பயனர் பேச்சு:Arafath.riyath/தொகுப்பு 1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Arafath.riyath/தொகுப்பு 1!

வாருங்கள் Arafath.riyath/தொகுப்பு 1, உங்களை வரவேற்கிறோம் ! :D

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் .

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Kanags \பேச்சு 11:31, 25 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

நல்வரவு[தொகு]

நல்வரவு அராபத் ரியாத். உங்களின் கட்டுரைகள் கலைக்களஞ்சியத்துக்கு ஏற்றவாறு சிறப்பாக அமைகின்றன (எ.கா சன்னி இஸ்லாம்). முடிந்தால் இஸ்லாம் என்ற கட்டுரையையும் இதே முறையில் மேம்படுத்தினால் நன்று.

  • வரலாறு
  • இசுலாமிய சமூகம்/மக்கள்தொகை
  • நம்பிக்கைகளும் கொள்கைகளும்
  • கடமைகளும் நடத்தைகளும்
  • உள்பிரிவுகள்
  • விமர்சனங்கள்

--Natkeeran 00:02, 17 பெப்ரவரி 2009 (UTC)

மிக்க நன்றி. இஸ்லாம், கிறிஸ்தவம் போன்றவற்றை இசுலாம், கிறித்தவம் என தமிழ் ஒலிப்பு முறைக்கு ஏற்ப மாற்ற எண்ணி உள்ளே. உங்கள் கட்டுரை முழுக்க மாற்றம் செய்வேன். அட்சோபனை என்றால் தெரிவிக்கவும். --Natkeeran 14:26, 27 பெப்ரவரி 2009 (UTC)

பாராட்டு[தொகு]

அராபத் ரியாத், உங்கள் அருமையான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். அண்மையில் நீங்கள் எழுதிய அரச நாகம் என்னும் கட்டுரை முதற்பக்க கட்டுரையாக உயர்ந்திருப்பது கண்டு மகிழ்ந்தேன், பாராட்ட வேண்டியது. இசுலாம் பற்றி நிறைய எழுதுங்கள். மற்ற தலைப்புகளிலும் எழுதுங்கள். உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. மேலும் மேலும் ஆக்கம் தருவீர்கள் என்று நம்புகிறேன்.--செல்வா 13:07, 7 ஏப்ரல் 2009 (UTC)

அல் அக்சா மசூதி[தொகு]

நண்பரே, உங்கள் கட்டுரைகள் மிக அருமையாக உள்ளன. தொடர்ந்து இசுலாம் பற்றிய கட்டுரைகளை எழுதுங்கள். இஸ்ரேலிய-பாலஸ்தினிய பிரச்சனையில் ஒரு முக்கிய திருப்புமுனைக்கு காரணமான அல் அக்சா மசூதியை பற்றியும் சிறிது விரிவாக எழுதுங்கள். Al-Aqsa Intifada பற்றி இந்தியர்கள் புரிந்து கொள்வது நல்லது என்று எண்ணுகிறேன். தொடர்க உங்கள் பணி. --Daniel pandian 12:47, 23 ஏப்ரல் 2009 (UTC)

தொடர்பு கொள்ளவேண்டும்[தொகு]

அராஃபாத் உங்களை தொடர்பு கொள்ளவேண்டும். என்னுடைய மின்-அஞ்சல் diatomist@gmail.com உங்களுடைய தொலைபேசி எண்ணை அனுப்பவும் அல்லது உங்களின் மின்னஞ்சலைக் கொடுக்கவும். அன்புடன்--கார்த்திக் 13:55, 12 ஜூன் 2009 (UTC)

நானும் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். விவரங்களுக்கு ஆலமரத்தடி பார்க்கவும். நன்றி.--ரவி 14:19, 12 ஜூன் 2009 (UTC)

படிமம் பற்றிய உங்கள் கேள்வி[தொகு]

ஒ, செய்யலாமே! இப்பொழுது படிமம்:Fire Triangle 1.jpg பதிவேற்றப்பட்டு கட்டுரையில் சரியாக இருப்பது போல உள்ளதே. புதிய படத்தைத் திருத்தி இட்டதற்கு மிக்க நன்றி. உங்கள் தீயணைப்பான் கட்டுரை அருமை!--செல்வா 17:42, 6 ஜூலை 2009 (UTC)

பாராட்டுகள்[தொகு]

தீயணைப்பான் கட்டுரை மிக அருமையாக உள்ளது. இது போன்று பல துறை கட்டுரைகளை உங்களிடம் இருந்து காண்பதில் மகிழ்கிறேன்.--ரவி 05:51, 7 ஜூலை 2009 (UTC)

நன்றிகள்[தொகு]

அராபாத்,

தில்லி சுல்தானகம் கட்டுரையில் திருத்தங்கள் செய்ததற்கு நன்றிகள். மயூரநாதன் 18:33, 16 ஆகஸ்ட் 2009 (UTC)

பங்களிப்பாளர் அறிமுகம்[தொகு]

வணக்காம் அராப்பத். விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் இடம்பெறச் செய்யும் வகையில் உங்களைப் பற்றிய சிறு அறிமுகம், புகைப்படம் தந்து உதவுவீர்களா? நன்றி--ரவி 08:49, 5 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

நன்றி ரவி. என்னை பற்றிய சிறு குறிப்பை இங்கே கொடுத்திருக்கின்றேன். இது போதும்தானே? புகைப்படம் எனது பயனர் பக்கத்தில் உள்ளது. மேலும் தொடர்பு கொள்ள +91 99018 59589-ல் அழைக்கவும். அல்லது arafath222@gmail.com-க்கு எழுதவும்.

பெயர்: அராபத் ரியாத்.
படிப்பு: பொறியியல் (மின்னியல் மற்றும் மின்னுவியல்)
ஊர்: திருநெல்வேலி, தமிழ் நாடு
தற்போது இருப்பது: பெங்களூர்
வேலை: பொறியாளர், பயோகான்
ஆர்வம்: படிப்பது, ஊர் சுற்றுவது.
விக்கி ஆர்வம்: நபர்கள், வரலாறு, மதம் மற்றும் தமிழ் பற்றிய கட்டுரைகளை விக்கியில் எழுதுவது. சிறப்பு கட்டுரைகள் அளவிர்க்கு இல்லாவிட்டாலும் முடிந்த அளவு விரிவான கட்டுரைகள் எழுதுவது. கிரந்த மற்றும் பிறமொழி தவிர்த்து எளிய நடையில் எழுத முயற்சி செய்து வருகின்றேன்.
--arafat 14:33, 10 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

தகவலுக்கு நன்றி, அராப்பத். --ரவி 13:42, 12 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

உரை திருத்தங்கள்[தொகு]

அராப்பத், தங்களின் அக்கா மகாதேவி, பேரரண் நகரம், சான் சல்லிவன், சாபர் பனாகி கட்டுரைகளின் நான் செய்த உரை திருத்தங்களைச் சரி பார்க்க வேண்டுகிறேன். நன்றி--ரவி 14:26, 12 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

நன்றி ரவி. இதில் சரி பார்க்க எதுவும் இல்லை, நான் திருத்திக்கொல்லத்தான் அதிகம் உள்ளது. எனவே தொடர்ந்து திருத்த வேண்டுகிறேன்.--Arafat 15:56, 12 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

பிறந்தநாள் குழுமம்[தொகு]

வணக்கம்! Arafath.riyath/தொகுப்பு 1 அவர்களே! பிறந்தநாள் குழுமம் தங்களை அதன் புதிய உறுப்பினராக ஏற்றுகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது! ஏதேனும் சந்தேகம் எழுந்தால் என்னைத் தொடர்பு கொள்ளலாம்! நன்றி!

முதற்பக்கக் கட்டுரை[தொகு]

ஏற்கனவே பகுப்பு:முதற்பக்கக் கட்டுரைகள் என்று கட்டுரைப் பக்கங்களிலேயே இடப்படுகிறது. எனவே, பேச்சுப் பக்கத்தில் வார்ப்புரு இடுவது தேவையா என்று தெளிவில்லை. இரட்டிப்பு வேலையாகலாம். இது குறித்து ஒரு தெளிவு வரும் வரை இந்த வார்ப்புருக்களை இட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற தொடர்ந்த, ஒரே மாதிரியான தொகுப்புகளைச் செய்யும் போது, "சிறிய தொகுப்பு" என்று குறித்தால், அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் நெரிசல் வருவதைத் தவிர்க்கலாம். நன்றி--ரவி 09:22, 30 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

முதற் பக்க அறிமுகம்[தொகு]

வணக்கம் அராப்பத். திசம்பர் 2 வரை, முதற்பக்கத்தில் உங்களைப் பற்றிய அறிமுகம் தருவதில் மகிழ்கிறோம் :)--ரவி 20:49, 17 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

நன்றி ரவி--Arafat 08:13, 18 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

Wiki meetup[தொகு]

உங்களை வரவேற்கிறோம் http://en.wikipedia.org/wiki/Wikipedia:Meetup/Bangalore/Bangalore8 Logicwiki 13:28, 23 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

2010 செயற்திட்டம்[தொகு]

வணக்கம் அரபாத்:

இந்த ஆண்டு பல ஆழமான கட்டுரைகளை வழங்கி உள்ளீர்கள். நன்றி.

விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review

2010 செயத்திட்டம் தொடர்பான கருத்துக்களை மேலா பதிந்தால் நன்று.

--Natkeeran 17:15, 20 டிசம்பர் 2009 (UTC)

நன்றிகள்[தொகு]

அரபாத், உங்கள் வாழ்த்துக்களுக்கு முதற்கண் எனது மனம் கனிந்த நன்றிகள். உங்களைப் போலப் பல பங்களிப்பாளர்கள் உற்சாகமாக இயங்குவதால்தான் எனக்கும் ஊக்கம் கிடைக்கிறது. மயூரநாதன் 12:02, 15 ஜனவரி 2010 (UTC)

சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்[தொகு]

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:45, 18 பெப்ரவரி 2010 (UTC)

உங்கள் பயனர் பக்கம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.[தொகு]

--Natkeeran 01:58, 20 பெப்ரவரி 2010 (UTC)

நன்றி! --Arafat 04:33, 20 பெப்ரவரி 2010 (UTC)

கூகுள் கட்டுரைத் தெரிவுக் குழு[தொகு]

கூகுள் கட்டுரைத் தெரிவுக் குழுவில் பங்காற்ற இயலுமா? நன்றி. ஒவ்வொரு மாதமும் ஆர்வமுள்ள பயனர்கள் தங்களுக்குள் இப்பொறுப்பை மாற்றிப் பகிர்ந்து கொள்ளலாம். நன்றி--ரவி 17:20, 21 பெப்ரவரி 2010 (UTC)

உங்கள் வழிகாட்டல் கிடைக்குமென்றால் கண்டிப்பாக செய்கிறேன்.--Arafat 06:25, 22 பெப்ரவரி 2010 (UTC)

நன்றி, அராப்பத். வழிகாட்டல் எல்லாம் பெரிய சொல் :) நாம் அனைவருமே கூடி உரையாடி எந்த மாதிரி கட்டுரைகளைச் சேர்க்கலாம் என முடிவு எடுக்கலாம். --ரவி 08:35, 22 பெப்ரவரி 2010 (UTC)

நன்றி[தொகு]

  • எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தங்களுக்கு என் இனிய நன்றிகள்... --Theni.M.Subramani 16:48, 23 பெப்ரவரி 2010 (UTC)
  • நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே--Hibayathullah 17:33, 2 மார்ச் 2010 (UTC)

பொது காப்பக படிமங்கள்[தொகு]

அராபத், விக்கி பொது கோப்பகத்தில் உள்ள படங்களின் பெயரைக் குறிப்பிட்டாலே போதுமானது.(பார்க்க:விக்கிப்பீடியா:படிமம் பயிற்சி). நீங்கள் ஏதேனும் மாற்றங்கள் செய்தால் அதனை புதுப்பெயரிட்டு பதிவேற்றம் (கோப்பைப் பதிவேற்று இணைப்பு மூலமாக) செய்ய வேண்டும்.அதே பெயரில் பதிவேற்றம் செய்ய வியலாது. --மணியன் 04:56, 4 மார்ச் 2010 (UTC)

  • பொதுக்கோப்பகத்தில் (நான் விக்கி ஊடக நடுவம் என்பேன்) நீங்கள் உங்கள் ஊடகங்களை பதிவிட வேண்டுகிறேன். இப்பொழுது நீங்கள் இங்கு பதிவேற்றுவது தமிழ் விக்கிப்பீடியாவோடு நின்று விடும்.


தமிழ் விக்சனரியிலும், பிற தமிழ் திட்டங்களிலும், அதையும் தாண்டி அனைத்து விக்கித்திட்டங்களிலும் பயன்படுத்தப்படும் வாய்ப்பை இழக்காதீர்கள். இப்பக்கத்தில் அதற்கான அடிப்படை வழிகாட்டுதல்கள் உள்ளன. தெரன்சும், இரவியும் எனக்கு அதற்கு வழிகாட்டினர்.
நான் அதில் சிலநூறுகோப்புகள் பதிவேற்றியுள்ளேன். ஒரே ஒரு கோப்பு (நம் ஊரில் கிடைக்கும் கருப்பு நிற, உட்புறம் கொத்துப் போட்ட சட்டியை, நெதர்லாந்து நாட்டின் நாட்டுப்புறப் பாடலுக்கு பயன்படுத்தியுள்ளனர்.) அப்போது எனக்குக் கிடைத்த மகிழ்ச்சி அளப்பரியது. உங்களுக்கும் அந்த மகிழ்ச்சி கிடைக்க வேண்டும். தமிழனின் முயற்சிகள் காலத்தினையும், நாடுகளையும் தாண்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் உங்களிடம் என் கருத்தைச் சொல்கிறேன். த* உழவன் 14:23, 9 மார்ச் 2010 (UTC)

நன்றி த* உழவன்!கண்டிப்பாக தமிழனின் முயற்சிகள் காலத்தினையும், நாடுகளையும் தாண்ட வேண்டும். மிக நல்ல கருத்து. வரும் நாட்களில் அப்படியே செய்கிறேன்.--Arafat 07:34, 10 மார்ச் 2010 (UTC)

இன்றைய சிறப்புப்படம்[தொகு]

விக்கிப்பீடியா:முதற்பக்கம் இன்றைப்படுத்தல் ஒழுங்கமைவு பக்கத்தில் இன்றைய சிறப்புப் படம் மற்றும் முதற்பக்கக் கட்டுரைகள் ஒழுங்கமைக்கப்படுகிறது. அங்கு நீங்கள் நேரடியாக மார்ச் 29 பக்கத்தில் இதற்கான விவரங்களை இணைக்கலாம். அல்லது படம் மற்றும் தொடுப்புகளைக் கொடுத்து பரிந்துரைக்கலாம்.--மணியன் 05:17, 24 மார்ச் 2010 (UTC)

கட்டுரை போட்டி[தொகு]

வணக்கம்.

கட்டுரை போட்டியின் 99 கட்டுரைகளையும், படித்து ஆய்வு செய்து, தரம் பிரித்து அதனை இங்குள்ள (File Name Not provided (Please Check in your mail box)---கோப்பில் பதிவு செய்து விட்டேன்.

தற்போது கோப்புக்களை அனுப்பி வைப்பதற்கு முன் ஒருங்குறியில் மாற்ற முயற்சி செய்தேன்.

ஒரு சில கோப்புகளை ஒருங்குறிக்கு எப்படி மாற்றுவது என்பது தெரியவில்லை.

(SaiIndira --- After downloading the Font I am able to Read --- but while testing with Tamil Wikipedia --- it is NOT appearing in the readable format. How to convert it into UNICODE Format ---- Immediate Help is required)

ஆகவே அதற்கான முறையினை தெரிய படுத்த வேண்டுகிறேன். Please Check your mail Box. I am waiting for the reply please. (ppnindia@gmail.com)

பதிலுக்கு காத்து கொண்டிருக்கிறேன். வணக்கம். பெரியண்ணன் --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:38, 15 மே 2010 (UTC)[பதிலளி]

அடையாள அட்டைக்கான தகவல்கள்[தொகு]

அராபத்,

  • நீங்கள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்கின்றீர்களா? உங்களுக்கு அடையாள அட்டை வேண்டுமா? ஆம் எனில், கீழுள்ள படி செய்யுங்கள்.
  • கீழ்க்காணப்படும் URL -ஐ ஒற்றி புதிய URL-இல் ஒட்டவும்; பின்னர் Enter செய்தால் ஒரு பக்கம் வரும். அதில் உங்களைப் பற்றிய சில தகவல்கள் கேட்கப்பட்டு இருக்கும். அவற்றை உள்ளிட்டு விட்டு Update செய்யவும்.

மீண்டும் நினைவூட்டுதல்[தொகு]

அராபத்,

  • நீங்கள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்கின்றீர்களா? உங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளதா? இல்லையெனில், கீழுள்ள படி செய்யுங்கள்.
  • கீழ்க்காணப்படும் URL -ஐ ஒற்றி புதிய URL-இல் ஒட்டவும்; பின்னர் Enter செய்தால் ஒரு பக்கம் வரும். அதில் உங்களைப் பற்றிய சில தகவல்கள் கேட்கப்பட்டு இருக்கும். அவற்றை உள்ளிட்டு விட்டு Update செய்யவும்.

நிர்வாகியாகப் பொறுப்பு[தொகு]

வணக்கம் அரபாத்:

நீண்ட காலமாக தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பான முறையில் பங்களித்து வருகிறீர்கள். உங்களை நிர்வாகியாக ஆக்கப் பரிந்துரைக்க விரும்புகிறேன். உங்கள் சம்மதம் உண்டா. நன்றி. --Natkeeran 18:00, 6 ஆகஸ்ட் 2010 (UTC)


நிர்வாகி பொறுப்புக்கு நீங்கள் என்னை முன்மொழிவதில் மகிழ்ச்சி நற்கீரன். மற்றவர்களுக்கும் இதில் உடன்பாடு இருக்கும் பட்சத்தில் எனக்கும் சம்மதமே. நன்றி. --அராபத்* عرفات 06:27, 7 ஆகஸ்ட் 2010 (UTC)
வாழ்த்துக்கள் அரபாத். உங்களை நிர்வாகியாகப் பெறுவதால் தமிழ் விக்கிப்பீடியா சிறப்புறுகிறது. --Natkeeran 23:22, 16 ஆகஸ்ட் 2010 (UTC)
தமிழ் விக்கியில் நானும் ஒரு நிர்வாகி என்பதில் எனக்குதான் சிறப்பு நற்கீரன்! என் மீது நம்பிக்கை வைத்து என்னை முன்மொழிந்தமைக்கு நன்றி--அராபத்* عرفات 03:42, 17 ஆகஸ்ட் 2010 (UTC)
நீங்கள் நிர்வாகி பொறுப்பு பெறுவதில் மகிழ்ச்சி .வாழ்த்துக்கள் அரபாத்.--சஞ்சீவி சிவகுமார் 04:47, 17 ஆகஸ்ட் 2010 (UTC)
நிருவாகி பொறுப்பேற்ற அரபாத்திற்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள். மேலும் உங்கள் அயராத பங்களிப்பால் விக்கிப்பீடியா சிறக்கட்டும். --ஜெ.மயூரேசன் 05:19, 17 ஆகஸ்ட் 2010 (UTC)
மிக்க நன்றி சிவகுமார், மயூரேசன் --அராபத்* عرفات 15:51, 17 ஆகஸ்ட் 2010 (UTC)
அராபத்,நீங்கள் செயலாட்சியராக (நிருவாகியாக) தேர்வுபெற்று, பங்களிக்க இருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கூடுதலான பொறுப்புகளுடன் நடக்கவிருக்கும் உங்கள் பணியால் தமிழ் விக்கிப்பீடியா மேலும் சிறக்கும் என நம்புகிறேன். --செல்வா 12:56, 18 ஆகஸ்ட் 2010 (UTC)
உங்கள் ஆதரவு மொழிகளிகளுக்கு நன்றி செல்வா. --அராபத்* عرفات 15:04, 18 ஆகஸ்ட் 2010 (UTC)

நன்றி[தொகு]

நிருவாகி அணுக்கம் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தமைக்கு மிக்க நன்றி --ஜெ.மயூரேசன் 03:58, 18 ஆகஸ்ட் 2010 (UTC)

கட்டுரைகளை நீக்கும் போது கவனிக்க வேண்டியவை[தொகு]

  • ஒரே பொருளில் வேறு ஒரு கட்டுரை இருந்தால், நீக்கப்பட வேண்டிய கட்டுரையில் குறிப்பிடத்தக்க புதிய தகவல்கள் இருந்தால் அக்கட்டுரைகள் இரண்டையும் வரலாற்றுடன் சேர்த்து இணைக்க வேண்டும். எப்படி இணைப்பது என்று தெரியா விட்டால் அக்கட்டுரையில் mergeto|பழையகட்டுரைத்தலைப்பு என்ற வார்ப்புருவை சேர்த்து விடுங்கள்.
  • கட்டுரைத் தலைப்பு தமிழில் இருந்தால், புதிய கட்டுரையில் புதிய தகவல்கள் ஏதும் இல்லை என்றால், அக்கட்டுரைத்தலைப்பை நீக்காமல் பழைய கட்டுரைத் தலைப்புக்கு வழி மாற்ற வேண்டும். இவ்வகையில், அதே தலைப்பில் மேலும் கட்டுரைகள் உருவாகாமல் தடுக்க முடியும்.
  • சர்ச்சைக்குரிய கட்டுரைகளை நீக்கும் முன்னர் உரையாடல் பக்கத்தில் தெரிவித்து வேறு பயனர்களின் கருத்தை அறிவது நல்லது. நன்றி.--Kanags \உரையாடுக 11:10, 18 ஆகஸ்ட் 2010 (UTC)
நன்றி சிறீதரன். உங்கள் கூற்றுகளை கவனத்தில் கொள்கிறேன்.--அராபத்* عرفات 11:49, 18 ஆகஸ்ட் 2010 (UTC)

நன்றிகள்[தொகு]

உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். --மயூரநாதன் 16:53, 7 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கு நன்றி[தொகு]

நன்றி அராபத், உங்களுக்கும் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்துக்கள். /*Shahulvrn*/ 06:03, 10 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

உங்களுக்கு புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.--Kanags \உரையாடுக 08:25, 10 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
அராபத், உங்களுக்கு எனது ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். -- மயூரநாதன் 09:54, 10 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
நன்றி சிறீதரன், மயூரநாதன். உங்களுக்கும் எனது ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். --அராபத்* عرفات 12:25, 10 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

பெங்களூர் விக்கி சந்திப்புகள்[தொகு]

நாளை பெங்களூரில் கூகுளுடனும் விக்கியருடனும் நடக்கும் இரண்டு முக்கியச் சந்திப்புகளில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். நானும் வருகிறேன். இயன்றால் 99431 68304 அழைக்கவும். நன்றி--இரவி 11:16, 23 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

பயனர் பக்க வடிவம்[தொகு]

உங்கள் பயனர் பக்க வடிவம் அருமை!அட்டகாசம்!பட்டையகிளப்பிட்டிங்க.தூள். அசத்திபுட்டிங்க.என்பக்கத்தினையும் இதுபோல மாற்ற முயல்கிறேன்.வாழ்த்துக்கள்.வணக்கம்.--த* உழவன் 05:38, 14 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி த* உழவன்!--அராபத்* عرفات 06:43, 14 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான்[தொகு]

நினைவூட்டல்: இன்று விக்கி மாரத்தான் :) --இரவி 09:38, 14 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Arafath.riyath,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

can you please translate Jetuka Pator Dore into Tamil[தொகு]

can you please translate Jetuka Pator Dore into Tamil. This article is anout an award winning Assamese film. Simbu123 12:36, 20 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

ஈத் முபாரக்[தொகு]

இம் மாதம் முழுவதும் நோன்பிருந்து பல்வேறுபட்ட அமல்களில் ஈடுபட்டு புனித ரமழான் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது இதயம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் அகமகிழ்வடைகின்றோம். விக்கி குடும்பத்தின் சார்பில்--P.M.Puniyameen 00:57, 31 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

என் இனிய வாழ்த்துகள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 00:58, 31 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]


அஸ்ஸலாமு அலைக்கும் Arafath.riyath/தொகுப்பு 1 அவர்களே , எனது இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள் !
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்!
--சமீர்உரையாடுக!

பிறந்த நாள் வாழ்த்துக்கள்[தொகு]

வணக்கம் Arafath.riyath/தொகுப்பு 1 அவர்களே , விக்கிப்பீடியா:பிறந்தநாள் குழுமம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்  !
--மதனாஹரன் 13:22, 22 பெப்ரவரி 2012 (UTC)

தங்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். --மதனாஹரன் 13:20, 22 பெப்ரவரி 2012 (UTC)

  • இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், அராபத்து! எங்கே உங்களை அண்மையில் விக்கிப்பீடியாவில் காணவில்லை? இயன்றபொழுது வந்து உங்கள் நல்லாக்கங்களைத் தாருங்கள்! :) --செல்வா 13:28, 24 பெப்ரவரி 2012 (UTC)
வாழ்த்துகளுக்கு நன்றி மதனாஹரன், செல்வா.. கொஞ்சம் சொந்த அலுவல் காரனமாக தடைபட்ட விக்கிப்பனி, சோம்பல் காரனமாக தொடர்ந்துவிட்டது. இந்த வருட பிறந்தநாள் முதல் மீண்டும் வர என்னி, விக்கிமூலத்தில் பங்களிக்க தொடங்கியுள்ளேன்.. விரைவில் மீண்டும் விக்கியில் முழுவீச்சில் பங்களிக்கிறேன். நன்றி. --அராபத்* عرفات 08:40, 27 பெப்ரவரி 2012 (UTC)


படம் இற்றைப்படுத்தல்[தொகு]

நீங்கள் பதிவேற்றிய Ind_lang_wiki.jpg படத்தை இற்றைப்படுத்துமாறு வேண்டுகிறேன். நன்றி! :)−முன்நிற்கும் கருத்து தமிழ்க்குரிசில் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இற்றைப்படுத்தப்பட்டது. --மதனாகரன் (பேச்சு) 14:27, 8 சூலை 2012 (UTC)[பதிலளி]