பிறிட்ஸ்கர் பரிசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிறிட்ஸ்கர் கட்டிடக்கலைக்கான பரிசு வாழ்ந்துகொண்டிருக்கும் கட்டிடக்கலைஞர்களைக் கௌரவிப்பதற்காக, பிறிட்ஸ்கர் குடும்பத்தால் நடத்தப்படும் ஹையாத் பவுண்டேஷன் நிறுவனத்தினால் ஆண்டுதோறும் வழங்கப்படுவதாகும். கட்டிடக்கலைத்துறைக்கான உலகின் முன்னணிப் பரிசு இதுவே. இது 1977ல், ஜே ஏ. பிறிட்ஸ்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது. பெரிதும் நோபல் பரிசைத் தழுவி உருவாக்கப்பட்டதனால், சில சமயங்களில் இது, "கட்டடக்கலையின் நோபல் பரிசு" எனக் குறிப்பிடப்படுவதுண்டு.