உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழகத்தில் இசுலாமியர் ஆட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழக இசுலாமிய ஆட்சியாளர்கள்
பாண்டிய சுல்தான்கள்
சையித் இப்ராகிம் கி.பி. 1142 - 1207
செய்யிது சமாலுதீன் கி.பி. 1293 -1306
தில்லி சுல்தானகம்
முகமது பின் துக்ளக் கி.பி. 1323-1335
மதுரை சுல்தான்கள்
ஜமாலுத்தீன் ஹஸன்ஷா
அல்லாவுடீன் உடான்றி
குட்புதீன்
நாசிருதீன்
அடில்ஷா
பஃருடீன் முபாரக் ஷா
அல்லாவுடீன் சிக்கந்தர்ஷா
ஆற்காடு நவாப்புகள்
நவாப் சுல்பிகர் அலி கான் கி.பி. 1692 - 1703
நவாப் தாவுத் கான் கி.பி. 1703 - 1710
நவாப் முகம்மது சதாத்துல்லா கான் I கி.பி. 1710 - 1732
நவாப் தோஸ்த் அலி கான் கி.பி. 1732 - 1740
நவாப் ஸஃப்தார் அலி கான் கி.பி. 1740 - 1742
நவாப் முகம்மது சதாத்துல்லா கான் II கி.பி. 1742 - 1744
நவாப் அன்வர்தீன் முகம்மது கான் கி.பி. 1744 - 1749
நவாப் சந்தா சாகிப் கி.பி. 1749 - 1752
நவாப் முகம்மது அலி கான் வாலாஜா கி.பி. 1749 - 1795
நவாப் உத்தாத் உல் உம்ரா கி.பி. 1795 - 1801
நவாப் ஆசிமுத்துல்லா கி.பி. 1801 - 1819
நவாப் ஆசம் ஜா கி.பி. 1819 - 1825
நவாப் குலாம் முகம்மது கவுஸ் கான் கி.பி. 1825 - 1855
மற்றவர்கள்
முகம்மது யூசுப்கான் கி.பி. 1759 - 1764
திப்பு சுல்தான் கி.பி. 1782- 1799
edit

தமிழகத்தில் இசுலாமியர் ஆட்சி பாண்டிய நாட்டில் கி.பி. 1142 ஆம் ஆண்டு துவங்கியது.[சான்று தேவை] கி.பி எட்டாம் நூற்றாண்டில் சேர மன்னனான சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா என்பவரின் காலத்தில் இசுலாம் மேற்கு மலபார் கடற்கரை பகுதிகளில் அறிமுகமாகியது. பின்னர் இது கன்னட மற்றும் தமிழக பகுதிகளிலும் பரவியது. இதே சமயத்தில் வியாபார நோக்கத்தோடு சில அராபிய, எகிப்து மற்றும் துருக்கிய குழுக்கள் தமிழகத்தின் சோழ மண்டல கடற்கரை பகுதிகளில் முகாமிட்டன. இவர்கள் மூலமாக இசுலாமிய மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள், வர்த்தக மற்றும் அயல்நாட்டு ஏற்றுமதியின் காரணமாக அந்தந்த பகுதியை ஆண்ட மன்னர்களுக்கு நெருக்கமானார்கள். இதன் மூலம் ஆட்சி அதிகாரத்திலும் பங்கு பெற்றனர். இதே நேரத்தில் சில வட இந்திய இசுலாமிய அரசுகளின் எல்லை விரிவாக்க நடவடிக்கைகளின் மூலமாகவும் சில இசுலாமிய அரசுகள் தமிழகத்தில் ஏற்பட்டன. வட இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் தான் இசுலாம் பரவியுள்ளது.

பாண்டிய சுல்தான்கள்

[தொகு]

பாண்டிய மன்னர்களது ஆட்சிக்காலத்தில் அவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்து பின்னர் அவர்களின் கீழ் சிறிய நிலப்பரப்பை ஆளும் உரிமை பெற்றவர்கள் பாண்டிய சுல்தான்கள் ஆவர். இவர்களில் சையித் இப்ராகிம் மற்றும் சுல்தான் சமாலுதீன் இராவுத்தர் ஆகிய இருவர் முக்கியமானவர்கள் ஆவர்.

சையித் இப்ராகிம் கி.பி. 1142–1207

[தொகு]

தென்பாண்டிய நாட்டிற்கு வந்த செய்யிது இபுறாஹீம், மொரோக்கோவில் தோன்றி பின் இந்தியா வந்தார். பாண்டிய மன்னர் சடையவர்மன் குலசேகர பாண்டியன் சார்பாக மற்றுமொரு பாண்டிய மன்னர் விக்கிரமனுடன் போரில் ஈடுபட்டார். இப்போரின் விளைவாக அரசாட்சி சையித் இப்ராகிம் அவர்கள் கையில் வந்தது. தமிழ்நாட்டின் ஒரு பகுதியை அரசாண்ட முதல் முஸ்லிம் மன்னர் (கி.பி. 1195–1207) இவர்களே. கி.பி. 1207-ல் வீரபாண்டியனுடன் நடந்த மற்றுமொரு போரில் காலமானார், இராமநாதபுரம் ஏர்வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

மதினா நகரின் ஒரு பகுதியான யர்புத் என்ற இடத்திலிருந்து அவர்கள் புறப்பட்டு வந்ததால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கும் யர்புத் என்றே பெயர் சூட்டப்பட்டது. இச்சொல் நாளடைவில் ஏர்வாடி என்று மருவி விட்டது. ஆனால் ஏர்பிடி என்பதை மருவி நாளைடைவில் ஏர்வாடி என்று புழக்கத்தில் வந்துள்ளது என்கிற கூற்றும் உள்ளது முகாலயர்கள் கொஞ்சம் வியாபாரம் செய்ய வந்த காலங்களில் இறந்தால் அவர்களை தங்கள் இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியாததால் இங்கு அவர்கள் வழக்கப்படி இறுதி சடங்கு நடத்தியுள்ளனர் அந்த இடங்களை தர்காவாக மாற்றம் செய்யப்பட்டது

சுல்தான் ஜமாலுத்தீன் இராவுத்தர் கி.பி. 1293–1306

[தொகு]

கி.பி. 1286ஆம் ஆண்டில் பாண்டிய நாட்டில் மாறவர்மன் குணசேகர பாண்டியனது அரசவையில் இருபெரும் முஸ்லிம் குதிரை வணிகர்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவரான ஷேக் ஜக்கியுத்தீன், பாண்டியனது தலைமை அமைச்சராக இருந்தார். தளபதியாகவும் 'கறுப்பாறு காவலன்' எனும் கடலாதிக்க அதிபராகவும் இருந்து, ஈழ நாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்று வந்ததனை ஏ.வி. சுப்பிரமணிய ஐயர் தமது 'புராதன தக்காணம்' எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

சுல்தான் ஜமாலுதீன் இராவுத்தர் வளம் சேர்க்கும் வணிகத்தில் மட்டுமல்லாமல் அஞ்சாமை, அறிவு, ஈகை, ஊக்கம் ஆகியவை எஞ் சாதியினருக்கும் அரசியலில் சிறப்புற்று விளங்கினார்.

"தம்மில்பெரியார் ஒழுகுதல், வன்மையில் எல்லாம்தலை"[தெளிவுபடுத்துக]

என்றபோது மறைக்கற்ப, பாண்டியன் குலசேகரன் சுல்தான் ஜமால்தீனிடம் அரசியல் பணிகளைக் உதவிகளை அவாவினார்.[1]

இவருக்குப்பின் இவரது மகன் ஸிராஜுத்தீனும், பின் அவரது பேரன் நிஜாமுத்தீனும் பதவியில் இருந்ததை கிருனசாமி அய்யங்கார் தெரிவிக்கிறார்..இன்னொருவரான ஷேக் ஜமாலுத்தீன், பாண்டிய மன்னனின் அரசியல் தூதுவராக சீன நாட்டுக்குப் பலமுறை சென்று வந்ததையும் வரலாற்றில் காணமுடிகிறதுசெய்யிது ஜமாலுத்தீன் அவர்களின் சகோதரர் தகியுத்தீன் பாண்டிய மன்னரின் முதலமைச்சராக இருந்து ஆட்சிக்கு துணை புரிந்தமைக்காக காயல்பட்டிணம், பிடான், மாலி பிடான் என்ற கடலோர நகரங்கள் அளிக்கப்பட்டதாக அப்துல்லா வசாப் எனும் அராபிய வரலாற்றாளர் குறிப்பிட்டுள்ளார்.[2]

பாண்டிய மன்னர்களின் ஆலோசர்களாக அமைச்சர்களாக குதிரைபடைத் தளபதிகளாக முஸ்லிம்கள் பொறுப்பு வகித்திறுக்கிறார்கள். இந்நாட்டு மன்னர்களின் தூதுவர்களாக பல வெளிநாடுகளுக்கும் சிலர் சென்று வந்துள்ளனர். அரசாங்க வருவாயை பெருக்கும் வணிகர்களாகவும் போர் வீரர்களாகவும் செயலாற்றி வந்தார்கள்.

சுந்தர பாண்டிய தேவன் கி.பி. 1293ல் காலமான பின் செல்வாக்குடன் திகழ்ந்த சுல்தான் ஜமாலுத்தீன் இராவுத்தர் பாண்டிய நாட்டின் மன்னரானார்.இவர் கி.பி.1306 (ஹிஜ்ரி706)ல் காலமானார்.

மதுரை சுல்தான்கள் ஆட்சி கி.பி 1335–1378

[தொகு]
மதுரை சுல்தான்களால் வெளியிடப்பட்ட நாணயம்

கி.பி. 1323-ல் பராக்கிரமதேவபாண்டியன் காலத்தில் உலூகான் படையெடுத்து பாண்டிய நாட்டை கைப்பற்றினார். முகமது பின் துக்ளக்ஆட்சியில் மாபார் என்றழைக்கப்பட்ட தமிழகம் தில்லி சுல்தானியத்தின் 23 மாநிலங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்து சுல்தான் ஜமாலுத்தீன் ஹஸன்ஷா என்பவர் மதுரையில் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.பின்பு இவர் தில்லி சுல்தானாகத்தில் இருந்து பிரிந்து தன்னிச்சையாக மதுரையை சுதந்திர பிரதேசமாக அறிவித்தார். இவரின் வழிவந்தவர்களே மதுரை சுல்தான்கள் ஆவர்.

சுல்தான் ஜமாலுத்தீன் ஹஸன்ஷா கி.பி1335 ல் தனித்து ஆட்சி புரிய துவங்கினார். மதுரை சுல்தானியத்தை உருவாக்கினார். ஒருவர் பின் ஒருவராக ஏழு சுல்தான்கள் ஆட்சி செய்தனர். 1323 முதல் 1378 வரை சுமார் 55 ஆண்டுகள் மதுரைப் பகுதியில் சுல்தான்களின் ஆட்சி நடைபெற்றது.

மதுரை மாநகரில் வைகையாற்றின் வடகரைப்பகுதியில் அமைந்துள்ளது கோரிப்பாளையம். இப்பகுதியில் பழமையான பள்ளிவாசல் ஒன்றும், தர்கா ஒன்றும் ஒரே வளாகத்தில் உள்ளன. இதனைச் சூழ்ந்த முஸ்லிம் குடியிருப்புக்கள் உள்ளன. இங்குள்ள தர்கா கி.பி.14ம் நூற்றாண்டைச் சார்ந்தது. இத்தர்காவில் அடக்கமாயிருப்பவர் கி.பி.14ம் நூற்றாண்டில் மதுரைப்பகுதியை ஆண்ட (கி.பி.1338ல்) சுல்தான் அலாவுதீன் உதௌஜி ஆவர். (1) இவரே தற்போது காஜா சையத் சுல்தான் அலாவுதீன் என்று அழைக்கப்பட்டு வருகின்றார். இவரது மருமகனான குத்புத்தீன் பிரோம் ஷாக்குசும் இதில் அடக்கமாயுள்ளார்.

ஆற்காடு நவாப்புகள் கி.பி1690 முதல் 1801

[தொகு]

ஆற்காடு நவாப்புகள் என அழைக்கப்படுபவர்கள் 1690 முதல் 1801 வரை தென்னிந்திய கன்னட பகுதிகளை ஆண்ட மன்னர்கள் ஆவர். இவர்கள் தலைநகரம் இன்றைய சென்னை அருகில் உள்ள ஆற்காடு ஆகும். தமிழக வரலாற்றில் மிக முக்கியமான இவர்கள் பொதுவாக கன்னட நவாப்புகள் எனவும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆட்சியின் பொழுதுதான் ஆங்கிலேயேர்கள் முகலாய ஆட்சியாளர்கள் உதவியுடன் இந்தியாவில் காலூண்ற ஆரம்பித்தனர்.

ஆற்காடு நவாப்புகள் கலிபா உமர் இப்னு அல் கத்தாப் வழிவந்தவர்கள் ஆவர்.[3] இவர்கள் 1692 ம் ஆண்டு முகலாய சக்கரவர்த்தி அவுரங்கசீப்பால் கன்னட தென்னிந்திய பகுதிகளில் வரிவசூல் செய்ய நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமிக்கப்பட்ட முதல் நவாப் சுல்பிகர் அலி என்பவராவார். இவர் மராத்திய மற்றும் விஜயநகர பேரரசுகளை முறியடித்தார். மேலும் தனது ஆட்சிப்பகுதியை கிருஷ்ணா ஆறு வரை பரப்பினார். பின்பு வந்த நவாப் தோஸ்த் அலி (1732–1740) என்பவர் தனது அரசை 1736-ல் மதுரை வரையில் விரிவுப்டுத்தினார்.

அவுரங்கசீப்பின் இறுதி காலத்தில் ஆற்காட்டை தலைநகராகக் கொண்டு தாவூத்கான் முதல் நவாபாக (1703 முதல் 1710 வரை) இருந்தார். ஸஃதுல்லாகான் (1710 முதல் 1732) வரையிலும் தோஸ்த் அலிகான் 1732 முதல் 1740 வரையிலும் சப்தர் அலிகான் 1740 முதல் 1742 வரையிலும் இரண்டாம் ஸஃதுல்லாகான் 1742 முதல் 1744 வரையிலும் அன்வருத்தீன் 1744 முதல் 1749 வரையிலும் நவாபாகப் பதவி வகித்தனர்.

முகம்மது அலி வாலாஜா

[தொகு]

இதன் பிறகு 1749-ம் ஆண்டு முகம்மது அலி வாலாஜா என்பவர் ஆட்சிக்கு வந்தார். நவாப் அரசர்களில் மிகவும் முக்கியமான இவரது காலமே நவாப்களின் பொற்காலம் ஆகும். இவரது ஆட்சி மிகவும் அமைதியாகவும், சமய சகிப்புதன்மை உள்ளதாகவும் விளங்கியது. இவர் தனது நாட்டின் அனேக பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டதோடு, அங்கு இருந்த அனைத்து கோவில்கள், மசுதிகள் மற்றும் தேவாலயங்களுக்கு நன்கொடைகளையும் அளித்தார். இன்றைய திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் நகரில் உள்ள ஸ்ரீரங்கநாதர் ஆலயமும் அவற்றில் ஒன்றாகும். இவர் 1765-ல் முகலாய பேரரசிற்கு கப்பம் கட்டுவதை மறுத்து, நவாப் ஆட்சியை சுதந்திர அரசாக அறிவித்தார்.

அன்வர்தீன் முகம்மது கான்

[தொகு]

ஆற்காட்டு நவாபுகளின் ஆட்சித்தொடரில் சிறந்த ஆட்சி அமைத்து மக்களின் உணர்வுகளை உரமாய், விழுதாய் எடுத்து பற்பல சிறந்த சேவைகளை செய்த ஜனாப் ‘அன்வருத்தீனின் அமைச்சரவையில் இருந்த“லால்கான்” எனும் அமைச்சர் லால்பேட்டையை நிர்மாணித்தார்.

முகம்மது அலி வாலாஜா தன்னை காத்துக்கொள்ளும் பொருட்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி உடன் நட்புறவை மேற்கொண்டார். தனக்கு கீழ் உள்ள சமஸ்தானங்களை கட்டுப்படுத்த இவர் கம்பனி படைகளை உபயோகப்படுத்தினார். மேலும் இவர் பிரெஞ்சு - ஹைதர் அலி கூட்டு படையை எதிர்க்க ஆங்கிலேயற்கு ஆதரவாக போரிட்டார். இதன் காரணமாக இந்திய சுதந்திர உணர்விற்கு எதிரானவர் என்ற தோற்றத்தை பெற்றதோடு தனது ராஜ்ஜியத்தில் பெரும்பகுதியை கிழக்கிந்தியக் கம்பனியிடம் இழந்தார்.

நவாப்களின் வீழ்ச்சி

[தொகு]

இதன் பிறகு பதிமூன்றாவது நவாபாக ஆட்சிக்கு வந்த குலாம் முகம்மது கவுஸ் காண் ( 1825–1855 ) தனக்கு பிறகு வாரிசு இல்லாமல் இறந்தார். இதனால் அவரது ஆட்சி ஆங்கிலேய அரசின் கீழ் சென்றது. இதன் பிறகு 1867-ல் குலாம் முகம்மது கவுஸ் கானின் சிறிய தந்தை ஆஸிம் ஜா, பிரித்தானிய மகாராணி விக்டோரியாவிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார். அதன்படி நவாப்ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர் பெற்றனர். அதற்கு பகரமாக வரிவசூழில் ஒரு பகுதியை ஓய்வுதியமாக ஆஸிம் ஜா பெற்றார். மேலும் ஆர்காடு இளவரசர் என்றும் அங்கிகரிக்கப்பட்டார்.

முகமது யூசுப் கான் கி.பி. 1759–1764

[தொகு]

ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து தனது தனித்திறமையினால் மதுரையின் மன்னராக ஆனவர் வீரர் முகமது யூசுப் கான் (கான் சாஹிப்)என்றழைக்கப்பட்ட மருதநாயகம் பிள்ளை. ஆங்கில அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இவர் மதுரை மாவட்டத்தில் பண்ணையூரில் 1725 ஆம் ஆண்டில் ஒர் இந்துவாகப்பிறந்து பின்னர் ஒர் இஸ்லாமியராக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு போர்த்துக்கீசிய கிருத்துவ அம்மையாரை மணம் செய்து கொண்டார்.ஆர்க்காட்டு படைகளில் படைவீரராகவும் பிற்காலத்தில் கிழக்கிந்திய படைகளுக்கு தலைமை தாங்கினார்.ஆங்கிலேயரும் ஆர்க்காட்டு நவாப்புகளும்மருதநாயகத்தினை தமது எதிரிகளான தமிழகத்தினைச்சேர்ந்த பாளையக்காரர்களுக்கு எதிராக போரில் ஈடுபடச்செய்தனர். பிற்காலங்களில் மதுரை நாயக்கர்களின் ஆட்சி முடிவடையும் காலகட்டத்தில் மதுரையை ஆளும் அதிகாரத்தினை ஆங்கிலேயர் இவருக்கு அளித்தனர்.

மதுரையை தலைநகரமாகக் கொண்டு மதுரை திருநெல்வேலி பகுதிகளை 1759 முதல் 1764 வரை ஆட்சி செய்தார். பின்னர் ஆங்கிலேயர்களுக்கும் ஆர்க்காட்டு நவாப்புகளுக்கும் இடையே நடந்த பிரிவினை காரணமாக மருதநாயகத்தின் நம்பிக்கைக்குரியவர்களான மூவரால் நயவஞ்சகமான முறையில் காட்டிக்கொடுக்கப்பட்டு பின்னர் 1764 ஆம் ஆண்டில் மதுரையில் தூக்கிலிடப்பட்டார். சில துரோகிகளின் சூழ்ச்சியினால் சிறைப்பிடிக்கப்பட்டு ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார்.

திப்புசுல்தான் கி.பி. 1782–1799

[தொகு]

இருநூறு ஆண்டுகள் செம்மறி ஆடாய் வாழ்வதைவிட இரண்டு நாள் சீறும் புலியாய் வாழ்வதே சாலச்சிறந்தது என்று சூளுரைத்த சுத்தவீரன் திப்புசுல்தான் கி.பி. 18 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துங்கபத்திரா நதிக்கரையிலிருந்து காவேரி வரை அதாவது கிருஷ்ணா நதியிலிருந்து திண்டுக்கல் வரை தெற்கு வடக்காக நானூறு மைல் தூரமும் மலபாரிலிருந்து கிழக்கு தொடர்ச்சிமலை வரை மேற்கு கிழக்காக முன்னூறு மைல் தூரம் கொண்ட பரந்த பூமியை 17 ஆண்டுகள் நல்லாட்சி செய்த தீரர் திப்புசுல்தான்.

திப்பு கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப்ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப்படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிபெற்றார். கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப்படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.

1782 டிசம்பர் 26 ம் தேதி (ஹிஜ்ரி 1197 முஹர்ரம் 20 ம் தேதி ) சனிக்கிழமை தனது 32 வது வயதில் நவாப் திப்பு சுல்தான் பஹதூர் என்று திப்புசுல்தான் மகுடம் சூட்டிக் கொண்டார் மகுடம் சூட்டியதும் புதிய தமது ராஜ்ஜியத்திற்கு திப்புசுல்தான் “சல்தனத்தே குதாதாத்” (இறையாட்சி) என பெயரிட்டார். புலிச்சின்னம் கொடியிலும், கீழே அல்லாஹ்வே ஆண்டவன் என்ற வாசகமும் பொறிக்கப்பட்டன.

கி.பி.1767 முதல் மகத்தான வெற்றிகளை பெற்றுவந்த திப்பு சுல்தான் கி.பி.1799இல் ஸ்ரீரங்கபட்டினத்தில் நடந்த நான்காவது மைசூர் போரில் நயவஞ்சகத்தால் வீரமரணமடைந்தார்.

இவற்றையும் பாக்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. முஸ்லிம்களும் தமிழகமும் புத்தகம் Muslīmkaḷum Tamil̲akamum book in Google. முஸ்லிம்களும் தமிழகமும், எம்.எஸ் கமால் 1990 பக்கம்.73
  2. குலசேகர பாண்டியனின் அராபிய முதலமைச்சர்
  3. சாரா, ed. (23 அகத்து 2017). அமீர் மஹால் - சென்னையின் மையத்தில் வீற்றிருக்கும் ராஜ தர்பார். விகடன் இதழ். ஆற்காடு நவாப்கள், கலிபா உமர் இப்னு அல் கத்தாப் வழிவந்தவர்கள் {{cite book}}: Check date values in: |year= (help)