பயனர் பேச்சு:Sivane

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Sivane, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சண்முகம்ப7 (பேச்சு) 14:08, 19 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

??????[தொகு]

What do think in your mind? Are you perfect? There are lots of things to write in wikipedia. But, your average writing limits to faults only. You cannot justify any religion or atheism. All has good and bad. −முன்நிற்கும் கருத்து KGB303 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

எப்போதுமே ஆதிக்க வர்க்கம், சிறுபான்மையினரை ஒடுக்குவது இயல்புதான். உலகம் முழுமையும் பார்த்தால் கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் சிறிய அளவில்தான் இருக்கிறார்கள். அவர்களை எளியதாக மிரட்டி விடலாம். அதைதானே நீங்கள் செய்துள்ளீ்ர்கள். மதநூல்கள் புனிதமானது என்று சொல்லுவதை நான் நடுநிலையென்று சொல்ல மாட்டேன். மதநூல்கள் புனிதமானது என்று இந்த மதத்தினர் நம்புகிறார்கள் என்று சொல்லுவதே நடுநிலையானதாகும். மாற்றுக் கருத்து உண்டா?

விக்கிப்பீடியாவில் எழுத நிறைய இருக்கிறதென்றால் எழுதுங்கள். இது எழுதப்படகூடாத ஒன்றென நீங்கள் நினைப்பதற்கு நான் பொறுப்பாக இயலுமா?

Sivane (பேச்சு) 05:08, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

விமர்சனங்களை முன்வைத்தல்[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிக்கு நல்வரவு. நிச்சியமாக நீங்கள் விமர்சனங்களை இணைக்க முடியும். இயன்றவரை புறவயமாகவும், ஆதாரபூர்வமாகவும் சேர்த்தால் நன்று. நன்றி. --Natkeeran (பேச்சு) 13:31, 20 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

விமர்சனங்களுக்கு என்ன வரைமுறை வைத்துள்ளீர்கள் என்று அறிந்து கொள்ளலாமா. x என்பதன் x என்பவர் இவ்வாறு கூறுகிறார் என்று எழுதலாம் என நினைக்கிறேன். தங்கள் கருத்து என்ன?

Sivane (பேச்சு) 05:08, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

மறை - இறை - நடுநிலை[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Unicode 0B80-0BFF Tamil
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

இன்றைய நாள் இனிதாகட்டும்! மறை, இறை, நடுநிலை போன்ற சொற்களை எதிரெதிர் அணியினர் கையாளும் பொருள் வேறுவேறு என்றே எண்ணுகிறேன். மிகக் குறைந்த பங்களிப்பாளர்களே இருக்கும் தமிழ்விக்கிப்பீடியாவில், உரையாடற் பகுதியில் அதிகம் கவனம் செலுத்த வேண்டாமென்றும், பள்ளிக்குழந்தைகளுக்குத் தேவையான கட்டுரை உருவாக்கத்திலே கவனம்செலுத்தக் கோருகிறேன். ஒரு நொடிக்கு எத்தனை தமிழ் குழந்தைகள் பிறக்கின்றன! அவர்களே நாளையவர்கள். அவர்களின் அடிப்படைக் கல்வி அறியாமையை நீக்க, பலநுட்பங்கள் தேவைப்படுகின்றன. நான் இதுவரை கற்ற நுணுக்கத்தினால், Tamil alphabet gallery உருவாக்கியுள்ளேன். நீங்களும் சிறார்களுக்காக சிந்தியுங்களேன். ஏதாவது உருவாக்குகளேன். வணக்கம்.-- உழவன் +உரை.. 05:32, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஆகா எல்லோரைப் போலவும் விமர்சனப் பகுதியை எதிர்த்துதான் குரல்களை நீங்களும் உயர்த்துகின்றீர்கள். நான் முன்பே கூறிவிட்டேன், நடுநிலையற்ற ஒரு கட்டுரையை அதுவும் மதம் சார்பான ஒரு கட்டுரையை நீங்கள் குழந்தைகளிடம் கொடுக்கும் போது அவர்கள் அப்படியே நம்பிவிடக்கூடும் இதனை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். விமர்சங்கள் இல்லாத மதக் கட்டுரைகளை படிக்கும் போது அவர்கள் முழு ஆத்திகர்களாக மாறும் அபாயம் உள்ளது. அவர்களுக்கு இறை மறுப்பு பற்றியும், அதன் மக்கள் மற்ற மதங்களின் மீது வைக்கும் விமர்சனங்களையும் இணையத்தில் வைக்க நான் முயற்சிகள் செய்கிறேன். பெரும்பான்மை மிக்கவர்கள் ஒடுக்க நினைக்கும் போது என்னால் செய்ய முடியும். உலகம் முழுவதும் இறைமறுப்பாளர்கள் ஒடுக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். விமர்சனங்களை வைத்தலை நான் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் நடுநிலைத் தன்மையை நீங்கள் மதக் கட்டுரைகள் கொஞ்சமேனும் சிரத்தை எடுத்து செயல்படுங்கள். தோழர்கள் பலரை விக்கிப்பீடியாவில் திரட்டி பெரும்பான்மை மிக்க ஆத்திக எழுத்தாளர்களுக்கு மத்தியில் ஏதேனும் செய்ய இயலுகின்றதா என பார்க்கிறேன்.

இறுதியாக ஒன்று. நடுநிலையற்ற கட்டுரை மிகவும் ஆபத்தானது. வளர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல,.. குழந்தைகளுக்கும் தான்.

நன்றி,.

Sivane (பேச்சு) 05:43, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

//ஆகா எல்லோரைப் போலவும் விமர்சனப் பகுதியை எதிர்த்துதான் குரல்களை நீங்களும் உயர்த்துகின்றீர்கள். //
  • ஆம். எனக்கு உரையாடற்பக்கத்தில் அதிக ஈடுபாடு கிடையாது.
//இறைமறுப்பாளர்கள் ஒடுக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். //
  • எந்த ஒரு சிறுபான்மையினரையும் யாரும் ஒடுக்கிவிட முடியாது. இதுவே வரலாறு.
  • இறுதியாக உங்களைப்போன்று நானும், ஒரு சிறுகுறிப்பைச் சொல்ல விரும்புகிறேன். ஆசாமிக்குள்ளே, சாமியை தேடுபவன் நான். பெரியாரும் என்தாத்தாவும் பெயர் சொல்லி அழைத்துக் கொள்ளும் அளவு நெருக்கம். ஈரோட்டில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு நிலம் தர, பெரியார் பெருந்தன்மையாக நடந்து கொண்டதை எனது பெரியவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.அண்ணாவைப் பற்றியும், கலைஞர்கள் பற்றியும் அன்று அவர்கள் அன்று நடந்து கொண்ட முறைகளையும், என் தாத்தா கூற நான் கேட்டிருக்கிறேன். இன்று அவர்கள்..
  • மதங்களை விட, மனிதநேயம் பலன் தருகிறது என்பதே என் அனுபவம். மதம் என்ற சொல்லும், யானையின் மதம் என்பதும் ஒரே நிலையே. அதை அப்படியே விட்டுவிட்டால் அது ஆடாது. மதவழிமுறைகளை விட, மறைஞானத்தை உயர்வாக நான் போற்றுகிறேன்.

இதுவே எனது நிலைப்பாடு. எனது செயற்பாடுகள் சிறந்தவையான என எதிர்காலம் தான் கூற வேண்டும்.இங்கு நான் எத்தகையப் பங்களிப்பு ஈடுபாடுகளைச் செய்திருக்கிறேன் என்று முழுமையாக உணர்ந்தால் இன்னும் சிறப்பாக நமது உரையாடல் இருக்கும். மீண்டும் பிறிதொரு உரையாடலில் சந்திப்போம். வணக்கம்-- உழவன் +உரை.. 06:19, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

மிகவும் விந்தையாக உள்ளது. மத விமர்சனங்களை வெறுக்கும் நீங்கள், விக்கியின் மத சார்ந்த கட்டுரைகளை மறுவாசிப்பிற்கு உட்படுத்தி பாருங்கள். எத்தனை வீரியமாக அவைகள் மதசார்புடையவையாக உள்ளன என்பதை அறிவீர்கள். நீங்கள் எத்தகைய பங்களிப்பு செய்தவர் என்பதை நான் அறிந்து ஒன்றும் ஆகப்போவதில்லை. மத சார்புடைய கட்டுரையை படித்து மதம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதென ஒருவர் நினைத்தால்தான் பெரும் குற்றமாகும்.

Sivane (பேச்சு) 06:36, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

மதச்சார்பு கட்டுரை[தொகு]

சிவனே, உங்கள் கருத்துக்களில் ஏற்கத்தக்கவை உண்டு. ஆனால், நீங்கள் இத்தனை விரைவாகவும் வன்மத்தோடும் உரையாட வேண்டியதில்லை. கட்டுரைகள் எங்கும் போய்விடா. சில நாட்கள் ஆறப்போட்டால் நடுநிலையாளர்களின் கருத்தை அறிய முடியும். எல்லோரும் அவரவர் பணிகளுக்கிடையேதான் இங்கே தொகுத்துக் கொண்டிருக்கிறார்கள். சிக்கலான விசயம் எனும்போது உங்கள் அணுகுமுறையால் அவர்களும் ஒதுங்கிவிட வாய்ப்புள்ளது. ஆலமரத்தடியில் இரவி குறிப்பிட்டது போல சமயங்களைப் பற்றிய கட்டுரைகள் பெரும்பாலும் அவற்றில் ஆர்வமுள்ளோரினாலேயே எழுதப்படாமல் அவர்களையும் அறியாமல் சாய்வு இருக்கத்தான் செய்யும். முதலில் யாரும் வேண்டுமென்றே செய்ததாகக் கொள்ளாமல் நன்னயம் கருதுங்கள். சில இடங்களில் புண்படுத்தும் விதமாகவும் தனிநபரைத் தாக்கும் விதமாகவும் நீங்கள் பதிந்துள்ளவற்றை நீக்குங்கள். ஓரிரு நாட்களுக்காவது ஆறப்போடுங்கள். அதற்குள் சிலராவது கருத்துத் தெரிவிக்கக் கூடும். நான் சமயங்கள் தொடர்பில் அறிஞன் இல்லை, இருந்தாலும் ஒரு நான்கைந்து நாட்களில் பார்வையிட்டு வேண்டிய திருத்தங்களைச் செய்ய முயல்வேன். -- சுந்தர் \பேச்சு 11:55, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

நான் எங்கும் எவரையும் கடிந்து கூட பேசவில்லை என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன். வேகத்துடன் செயல்படவில்லை. வன்மத்துடனும் செயல்படவில்லை. நின்று நிதானமாகவே மாற்றியமைக்க நானும் தயராகவே உள்ளேன். நடுநிலையில்லாத கட்டுரைகளை இங்கு மற்றவர்களும் திருத்தம் செய்ய முயன்றால் நான் வேறு வேலைக்கு சென்றுவிடுவேன். என் எண்ணம் மற்றவர்களை தாக்குதலுக்கு உட்படுத்தவோ, அவர்களின் மதங்களை இழிவு செய்யவோ அல்ல. விமர்சனங்களற்றவைகளாக மதங்கள் இருப்பது நாளைய மக்களுக்கு ஏற்றதன்று. நபிகள் பொய் உரைத்திருப்பதாக அவரின் சமகாலத்திலேயே கருதியவர்கள் உண்டு. இதை நபி கட்டுரையில் குறிப்பிட வேண்டும். பொய்யர் என்று யாருமே நிறுபிக்க முன்வரவில்லை என்பது தவறான தகவல். குரானிலேயே அதற்காக அத்தாட்சிகள் உண்டு.

“இன்னும்; இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை; இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார்; இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்” என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்; ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள். திருக்குரான் 25:4.

நான் அடுத்த வெள்ளி வரை காத்திருக்கிறேன். நன்றி.

Sivane (பேச்சு) 12:32, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

பயனர்:Sivam29 என்ற மற்றொரு பயனரின் கருத்துடன் உங்கள் கருத்துக்களும் இடையிடையே வந்ததால் சிலவற்றை நீங்கள் எழுதியதாகக் கருதியிருக்கலாம். உங்கள் கணக்கில் இருந்து அவ்வாறு எதுவும் தென்படவில்லை. பட்டால் சொல்கிறேன். மற்றபடி பொறுமை காப்பதற்கு நன்றி. -- சுந்தர் \பேச்சு 12:38, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

தவறில்லை நண்பரே. புரிந்துணர்வு கொள்ளும் போது பிரட்சனையில்லை. நன்றி.

Sivane (பேச்சு) 12:42, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

எச்சரிக்கை[தொகு]

சிவனே அவர்களுக்கு, ஏனைய மதத்தினரையும், மதங்களையும் விமரிசிக்க விக்கிப்பீடியா ஒரு களமல்ல. இதனை இங்கு நீங்கள் தொடருவீர்கள் என்றால் விக்கியில் இருந்து நிரந்தரமாகத் தடை செய்யப்படலாம். அருள் கூர்ந்து உங்களுக்கு என்று ஒரு வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்து அங்கு உங்கள் பிரசாரங்களை ஆரம்பியுங்கள். உதவிக்கு wwww.blogger.com தளத்தைப் பாருங்கள். இலவசமாகக் கணக்கு ஆரம்பிக்கலாம். புரிதலுக்கு நன்றி.--Kanags \உரையாடுக 21:20, 24 செப்டெம்பர் 2012 (UTC)👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:50, 25 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவை மத பரப்பு பிரட்சாரமாக வைத்திருப்பதை நான் எதி்ர்த்தமையால் நிரந்தரமாக தடை கோர நீங்கள் உத்தேசித்திருக்கின்றீர்கள். நான் மறுக்க முடியுமா. நிரந்தரமாக நீக்கிவிடுங்கள் நண்பரே. Sivane (பேச்சு) 08:06, 25 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் சிவனே. தங்களின் இறைமறுப்புக் கொள்கைகளுக்கு விக்கிப்பீடியாவில் இடமில்லை என யாரேனும் உங்களிடம் வாதிட்டனரா? பின் ஏன் இத்தனை காட்டமான காரசாரமான தருக்கங்கள்...இறை நம்பிக்கை என்பது மட்டுமே மதமில்லை. மதம் என்பது கொள்கை அது அக்கொள்கையைப் பின்பற்றுவோரின் வாழ்க்கை மட்டும் பண்பாடு ஆகியவற்றோடு கலந்தே தான் உள்ளது. தாங்கள் கூறும் இறைமறுப்புக் கொள்கையும் ஒரு மதமே. இறைமறுப்பு என்பது தங்கள் நம்பிக்கை. அதே போல இறை நம்பிக்கை என்பதும் பிறர் நம்பிக்கை. விக்கிப்பீடியாவில் வெறும் இசுலாம் பற்றிய கட்டுரை மட்டுமன்று பெரியார் பற்றிய கட்டுரையும் உண்டு ஆதிசங்கரர் பற்றிய கட்டுரையும் உண்டு என்பதைத் தாங்கள் அறிவீர்களா? தெரியவில்லை.
  • விக்கிப்பீடியாவில் தாங்கள் பயனராகப் பதிவு செய்தபின் இன்னும் ஒரு கட்டுரையைக் கூட நீங்கள் எழுதவில்லை. அல்லது உரை திருத்தமோ பிற தமிழ்ப்பணியோ செய்யவில்லை. இதுவரை இசுலாம் குறித்த குறிப்பிட்ட கட்டுரைகளைப் பற்றி மட்டுமே விமரிசித்து (தாங்கள் மத/இறைமறுப்புக் கொள்கைகளின் பிரச்சாரத்தில் மட்டுமே ஈடுபட்டு) வந்துள்ளீர்கள். அதற்காகவேப் பயனராகப் பதிவு செய்ததுபோலத்தான் உள்ளது.

//விக்கிப்பீடியாவை மத பரப்பு பிரட்சாரமாக வைத்திருப்பதை நான் எதி்ர்த்தமையால் நிரந்தரமாக தடை கோர நீங்கள் உத்தேசித்திருக்கின்றீர்கள்// விக்கிப்பீடியாவில் சமயம் சார்ந்த கட்டுரைகள் அனைத்தும் நடுநிலையுடன் இல்லை என்றே தாங்கள் வாதிடுவது போலவும். தங்கள் இறைமறுப்புக் கொள்கையை அடுத்தவரிடம் திணிப்பது போலவுமே தான் தங்கள் வாதங்கள் அமைந்துள்ளன. தங்கள் கொள்கைக்கு மறுப்பு தெரிவித்தால் உடனே அவரது பேச்சுப்பக்கத்தில் அவரைத் தாக்குவதும் ஒட்டுமொத்தமாக விக்கிப்பீடியர்கள் அனைவரும் சமயம் சார்ந்தவர்கள் எனக் குறைக் கூறுவதும் தான் பகுத்தறிவா? தங்களுடைய வாதங்களில் தாங்கள் இறைமறுப்புக் கொள்கையைத் திணிப்பது போலத்தான் உள்ளது. நண்பரே எனத் தாங்கள் அழைப்பது முரணாகவே அமைந்துள்ளது. பிற பயனர்களுடன் நல்லுறவைப் பேண விரும்புவோருக்கு இது தேவையற்றதே. விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் அனைவருமே வேறு வேலைகளில் ஈடுபடுபவர்கள் தான் யாருக்கும் இது முழுநேரப்பணியன்று. எனவே இது போன்ற உரையாடல்கள் தங்களின் நேரத்தையும் அல்லவா சேர்த்து விழுங்கும். இவ்வாறு வாதாடுவதை விட இறைமறுப்பு பற்றிய கட்டுரைகளைத் தொடங்குங்கள். அவற்றில் உங்கள் கருத்துகளை நடுநிலையோடு எழுதுங்கள். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:03, 25 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

கிறிஸ்துவம் குறித்தும், இந்து மதம் குறித்தும் நான் எழுதியமையை நீங்கள் பார்க்கவில்லை என்பதற்காக விமர்சனங்கள் இசுலாமின் மீதுமட்டும் வைப்பதாக நினைப்பது ஏற்படையதல்லை. இசுலாம் குறித்தான கட்டுரைகளில் இருக்கின்ற நடுநிலைத்தன்மையை நான் கேள்விக்குறியாக்கியுள்ளேன். சமயம் சார்பான அனைத்து கட்டுரைகளுக்கும் நான் நடுநிலைத்தன்மையை பேன கோரிக்கை வைத்துள்ளேன். இப்போது அதற்காக நடவெடிக்கை எடுக்கப்பட்டு கொண்டிருப்பது மகிழ்வு. நீங்கள் இங்கே வந்து இறைமறுப்பு குறித்து விமர்சிப்பதை போலவே நான் இறையுணர்வு குறித்து நான் விமர்சனம் செய்தேன்., என் பங்களிப்பினை இதிலிருந்து தொடங்கலாம் என்றே நினைத்திருக்கிறேன். இறைமறுப்பு குறித்தான கட்டுரையில் எழுதுவதை விட சமயம் சார்ந்த கட்டுரைகளில் நிறைய திருத்தங்கள் வேண்டிய அவசியம் இப்போது இருக்கிறது. முதலில் என்னை கட்டுரையில் எழுத வேண்டாம் என்றார்கள். சரியென்று நான் பேச்சு பக்கத்தில் எழுதினேன். அடுத்து அதுவும் வேண்டாமென்றார்கள். பயனர் ஒருவருக்கு என் நிலையை எடுத்துக் கூறினேன். இப்போது விக்கிப்பீடியான் மொத்த பயன்பாடுகளுக்கு தடை விதிப்படும் என்கிறார்கள்.

இறைமறுப்பினை மதம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அளவிற்கே இன்றைய தலைமுறை உள்ளது. தாங்களே அவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றீர்கள். நீங்கள் எனக்காக நடுநிலையோடு சமயம் சார்ந்த கட்டுரைகளை கவனித்துக் கொள்வதாக இருந்தால், நான் விக்கிப்பீடியாவினை விட்டு வெளியேறுகிறேன். இப்போது கூட நடுநிலையான கட்டுரைகளை எழுத குழு அமைக்க வேண்டும் என்றே கோரிக்கை வைத்திருக்கிறேன். நன்றி.

Sivane (பேச்சு)

//முதலில் என்னை கட்டுரையில் எழுத வேண்டாம் என்றார்கள். சரியென்று நான் பேச்சு பக்கத்தில் எழுதினேன். அடுத்து அதுவும் வேண்டாமென்றார்கள். பயனர் ஒருவருக்கு என் நிலையை எடுத்துக் கூறினேன். இப்போது விக்கிப்பீடியான் மொத்த பயன்பாடுகளுக்கு தடை விதிப்படும் என்கிறார்கள். //

விக்கிப்பீடியா பேச்சு:சர்ச்சைக்குரிய துறைகள் பக்கத்தில் இது குறித்த கொள்கை நிலைப்பாடு ஏற்படும் வரை பொறுமை காக்க வேண்டுகிறேன்.

//இறைமறுப்பு குறித்தான கட்டுரையில் எழுதுவதை விட சமயம் சார்ந்த கட்டுரைகளில் நிறைய திருத்தங்கள் வேண்டிய அவசியம் இப்போது இருக்கிறது. //

தங்கள் நிலைப்பாடு புரிகிறது. இருப்பினும் இடைப்பட்ட காலத்திலும் பிறகும் தங்களால் இயலுமானால்,

ஆகிய பக்கங்களில் இருந்து தொடங்கி அங்கு காணப்படும் இணைப்புகளில் உள்ள கட்டுரைகளைத் தமிழாக்கி விக்கிப்பீடியாவில் இட்டு உதவுங்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி--இரவி (பேச்சு) 14:18, 25 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்[தொகு]

வணக்கம் மரியாதைக்குரிய பயனர் சிவனே உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். உங்கள் பக்கம் ஓரளவுக்கு நீதி, நடு நிலை இருக்கிறது என்பதை என்னால் உணரமுடிகிறது, உங்களுக்கு நிறைய அறிவாற்றலும் இருக்கிறது. அதனால் அதனை பயனுள்ளனவாக மாற்றுவோம். மதம் அல்லது சமைய விமர்சனம் என்ற சொல்லுக்கு பதிலாக மத தவறுகள் அல்லது சமைய தவறுகள் என்று உங்கள் கட்டுரையை ஆரம்பிக்கலாம் என்று நான் எண்ணுகிறேன். காரணம் அறிவியல் என்பது தவறுகளை புரிந்ததனால் வந்தது, மூட நம்பிக்கையில் இருந்து சுயமாக சிந்திக்க வைத்தது. தவறுகளை கண்டிப்பாக சுட்டி காட்ட வேண்டும்!! அப்போத்துதான் உண்மையான இயல்பு நிலை புரியும். நீங்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் இன்றைய சாதாரண மனிதனால் நடுநிலையாக ஏற்றுகொள்ள முடியும். மீண்டும் சொல்கிறேன் மனத்துணிவுடன் உங்கள் கட்டுரையை வரையுங்கள். ஒரு மனிதன் பயந்து பயந்து ஒதிங்கினால் மூட நம்பிக்கையே வானோங்கி வளரும். இதை நான் சொல்லவில்லை எனது அப்பா எனக்கு சொல்லி குடுத்த முதல் பாடம். நான் கூறியிருக்கும் தலைப்பில் நீங்கள் கட்டுரை ஆரம்பித்தால் ஆதாரம் தானாக வரும், பேச்சுப்பக்கத்துக்கு வர வேண்டாம் என்றுதான் நான் இருந்தேன். ஆனால் திறமை இருக்கும் ஒரு விக்கி பயனர் வெளியேறுவதை நான் விரும்பவில்லை அதனால் இங்கு மீண்டும் வந்தேன் நன்றி.--சிவம் 19:59, 25 செப்டெம்பர் 2012 (UTC)

இல்லை என்றால் மூட நம்பிக்கை என்ற தலைப்பில் நான் கட்டுரை எழுதுவேன் நீங்கள் எதற்கும் தயங்க வேண்டாம். நீங்கள் உங்கள் மேல் உறுதி எடுங்கள் அப்போதுதான் உங்கள் நடுநிலை என்ன என்று மற்றவர்களுக்கு புரியும். நீங்கள் ஒரு தப்பானவரோ இல்லை பிளையானவரோ இல்லை என்பது எனது நடு நிலை. --சிவம் 20:07, 25 செப்டெம்பர் 2012 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sivane&oldid=3184873" இலிருந்து மீள்விக்கப்பட்டது