தமிழ்ச் சமணர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமண சமயத்தைச் சார்ந்த தமிழர்கள் தமிழ்ச் சமணர்கள் எனப்படுவர். தமிழ்நாட்டில் 85,000 மக்கள் சமண சமயத்தைப் பின்பற்றுகின்றனர். சமணர்கள் அறம், துறவு, கொல்லாமை, அகிம்சை ஆகிய விழுமியங்களை தமிழ்ச் சமூகத்திடம் வேரூன்ற செய்வதில் முக்கிய பங்கு வகித்தனர். தமிழ் மொழிக்கும் அவர்களின் பங்கு முக்கியமானது.