குந்தோல்

ஆள்கூறுகள்: 15°15′N 75°15′E / 15.25°N 75.25°E / 15.25; 75.25
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குந்தோல்
குந்தோலா
நகரம்
குந்தோலின் சம்புலிங்கேசுவரர் கோயில்
குந்தோலின் சம்புலிங்கேசுவரர் கோயில்
குந்தோல் is located in கருநாடகம்
குந்தோல்
குந்தோல்
கர்நாடாகாவில் குந்தோலின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 15°15′N 75°15′E / 15.25°N 75.25°E / 15.25; 75.25
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்தார்வாட் மாவட்டம்
ஏற்றம்615 m (2,018 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்16,837
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
இணையதளம்www.kundagoltown.gov.in

குந்தோல் (Kundgol) குந்தோலா என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் மாநிலமான கர்நாடகவின் தார்வாட் மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சியகும்.

அறிமுகம்[தொகு]

கர்நாடகாவின் குந்தோலில் உள்ள சம்புலிங்கேசுவரர் கோயில்

குந்தோல் கர்நாடகாவின் தர்வாட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஹூப்ளிக்கு தென்மேற்கே 14 கி.மீ தொலைவிலும், தர்வாட்டிலிருந்து 32 கி.மீ தென்மேற்கிலும் உள்ளது.

இந்த நகரம் நன்கு அறியப்பட்ட இந்துஸ்தானி இசைக்கலைஞரான இராம்பாபு குந்தோல்கரின் (பண்டிட் சவாய் கந்தர்வன் என பிரபலமானவர்) பிறப்பிடமாகும். கங்குபாய் ஹங்கல், பீம்சென் ஜோஷி இவரது சீடர்களாவர்.

வரலாறு[தொகு]

இந்த ஊர் மேற்கு சாளுக்கியப் பேரரசின் முக்கிய பகுதியின் கீழ் வருகிறது. 11 ஆம் நூற்றாண்டின் சிறீ சம்புலிங்கேசுவரர் கோவிலின் இருப்பு இந்த கூற்றை ஆதரிக்கிறது. 1948 க்கு முன்னர், இது சுதேச மாநிலமான ஜமகண்டியின் ஒரு பகுதியாக இருந்தது.

இந்துஸ்தானி இசையும் குந்தோலும்[தொகு]

குந்தோலில் ஒரு வீடு. சவாய் கந்தர்வன், பீம்சென் ஜோஷி, கங்குபாய் ஹங்கல் ஆகியோர் இந்த வீடோடு தொடர்புடையவர்கள்

பண்டிட் சவாய் கந்தர்வன்[தொகு]

சவாய் கந்தர்வன் என்று பிரபலமாக அறியப்பட்ட இரம்பாபு குந்தோல்கர் 1886 இல் இங்கு பிறந்தார்.

பாரத் ரத்னா பண்டிட் பீம்சென் ஜோஷி [1] [2]

பண்டிட் பீம்சென் ஜோஷி ஒரு குருவைத் தேடி நாடு முழுவதும் பயணம் செய்தார். கடைசியாக ஒரு குந்தோலில் சவாய் கந்தர்வன் என்ற இசைக்கலைஞரை கண்டறிந்து அவரிடம் சீடராக சேர்ந்தார்.

கங்குபாய் ஹங்கலின் கூற்றுப்படி, மறைந்த அப்துல் கரீம் கான் 1900 ஆம் ஆண்டில் தார்வாட்டுக்குச் சென்று ஹங்கல் மற்றும் பண்டிட் பீம்சென் ஜோஷி போன்ற பல சிறந்த கலைஞர்களை உருவாக்கிய குருவான சவாய் கந்தர்வனுக்கு கற்பித்தார். குந்தோலின் நடிகர் குடும்பம் இந்துஸ்தானி இசையை ஆதரிப்பதில் பெயர் பெற்றது.

கலாச்சார நடவடிக்கைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தர்வாட் நகரம் சவாய் கந்தர்வ நாட்டியகிரகம் [3] என்ற ஒரு ஓப்பெராவைக் கொண்டுள்ளது. நவீன கால இந்துஸ்தானி இசையில் சிறந்து விளங்கிய பல பிரபலங்கள் இங்கு தோன்றியுள்ளனர். ஹூப்ளியில் வசிக்கும் கங்குபாய் ஹங்கலும் இந்த இடத்தைச் சேர்ந்தவர்

  • டாக்டர் திருமதி. கங்குபாய் ஹங்கல் [4]

மார்ச் 5, 1913 அன்று தார்வாட்டில் இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயார் திருமதி அம்பாபாய் ஒரு புகழ்பெற்ற கருநாடகப் பாடகர் மற்றும் ரானேபென்னூரைச் சேர்ந்த தந்தை சிக்குராவ் நாடிகர் ஒரு விவசாயி. டாக்டர் கங்குபாய் தனது தாயார் மூலம் இசையில் தொடங்கப்பட்டார். கிருஷ்ணமாச்சார்யா அல்கரின் வழிகாட்டுதலிலும், பின்னர் சவாய் கந்தர்வன் கீழ் கிரானா கரானா இசைப் பள்ளியின் பிரதானக் கலைஞரான மறைந்த உஸ்தாத் அப்துல் கரீம் கானின் சீடராகவும் இசையைக் கற்றுக்கொண்டார்.

சுற்றுலா[தொகு]

கர்நாடகாவின் குந்தோலிலுள்ள சம்புலிங்கேசுவரர் கோயில்
கோயிலின் உட்புறம்
கோயிலின் உட்புறம்
கோயிலின் வெளிப்புறம்
  • சம்புலிங்க கோயில் [5] [6] [7]

இந்த ஊரில் 11 ஆம் நூற்றாண்டிலிருந்து சம்புலிங்கேசுவரர் கோயில் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய சிவன் கோயில் உள்ளது. [8] [9] இக்கோயில், மேலைச் சாளுக்கியர்களால் கட்டப்பட்டது. இது மிகவும் மெருகூட்டப்பட்ட கற்களால் கட்டப்பட்டுள்ளது. அவை ஒன்றோடொன்று பிரிக்கப்படுகின்றன. தூண்களில் உள்ள சிற்பங்களும் உருவங்களும் நன்கு வெட்டப்பட்டுள்ளன.

கோயிலின் கதவு படிகளின் பக்கத்தில், சிங்கத்தின் செதுக்கல்கள் அதன் வாயிலிருந்து ஒரு நீண்ட சுருளை வெளியிடுகின்றன.

இந்த கோயில் சிவன் மற்றும் பார்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தற்போதுசேதமடைந்தாலும், கோயிலின் வெளிப்புறம் தாமரை மற்றும் கீர்த்திமுக முகங்களாலும், நூற்றுக்கணக்கான பிராமண உருவங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த கோயில் முகமதியர்களின் பலியாக இருந்தது. இது ஒரு முன்னாள் தலைவரால் சரிசெய்யப்பட்டது (1808-9 காலத்தில்).

நிலவியல்[தொகு]

குந்தோல் 15.25 ° N 75.25 ° E இல் அமைந்துள்ளது. [10] இது சராசரியாக 615 மீட்டர் (2017 அடி) உயரத்தில் உள்ளது.

புள்ளிவிவரங்கள்[தொகு]

2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி,[11] குந்தோலின் மக்கள் தொகை 16,837 ஆகும். ஆண்களில் மக்கள் தொகையில் 51%, பெண்கள் 49%. சராசரி கல்வியறிவு விகிதம் 64% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% என்பதை விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 73%, மற்றும் பெண் கல்வியறிவு 54%. குண்ட்கோலில், 12% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள்.

மத தரவு 2011[தொகு]

மக்கள் தொகை, 18,726

இந்து, 74.11%

முஸ்லீம், 25.21%

www.census2011.co.in

போக்குவரத்து[தொகு]

ஹூப்ளி மற்றும் தார்வாட் மற்றும் அருகிலுள்ள நகரங்களிலிருந்து குந்தோலுக்கு கருநாடக மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் உள்ளன. இந்த நகரம் இருப்புப்பாதைகளால் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "bhimsen-joshi-indian-classical-music". Archived from the original on 13 June 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-08-26.
  2. "News, on Bhimsen-joshi and Gangubai Hangal". Archived from the original on 13 October 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-08-26.
  3. "Newsrelated to Savai Gandharva". Archived from the original on 2009-04-10. பார்க்கப்பட்ட நாள் 2008-08-26.
  4. "dr-gangubai-hangal". பார்க்கப்பட்ட நாள் 2008-08-26.
  5. Indian Temple Architecture. Adam Hardy. https://books.google.com/?id=aU0hCAS2-08C&pg=RA1-PA335&lpg=RA1-PA335&dq=Kundgol+temple. பார்த்த நாள்: 2008-08-26. 
  6. The Hindu Temple. Stella Kramrisch, Raymond Burnier. https://books.google.com/?id=8-aS52MgIkMC&pg=PA333&lpg=PA333&dq=chalukya+temple+at+Kundgol#PPA333,M1. பார்த்த நாள்: 2009-02-04. 
  7. "Close view of one of the entrance porches of the open mandapa of the temple at Kundgol". பார்க்கப்பட்ட நாள் 2009-02-04.
  8. "Chapter XIV, Karnataka, The Tourist Paradise". Archived from the original on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2009-03-12.
  9. The Hindu Temple By Stella Kramrisch, Raymond Burnier. https://books.google.com/?id=8-aS52MgIkMC&pg=PA333&lpg=PA333&dq=Kundgol+chalukya#PPA333,M1. பார்த்த நாள்: 2009-03-12. 
  10. Falling Rain Genomics, Inc - Kundgol
  11. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
குந்தோல்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

1. SAMAVASARAN (Research Articles-2015), Dr. Appanna N. Hanje, Vidyashree Prakashan, Alagawadi. Cell-9886592927

"https://ta.wikipedia.org/w/index.php?title=குந்தோல்&oldid=3550442" இலிருந்து மீள்விக்கப்பட்டது