விக்கிப்பீடியா:கட்டுரையை விரிவாக்குவது எப்படி?

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகள் குறித்த கூடுதல் தகவல் அறிவீரா? அவற்றை நீங்களே சேர்க்க முடியும். ஆம்! பின்வரும் எளிய வழிமுறைகள் மூலம் கட்டுரைகளை விரிவாக்கலாம்!!

  • கட்டுரைப் பக்கத்தின் மேல் உள்ள "தொகு" எனும் பொத்தானை அழுத்துங்கள்.
  • தற்போது அந்தக் கட்டுரைக்கான தொகுப்புப் பக்கம் (மின்மடல் அனுப்பும் பெட்டி போல்) பார்வைக்குக் கிடைக்கும். இந்தத் தொகுப்புப் பக்கத்தில் கட்டுரைக்கான உரைநடைப் பகுதி இருக்கும். அதில் தாங்கள் அறிந்த கூடுதல் தகவலைச் சேருங்கள். தக்க சான்றுடன் தகவலைச் சேர்க்க வேண்டும். ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரையைத் தமிழாக்கியும் எழுதலாம்.
  • கட்டுரையை மேம்படுத்திய பின், அப்பெட்டியின் கீழ் உள்ள இப்பக்கத்தைச் சேமிக்கவும் என்ற பொத்தானை அழுத்துங்கள்.


  • தாங்கள் செய்த மேம்பாடுகளுடன் கட்டுரை சிறப்பாகக் காட்சியளிக்கும்.
கட்டுரைகள் விரிவாக அமைய நீங்களும் உதவலாமே?


தமிழ்த் தட்டச்சு[தொகு]

இப்போது விக்கிப்பீடியாவில் தமிழில் எழுத எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் நிறுவ வேண்டியதில்லை. தமிழ் விக்கிப்பீடியாவின் வலது மூலையில் தமிழில் உள்ளிட இரு விருப்பத்தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

  • எழுத்துப்பெயர்ப்பு --- அம்மா என்பதற்கு ammA அல்லது ammaa
  • தமிழ்99 --- தமிழ்99 விசைபலகையை அடிப்படையாகக் கொண்டது

உங்களுக்கு பழக்கமான விசைப்பலகையைத் தேர்ந்தெடுத்த பின், "தமிழில் எழுத" என்று உள்ள பெட்டியில் குறி இடவும். (பார்க்க படம்). CTRL + M என்னும் குறுக்குவிசை கொண்டு ஆங்கிலத்திலும் தமிழிலும் மாற்றி எழுதலாம்.