விக்கிப்பீடியா:மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்னாட்டு நிதியமைப்பு

பன்னாட்டு நிதியமைப்பானது அடிப்படையில் ஸேரி டேக்ஸ்டர் ஒயிட் ,ஜான் மேனார்ட் கெயின்ஸ் எனும் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களின் மூளையில் உதித்த குழந்தையாகும். இவ்வமைப்பு 1945 இல் 29 உறுப்பு நாடுகளைக் கொண்டு முறையாக தொடங்கப்பட்டது.தற்போது 189 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன .இதனுடைய அடிப்படை நோக்கம் உலகம் முழுவதிலும் நிதி மற்றும் வளர்ச்சியின் நிலைத்த தன்மையை உறுதிப்படுத்துவது ஆகும். இதனுடைய முக்கிய நிகழ்ச்சி நிரல் பன்னாட்டு அளவில் நிதி சார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவது பன்னாட்டு வணிகத்தையும் நாணயச் செலவாணியையும் உறுதியாக வைத்திருத்தல் ஆகியவை ஆகும். இவ்வமைப்பு பணம் செலுத்துவதில் சமநிலை பிரச்சினைகளை சந்திக்கும் நாடுகளுக்கு கடன் வழங்கும் . ஆனால் கடன் வாங்கும் நாடுகள் மீது இவ்வமைப்பு வரவு செலவு திட்டங்களை சுருக்குதல் செலவுகளை சுருக்குதல் போன்ற கடுமையான நிபந்தனைகளை சுமத்துகிறது. இந்நடவடிக்கைகள் பெரும்பாலும் வளரும் நாடுகளால் விரும்பப்படுவதில்லை. ஏனெனில் மக்களுக்கு மானியம் வழங்கும் பல்வேறு திட்டங்களை கைவிட வேண்டிய சூழல் உருவாகிறது.

[1]
  1. சமூக அறிவியல் க்பாட நூல் 10 ,பக்கம்