[தொகு]

வி முதலில் தொடக்கப்பள்ளியில் பயிலும்போதே தொழில்முறை பாடகராக இருக்க விரும்பினார். தனது தந்தையின் ஆதரவோடு, ஆரம்பகால நடுநிலைப் பள்ளியில் கூம்பிசைக் கருவி பாடங்களை எடுக்கத் தொடங்கினார். வி இறுதியில் பிக் ஹிட் என்டர்டெயின்மென்ட்டில் ஒரு பயிற்சியாளராக ஆனார்.

2014 இல் கொரிய கலை உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, வி குளோபல் சைபர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் - ஆகஸ்ட் 2020 இல் ஒளிபரப்பு மற்றும் பொழுதுபோக்கு துறையில் ஒரு பெரிய பட்டம் பெற்றார். 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, அவர் ஹன்யாங் சைபர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார், விளம்பரம் மற்றும் ஊடகங்களில் வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பயில்கிறார்[5].

விருதுகள்[தொகு]

V holds his left pointer finger to his temple and leans against in front of the LA skyline
டி ஐகான் நாழிதளுக்காக 2017 நவம்பரில் எடுக்கப்பட்ட வி இன் புகைப்படம்.

கிம் டே-ஹியூங் தென் கொரிய இசைத்துறையில் சில பிரபலமான விருதுகளை வென்றுள்ளார். 2017 ஆம் ஆண்டில் மெலன் இசை விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டார். 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சிறந்த ஐடல் நடிகர் மற்றும் சிறந்த நடனக்கலைக்கான தனது வாழ்க்கையில் இரண்டு முறை சூம்பி விருதுகளை வென்றுள்ளார். 2020 ஆம் ஆண்டில் சிறந்த OST க்கான அபான் இசை விருதுகளையும் வென்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. அரசன், தமிழ். "யார் இந்த வி ?". TheFamousPeople.
  2. "பிடிஎஸ் இன் வி ஒரு நடிகர் ??". PinkVilla.
  3. "வி இன் குடும்பம்". FamilyTron.
  4. "வி இன் பாட்டி". AminoApps.
  5. "வி இன் கல்வி". TheWikiFeed. Archived from the original on 2021-07-15. பார்க்கப்பட்ட நாள் 2021-07-15.

வெளி இணைப்புகள்[தொகு]

[1]

  1. "Kim Taehyung (V) Age, Wiki, Biography, Wife, Height in feet, Net Worth & many more". Trend Setter LIVE (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2022-08-05. பார்க்கப்பட்ட நாள் 2022-08-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி_(பாடகர்)&oldid=3702971" இலிருந்து மீள்விக்கப்பட்டது