உள்ளடக்கத்துக்குச் செல்

முதுமொழிக்காஞ்சி (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முதுமொழிக்காஞ்சி, நூல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

மதுரை கூடலூர் கிழார் என்பவர் இயற்றிய நூல் முதுமொழிக்காஞ்சி. முதுமொழி என்பது பழமொழிஎன்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. 'மூதுரை, முதுசொல்' என்பனவும் இப் பொருள் தருவன. நிலையாமையை உணர்த்தும் உலகியல் அனுபவம் உணர்த்துதலால் இப்பெயர் பெற்றது.[1] காஞ்சி என்பது காஞ்சித் திணையில் தொல்காப்பியம் காட்டும் ஒரு துறை. அது “கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முறைமை” என்னும் துறை என்று விளக்கப்பட்டுள்ளது. [2] இந்நூல் இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய மருவியகாலமான ஐந்தாம் நூற்றாண்டு என்பர். பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகம் பத்து கொண்டது இந்த நூல். அதாவது 100 பாடல்கள் இதில் உள்ளன. ஒவ்வொரு பதிகமும் "ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்" என்னும் தரவு அடியோடு தொடங்குகிறது. அடுத்து ஓரடிப் பாடல்கள் பத்து ஒவ்வொன்றிலும் தாழிசை போல அடுக்கி வருகின்றன. 18 நூல்களின் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் தமிழ் நூல் தொகுதியில் மிகச் சிறியது இது. பத்து அடிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனிப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இப் பத்துப் பெயர்களும் வருமாறு:

  1. சிறந்த பத்து
  2. அறிவுப் பத்து
  3. பழியாப் பத்து
  4. துவ்வாப் பத்து
  5. அல்ல பத்து
  6. இல்லைப் பத்து
  7. பொய்ப் பத்து
  8. எளிய பத்து
  9. நல்கூர்ந்த பத்து
  10. தண்டாப் பத்து

உரை நூல்கள்

[தொகு]


இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. மது.ச. விமலானந்தம் (2020). தமிழ் இலக்கிய வரலாறு. தி-நகர், சென்னை.: முல்லை நிலையம். p. பக்க எண். 79. {{cite book}}: Unknown parameter |மொழி-= ignored (help)
  2. தொல்காப்பியம் 3-76 புறத்திணையியல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதுமொழிக்காஞ்சி_(நூல்)&oldid=4085460" இலிருந்து மீள்விக்கப்பட்டது