திருவைகுண்டம்
| ஸ்ரீவைகுண்டம் | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தூத்துக்குடி |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | ஆசிஸ்குமார் [3] |
| பேரூராட்சி தலைவர் | காந்தாசிவசுப்பு |
| சட்டமன்றத் தொகுதி | திருவைகுண்டம் |
| மக்கள் தொகை | 16,214 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 17 மீட்டர்கள்s (56 அடி) |
|
குறியீடுகள்
|
|
ஸ்ரீவைகுண்டம் (ஆங்கிலம்:Srivaikuntam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
பொருளடக்கம் |
புவியியல்[தொகு]
இவ்வூரின் அமைவிடம் ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 17 மீட்டர் (55 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,214 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். ஸ்ரீவைகுண்டம் மக்களின் சராசரி கல்வியறிவு 87% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 91%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஸ்ரீவைகுண்டம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இவ்வூரின்சிறப்பு[தொகு]
இங்கு அமைந்துள்ள வைகுண்டநாதர் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் ஒன்றாகும். மூலவர் வைகுண்டபதி. உற்சவர் கள்ளபிரான். தாயார்களின் நாமம் சோரநாத நாயகி மற்றும் வைகுண்டநாத நாயகி ஆகும்.நவதிருப்பதி தலங்களில் முதலாவதான இத்தலம் சூரியனுக்குரியது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் ஸ்ரீவைகுண்டத்தை வைப்புத் தலமாகப் பாடியுள்ளார். இக்கோவிலில் உள்ள திருவேங்கடமுடையான் சந்நிதியில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த அற்புதமான சிற்பங்கள் உள்ளன.
ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள சிவகாமி அம்மை உடனுறை கைலாசநாதர் கோவில் நவகைலாயங்களில் ஒன்றாகும். இந்த லிங்கம் அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவரால் வழிபடப்பட்டது. சனீசுவரர் இறைவனை வழிபட்ட தலமாதலால் நவகைலாயங்களில் இது சனீசுவரத் தலம் ஆகும். சிவன் கோவிலிலும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த சிற்பங்கள் உள்ளன. இறைவனுக்கு எதிரே உள்ள கோபுரம் திருமலை நாயக்கரால் துவங்கப்பட்டுக் கைவிடப்பட்டு அரைகுறையாக நிற்கிறது. இங்குள்ள யாளியின் சிற்பங்கள் குறிப்பிடத் தக்கவை. யாளியின் வாயில் உள்ள உருளும் பந்து நாயக்கர் கால சிற்பங்களின் சிறப்பு அம்சம்.
ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் என்ற மகானின் அவதாரத் தலமும் ஆகும். இவர் தமது ஐந்தாவது வயது வரை வாய் பேசாதிருந்தார். இவரது பெற்றோர் அருகிலுள்ள திருச்செந்தூர்ப் பதியில் தங்கி விரதம் இருந்தனர். முருகன் இவர் முன் தோன்றி ஒரு மலரைக் காட்ட உடன் பூமேவு செங்கமல என்று துவங்கும் கந்தர் கலிவெண்பா பாடினார் என்பது வரலாறு. பின்னர் இவர் மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ், மீனாட்சி அம்மை குறம், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களையும் அருளினார். காசி சென்று அங்கு சைவ மடத்தை நிறுவ விரும்பினார். அதற்கு நிலம் தந்து உதவி செய்ய வேண்டி தில்லி சுல்தானை அணுகினார். அவரிடம் பேச இந்தி மொழி அறிவு தேவைப்பட்டது. கலைவாணியைக் குறித்து பத்துப் பாடல்கள் அடங்கிய சகலகலா வல்லி மாலை என்ற நூலை இயற்ற, கலைவாணியின் அருளால் இந்தி மொழியில் அப்போதே வல்லமை பெற்று சுல்தானிடம் வேண்டிய உதவியைப் பெற்றார் என்பதும் வரலாறு ஆகும்.[சான்று தேவை]
பார்க்க வேண்டிய இடங்கள்[தொகு]
- வைகுண்டநாயகி சோரநாத நாயகி உடனுறை வைகுண்டபதி திருக்கோயில்(உற்சவர் கள்ளபிரான்).
- சிவகாமி அம்மை உடனுறை கைலாச நாதர் கோயில்.
- முதவிலுள் ஹயிரத் மசூதி.
- புனித சந்தியாகப்பர் ஆலயம்.
- நாராயணப் பெருமாள் கோயில்.
ஆதாரங்கள்[தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
- ↑ "Srivaikuntam". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
வெளி இணைப்புகள்[தொகு]
- தலபெருமை தினமலர்
- விக்கிமேப்பியாவில் அமைவிடம்
- [1]'தமிழ்ஹிந்து' தளம் செப்டம்பர் 1, 2008, தமிழ்த் தாத்தா மஹாமஹோபாத்தியாய திரு உ வே சா. எழுதிய கட்டுரை ; ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் சரித்திரச் சுருக்கம், திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடம் வெளியீடு, 1965.
|
|||||||||||||||||||||||