குடைமிளகாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குடைமிளகாய்
Bell pepper
சிவப்பு, மஞ்சள், பச்சை குடைமிளகாய்கள்
சிவப்பு, மஞ்சள், பச்சை குடைமிளகாய்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
நிலைத்திணை
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) Eudicots
(தரப்படுத்தப்படாத) Asterids
வரிசை: Solanales
குடும்பம்: சோலானேசியே
Solanaceae

பேரினம்: காப்சிக்கம்
Capsicum

இனம்: C. annuum
இருசொற்பெயர்
Capsicum annuum
லின்னேயசு
Chilli05.jpg
காரம்: None (SR:0)


குடைமிளகாய் என்பது பயிரிடப்பட்டு விற்பனையாகும் காய்கறிகளில் ஒன்று. குடைமிளகாய்ச் செடியின் செடியியல் பெயர் காப்சிக்கம் ஆன்னம் (Capsicum annuum). பல நிறங்களில் காய்க்கும் செடி வகைகளை உருவாக்கிப் பயிரிடுகிறார்கள். குறிப்பாக சிவப்பு, மஞ்சள், பச்சை, செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிறங்கள் பரவலாக காணப்படுகின்றன. குடைமிளகாய்ச் செடி மெக்சிக்கோ, நடு அமெரிக்கா தென் அமெரிக்காவின் வடபகுதி ஆகிய இடங்களில் இயற்கையில் விளைவது. குடைமிளகாய்ச் செடியின் விதைகளைப் பின்னர் 1493 இல் எசுப்பானியாவுக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் பரவியது.சேர்ந்தது. உலகில் அதிகமாக குடைமிளகாய் பயிரிடும் நாடுகளின் இன்றும் மெக்சிக்கோ முன்னணி நாடுகளுள் ஒன்றாக உள்ளது.

சொல்லாட்சி[தொகு]

காப்சிக்கம் ஆன்னம் என்னும் செடியை அமெரிக்கரகள் பெல் பெப்பர் ("bell pepper") பெயரிட்டு வழங்குகிறார்கள். இதில் உள்ள பெப்பர் (மிளகு) பொருத்தமில்லாத பெயர். கிறித்தோபர் கொலம்பசு இச்செடியை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்திய பொழுது பொருத்தமில்லாத மிளகு என்னும் பொருள் கொண்ட எசுப்பானியச் சொல்லாகிய பிமியெண்ட்டோ (pimiento) என்பதால் அறிமுகப்படுத்தினார். அக்காலத்தில் குடைமிளகாய்க்குத் தொடர்பில்லாத கறுப்பு மிளகு (பைப்பர் நைகுரம், Piper nigrum) மிகவும் விலைமதிப்பு மிக்கதாய் இருந்தது.

குடைமிளகாய், பச்சைக் காயாக
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 20 kcal   80 kJ
மாப்பொருள்     4.64 g
- சர்க்கரை  2.40 g
- நார்ப்பொருள்  1.7 g  
கொழுப்பு 0.17 g
புரதம் 0.86 g
தயமின்  0.057 mg   4%
ரிபோஃபிளாவின்  0.028 mg   2%
நியாசின்  0.480 mg   3%
பான்டோதெனிக் அமிலம்  0.099 mg  2%
உயிர்ச்சத்து பி6  0.224 mg 17%
இலைக்காடி (உயிர்ச்சத்து பி9)  10 μg  3%
உயிர்ச்சத்து சி  80.4 mg 134%
கால்சியம்  10 mg 1%
இரும்பு  0.34 mg 3%
மக்னீசியம்  10 mg 3% 
பாசுபரசு  20 mg 3%
பொட்டாசியம்  175 mg   4%
துத்தநாகம்  0.13 mg 1%
Percentages are relative to US
recommendations for adults.
Source: USDA Nutrient database

படக் காட்சி வரிசை[தொகு]

மேற்கோள்கள் உசாத்துணை[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=குடைமிளகாய்&oldid=1664609" இருந்து மீள்விக்கப்பட்டது