தொல். திருமாவளவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தொல் திருமாவளவன்


நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி சிதம்பரம் (தனி), தமிழ்நாடு
அவை மக்களவை
தேர்தல் 2009 இந்திய பொதுத் தேர்தல்
இருப்பிடம் சென்னை, தமிழ்நாடு
அரசியல் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் பாதுகாப்பு இயக்கம்

பிறப்பு 17 ஆகஸ்ட் 1962 (1962-08-17) (அகவை 52)
பிறப்பிடம் அங்கனூர், தமிழ் நாடு, இந்தியா

தொல். திருமாவளவன் (பிறப்பு ஆகஸ்ட் 17, 1962), தமிழ்நாட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர். தலித்துக்கள் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு தலித்துக்களின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இயங்கி வருகின்றார். இவரின் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவும் குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

அரசியல் வாழ்வு[தொகு]

அரசியல் கொள்கை[தொகு]

தலித் மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போரட்டம் நடத்தல்,தனித்தமிழ் வளர்ச்சிக்கு உதவுதல்,சாதிய அடக்குமுறைக்கு எதிராக கருத்திடல்,தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும்,தனித்தமிழீழத்திற்காக ஆதரவளித்தல்,இந்துத்துவ கொள்கையினை எதிர்தல் போன்றன அவரது முக்கிய கொள்கையாகும்.

படைப்புகள்[தொகு]

சாதீய அடக்குமுறையினை எதிர்த்தல், ஈழ விடுதலை ஆதரவு, இந்துத்துவ கருத்துகளை எதிர்த்தல் போன்ற கொள்கையினை வலியுறுத்தும் விதமாக திருமாவளவன் பல கட்டுரைகள், நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில:

  • அத்துமீறு
  • தமிழர்கள் இந்துக்களா?
  • ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ஈழம்
  • இந்துத்துவத்தினை வேரறுப்போம்

இவற்றில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

நூல்கள்[தொகு]

திரைப்படங்கள்[தொகு]

திருமாவளவன் தமிழ் திரைப்படங்கள் சிலவற்றிலும் முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ளார்.இவரது முதல் திரைப்படம் அன்புத்தோழி ஆகும்.இதில் இவர் கிளர்ச்சி தலைவர் வேடம் ஏற்று நடித்துள்ளார். [1] இப்பாத்திரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மாதிரியாக அமைக்கப்பட்டதாக விமர்சிக்கப்படுகின்றது.[சான்று தேவை] இதுதவிர கலகம்,என்னைப்பார் யோகம் வரும்,மின்சாரம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தொல்._திருமாவளவன்&oldid=1758251" இருந்து மீள்விக்கப்பட்டது