உபைதுல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உபைதுல்லாஹ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எஸ்.ஓ.கே. உபைதுல்லா
S.O.K Ubaidulla
乌拜杜拉
தமிழ் ஆர்வலர்
தலைவர், உபைதி வாரியம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 ஜூன் 1918
இந்தியா ராஜகிரி, தஞ்சாவூர், இந்தியா
இறப்புசனவரி 22, 2009(2009-01-22) (அகவை 90)
மலேசியா கோலாலம்பூர், மலேசியா
அரசியல் கட்சிமலேசியா மலேசிய இந்திய காங்கிரஸ் (MIC)
துணைவர்புவான் ஸ்ரீ மெருனிசா மொகாய்தீன்
பிள்ளைகள்ஹிசாமுடின்,[1] ஹமிமுடின்
முன்னாள் கல்லூரிசென்னை அரசினர் முகம்மதியா கல்லூரி
ஜமாலியா அரபிக் கல்லூரி
வேலைமலேசிய இந்திய காங்கிரஸ் நிறுவனர்
நாடாளுமன்ற மக்களவை துணைச் சபாநாயகர்
இணையத்தளம்Universal Multi Media Integrated Educational Services

டான் ஸ்ரீ டத்தோ டாக்டர் எஸ்.ஓ.கே. உபைதுல்லா காதிர் பாஷா D.P.M.S. J.M.N (ஆங்கில மொழி: S.O.K Ubaidulla Kadir Basha) (பிறப்பு: ஜூன் 18, 1918 - இறப்பு: ஜனவரி 21, 2009) மலேசிய இந்திய காங்கிரசின் (ம.இ.கா) நிறுவனர்களில் ஒருவர்.[2] மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவை துணைத் தலைவராகப் பதவி வகித்த முதல் மலேசிய இந்தியர். மலேசியாவில் முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, ஆறாம் உலகத் தமிழ் மாநாடுகள் சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த தமிழ் ஆர்வலர். எஸ்.ஓ.கே., என்று மலேசியர்களால் அன்பாக அழைக்கப்பட்டவர்.

மலேசியாவின் மிக உயரிய மால் ஹிஜ்ரா (மலாய்: Tokoh Maal Hijrah) விருதைப் பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமை இவரைச் சாரும். நேதாஜியின் ஆசாத் இந்து இயக்கத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு, அதன் இதழ்களின் ஆசிரியராகவும், வானொலி விமர்சகராகவும் பணியாற்றியவர். இந்திய தேசிய ராணுவத்தில் பங்கு பெற்றதற்காகச் சிறைவாசம் அனுபவித்தவர்.

சாதி சமய வேறுபாடுகள் இல்லாமல் ஏழை எளியவர்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் நிதி உதவி வழங்குவதற்காக, ஒன்றரை கோடி ரிங்கிட் மூலதனத்தில் உபைதி வாரியம் (ஆங்கில மொழி: Ubaidi Foundation)[3] எனும் அற நிறுவனத்தை நிறுவிய டான் ஸ்ரீ உபைதுல்லா, மலேசிய இந்திய முஸ்லீம் சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவராகத் திகழ்ந்தவர்.

அவர் நினைவாக, மலேசியாவில் தபால் தலை வெளியிடப்பட்டிருக்கிறது.[4] மலேசிய இந்தியர்களின் மூத்த அரசியல், சமூகத் தலைவர்களில் மிகவும் மரியாதைக்குரியவர்களில் ஒருவராக இன்றும் அவர் மதிக்கப்படுகின்றார்.[5]

வரலாறு[தொகு]

சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஆற்றிய பணிகளை நினைவு கூரும் வகையில் 2010இல் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் காதர் பாட்சா - கதிஜா பீவி தம்பதியர்களுக்கு மகனாகப் பிறந்தார். சென்னை அரசினர் முகம்மதியா கல்லூரியிலும், பின்னர் ஜமாலியா அரபிக் கல்லூரியிலும் உயர்க் கல்வி பயின்றார். 1930இல், அதாவது தம்முடைய 12வது வயதில், இந்தியாவிலிருந்து மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் நகருக்கு பகுதி நேர வேலை தேடி வந்தார். அங்குள்ள ஓர் ஒட்டுக்கடையில் சாதாரண விற்பனையாளர் வேலையில் சேர்ந்தார்.

சில மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் தஞ்சாவூருக்குத் திரும்பி தம் உயர்க்கல்வியைத் தொடர்ந்தார். 1937இல் தம் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு மலாயா திரும்பினார். சிரம்பானில் உள்ள இவருடைய உறவினரின் வணிக நிறுவனத்தில் தொடக்கத்தில் பணியாற்றினார். தோள்பைகள், துணிமணிகளை விற்கும் பணியில் ஈடுபட்டார். சிக்கனமான வாழ்க்கை, எளிமையான நடைமுறை; அவை இரண்டுமே அவருடைய சிறப்பு குணநலன்களாக அமைந்தன.

சிரம்பான் வர்த்தமானி[தொகு]

பின்னர், சிரம்பான் வர்த்தமானி என்ற தமிழ் வார இதழுக்கும், சிரம்பான் நியூஸ் எனும் ஆங்கில வார தாளிகைக்கும் ஆசிரியராகப் பனியாற்றினார். தமிழகத்தில் பி.ஏ. பட்டப் படிப்பு வரை படித்திருந்த இவருடைய எழுத்தாற்றல், அந்த ஏடுகளின் மூலம் தெரிய வந்தது. முன்னேற்றப் பாதையை நோக்கி நடைபோட இவருடைய திறமையும் விடா முயற்சியும் கைகொடுத்தன.

தமிழ், ஆங்கிலம், மலாய், உருது, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளைப் பேசத் தெரிந்த டான் ஸ்ரீ உபைதுல்லா, அவ்வப்போது பத்திரிகைகளுக்கு கட்டுரைகளை எழுதி வந்தார். அருமையான மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார்.

நேதாஜியின் ஆசாத் இந்து இயக்கம்[தொகு]

சென்னையில் கல்லூரி மாணவராக இருந்த போதே அவருக்கு அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டது. கும்பகோணத்தில் அகில இந்திய முஸ்லிம் லீக் மாநாடு நடத்திய அனுபவங்கள் அவருக்கு உண்டு. மலாயா சென்ற போதும் இந்திய நாட்டுப்பற்று அவரை விட்டு நீங்கவில்லை. மலாயா, இந்தியா ஆகிய இருநாடுகளின் விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டார்.

நேதாஜியின் ஆசாத் இந்து இயக்கத்தில் மிகவும் ஆர்வம் காட்டினார். ஆசாத் இந்து இயக்கம் வெளியிட்ட இதழ்களின் ஆசிரியராகவும், வானொலி விமர்சகராகவும் ஆர்வத்தோடு பணியாற்றினார். இந்திய தேசிய ராணுவத்தில் பங்கு பெற்றதற்காகச் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

ஆசாத் ஹிந்த் சர்க்கார்[தொகு]

அரசியல், சமூகப் பணிகளில் முனைப்பாக ஈடுபட்ட உபைதுல்லா, நேதாஜி சுபாஷ் சந்திரபோசுடன் நெருங்கிப் பழகியவர். 1940களின் தொடக்கத்தில், மலாயாவில், ஆசாத் ஹிந்த் சர்க்கார் அமைத்த போதும், இந்திய விடுதலை ராணுவப் படை தொடக்கப்பட்ட போதும், நேதாஜியுடன் நெருக்கமாக இருந்தார். அந்தக் காலகட்டங்களில் மலாயா, இந்தியா சுதந்திரத்திற்காகத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

பின்னர், கோலாலம்பூருக்கு இடம் பெயர்ந்த அவர், சிறிய அளவில் விமான பயண ஏற்பாட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறினார். விமானம், கப்பல் சரக்குகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தைத் தொடங்கி அதை நீண்ட காலம் நடத்தி, நாடு போற்றும் செல்வந்தரானார்.

பொதுச் சேவைகள்[தொகு]

1938ஆம் ஆண்டு முதல் இவருடைய பொதுப்பணிகள் தொடங்கின. 1940களில் மலேசிய இந்திய காங்கிரசின் (ம.இ.கா) நிறுவப்படுவதற்கு மூலகர்த்தாக்களாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். பின்னர், அக்கட்சியின் துணைத் தலைவரானார். 1948ல் மலாயா பெடரல் சட்டசபை உறுப்பினர் ஆனார். தொடர்ந்து ம.இ.கா.வில், பல முக்கிய பதவிகளையும் வகித்தார்.

அந்தக் கட்சியின் பல மாநாடுகளில், இவர் அவைத் தலைவராகப் பொறுப்பேற்று இருந்தார். கல்வித் திறனும், அரசியல் செல்வாக்கும் அதிகமாக இருந்ததால், 1971 முதல் 1980 வரை, அவர் நாடாளுமன்ற மேலவையின் துணைத் தலைவராகப் பதவி வகித்தார். அது மட்டுமின்றி, நாடாளுமன்றத்தின் செனட்டராகவும், நாடாளுமன்றக் குழுக்களின் தலைவராகவும் இருந்து செயற்கரிய செயல்களை செய்துள்ளார்.

மால் ஹிஜ்ரா விருது[தொகு]

கண்ணியத்திற்கும் சிறப்பிற்கும் உரிய மால் ஹிஜ்ரா எனும் விருது 1989ஆம் ஆண்டில் பேரரசரால் டான் ஸ்ரீ உபைதுல்லாவிற்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் மலேசிய இந்திய முஸ்லிம் இவர்தான். அந்த விருதுடன் 30 ஆயிரம் மலேசிய ரிங்கிட்டும் இவருக்கு வழங்கப்பட்டது. அந்தத் தொகையை அப்படியே இஸ்லாமிய சமயப் பணிகளுக்காக வழங்கிவிட்டார்.[6]

மலேசியாவின் முந்தைய பிரதமர்களான துங்கு அப்துல் ரகுமான், துன் அப்துல் ரசாக், துன் உசேன் ஓன், மகாதீர் பின் முகமது ஆகியோரின் மதிப்பிற்கு உரியவர். மலேசிய இந்தியர் காங்கிரசின் அன்றைய தலைவர்களான, அமைச்சர்கள் வீ. தி. சம்பந்தன், வி. மாணிக்கவாசகம் ஆகியோருடன் கட்சி, சமூக வளர்ச்சிக்காகப் பாடுபட்டுள்ளார். பல உயர் அரசாங்க விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். 1967இல் டத்தோ விருது வழங்கப்பட்டது. 1973இல் மலேசியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான டான் ஸ்ரீ விருதும் இவருக்கு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

உபைதி அறக்கட்டளை[தொகு]

சாதி சமய வேறுபாடின்றி, ஏழை எளியவர்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் நிதி உதவி வழங்குவதற்கு மலேசியாவில் உபைதி அறக்கட்டளையை நிறுவிய டான் ஸ்ரீ உபைதுல்லா அதன் மூலம் பல பொதுப் பணிகளுக்கு நல்லாதரவு வழங்கி வந்தார். டான் ஸ்ரீ உபைதுல்லா வழங்கிய 15 மில்லியன் ரிங்கிட் (ஒன்றரை கோடி) நன்கொடையோடு 1991இல் உபைதி அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

அந்த அறக்கட்டளையை, அப்போதைய பிரதமர் துன் மகாதீர் பின் முகமது தொடக்கி வைத்தார். மலேசிய இந்திய முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக, பெர்கிம் (மலாய்: Perkim) எனும் ஓர் அமைப்பை உருவாக்கினார். 1969 முதல் பத்து ஆண்டுகளுக்கு, அதன் தலைவராகவும் இருந்தார்.

உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள்[தொகு]

மலேசிய மக்களின் நலத்திற்கும், வளத்திற்கும் நீண்ட காலம் அர்ப்பணிப்புகள் செய்து வந்துள்ளார். அவர் பிறந்த ஊரில் உபைதுல்லா அறக்கட்டளையை நிறுவி மேல்நிலைப்பள்ளிகள் சிறப்பாக நடைபெற உதவிகள் செய்துள்ளார். இவர் மலேசியத் தமிழ் நாளிதழ்களில் எழுதி வந்த "நமது நாடு நம் மக்கள்" என்ற தொடர்க் கட்டுரைகள், இவரின் மலேசிய நாட்டு பற்றுக்கு நல்ல சான்றுகளாகும்.

மலேசியாவில் முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஏப்ரல் 1966இல் கோலாலம்பூர் மாநகரில் நடைபெற்றது. இது ஒரு பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஆகும். இந்த மாநாட்டை தனிநாயகம் அடிகளாருடன், டான் ஸ்ரீ உபைதுல்லா முன்னின்று நடத்தினார். இந்த மாநாட்டில் தமிழியல் ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.

தவிர, ஆறாம் உலகத் தமிழ் மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கும் உறுதுணையாக இருந்த டான் ஸ்ரீ உபைதுல்லா, நல்ல ஒரு தமிழ் ஆர்வலர். இவர் தாய் தமிழை என்றும் மறக்கவில்லை. இவர் நாவன்மை மிக்க நாவலர், ஆற்றல் மிக்க எழுத்தாளர், தமிழ்ப்பண்ணை என்ற அமைப்பின் நிறுவனத்தின் தலைவரும் ஆவார்.

சின்ன ராவுத்தர் உஸ்மான் காதர் பாஷா[தொகு]

சின்ன ராவுத்தர் உஸ்மான் காதர் பாஷா உபைதுல்லா என்ற அவருடைய பாட்டனார், தந்தையார் பெயர்களுடன் கூடிய குடும்பப் பெயரின் சுருக்கமே, எஸ்.ஓ.கே. எனும் சொற்களாகும். இவரிடம் எஸ் என்பதும் இல்லை, ஓ.கே. என்பதும் இல்லை என்று சிலர் சிலேடையாகச் சொல்வார்கள். எடுத்த எடுப்பிலேயே பதில் கூறாமல், சிந்தித்து முடிவு கூறும் அவருடைய பக்குவமே அந்தச் சிலேடைக்கு காரணம் ஆகும்.

மலேசியாவின் மூத்தப் பத்திரிக்கையாளரும், மலேசியத் தொலைக்காட்சி செய்திப் பிரிவின் பொறுப்பாசிரியராக இருந்தவருமான எம். துரைராஜ், டான் ஸ்ரீ உபைதுல்லாவைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்[தொகு]

கோலாலம்பூரில் உள்ள இந்திய முஸ்லிம் பள்ளிவாசலின் தலைவராக நீண்டகாலம் சேவையாற்றிய இவர், அதைப் புதுப்பித்து விரிவுப்படுத்தினார். மலேசிய இந்திய வர்த்தக சம்மேளனத்திலும் 47 ஆண்டுகள் தலைமைப் பொறுப்புகளை வகித்தார் 'பேங்க் பூமி புத்ரா' எனும் பூமிபுத்ரா வங்கியிலும், தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்திலும் இயக்குனராகச் சேவையாற்றியுள்ளார்.

மலேசியாவுக்கு வரும் தமிழகக் கலைஞர்களை வரவேற்று உபசரித்து வரவேற்பதில் முன்னிலை வகித்து வந்ததாக, பல தென்னிந்திய நடிகர்கள் புகழாரம் செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

லட்டு பிரியர்[தொகு]

டான் ஸ்ரீ உபைதுல்லா ஒரு லட்டு பிரியர். எங்கேயாவது லட்டைப் பார்த்து விட்டால், ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளாமல் இருக்க மாட்டார். இனிப்பு நிறைய சாப்பிடக் கூடாதுதான்... என்ன செய்வது... என்று சொல்லித் தலையை ஆட்டிக் கொள்வார். அவர் சாதித்தவை அதிகம் என்பதால், சகாப்த மனிதராக மலேசியாவில் இன்றும் போற்றப்படுகிறார். 2009இல், தம்முடைய 93வது வயதில், இந்த தபால்தலை நாயகன் இறைவனடி சேர்ந்தார்.

மலேசிய நாட்டிற்கும் மலேசிய சமூகத்திற்கும், இவர் ஆற்றிய பணிகளை நினைவு படுத்தும் வகையில், 2010 ஆம் ஆண்டு மலேசிய அரசாங்கம் அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பு செய்தது. கோலாலம்பூரில் நடைபெற்ற அந்தத் தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில், டான் ஸ்ரீ உபைதுல்லாவின் துணைவியார் புவான் ஸ்ரீ மெருனிசா மொகாய்தீனும், அவருடைய இரு புதல்வர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

விருதுகள்[தொகு]

வெளிநாட்டுப் பயணங்கள்[தொகு]

  • Commonwealth Parliamentary Delegation - Delhi, Karachi and Colombo1957
  • Korea Study tour - (Leader of Delegation) 1961
  • Searathum Nabi conference, Karachi 1962
  • Malaysian Employers' Representative to International Labour Conference, Geneva 1963, 1964, 1965
  • Malaysian consolidatory Concultativa Council, Taiwan
  • Malaysian government Trade Delegatin, Soviet Union
  • Member to I.P.U. Venezula, 1989

பதவிகள்[தொகு]

  • பெர்கிம் நிறுவனத் தலைவர்.1961-1965
  • தமிழ்ப்பண்ணை நிறுவனத் தலைவர் 1951-1958
  • தென்னிந்திய பள்ளிவாசல் நிர்மான நிர்வாகக் குழு.1949-1970
  • பேங்க் பூமிபுத்ரா மலேசியா இயக்குநர் வாரியம்
  • தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம் இயக்குனர்
  • யூனிட் டிரஸ்ட் (MICT PG) 1976 முதல் 1993 வரை.
  • NASA கூட்டுறவு சங்கம் 1976-1980
  • Port Operation Committee, Selangor
  • State Appeal committee for the Lady Templer T.B. Hospital
  • Blind Welfare Committee
  • Indian Welfare Committee
  • Batu Road Fire Relief Committee
  • Small Estates (Distribution) Malay Participation in the Road Transport Industry
  • Founding President of Associated Indian Chambers of Commerce (All Malaysian Indian Commercial Body)1950 - 1982.
  • Chairman, Malayan Employers Consultative Association. 1963 -1982.
  • Malayan council of Employers Organisaton. 1966 -1978.
  • United Chamber of Commerce.
  • Associated Chinese Chamber of Commerce,
  • Associated Malay Chamber of Commerce (European),
  • Associated Indian Chamber of Commerce.
  • National chamber of Commerce. (N.C.C.)
  • Pertubuhan Kebajikan Islam Se-Malaya (PERKIM) 1961 - 1965.
  • The Federal Legislative Council 1948 -1959
  • The Senate 1959 -1980
  • Legislatures and Parliament of Malaysia 1948 - 1980
  • Deputy President of Senate.
  • Port Swettenham, Port Authority
  • Federal Industrial Development Authority.
  • R.I.D.A. Authority 1951
  • R.I.D.A. Central Executive Council 1951
  • R.I.D.A. Selangor State. 1953 -1955.
  • Muslim College Council, Klang
  • Dewan Bahasa dan Pustaka
  • The Court University of Malaya
  • St. John's Ambulance Central Council
  • Red Cross Society Central Council
  • Malaysia consolidatory Consultative Council
  • Trustee Yayasan Ubaidi.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உபைதுல்லா&oldid=3622852" இலிருந்து மீள்விக்கப்பட்டது