பேறுகால மிகை வாந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேறுகால மிகை வாந்தி
சிறப்புமகப்பேறியல்
அறிகுறிகள்குமட்டல், வாந்தி, எடை இழப்பு, நீர்ப்போக்கு[1]
கால அளவுசில நேரங்களில் மேம்பட்டாலும் பேறுகாலம் வரை நீடிக்க வாய்ப்புண்டு[2]
காரணங்கள்தெரியவில்லை.[3]
சூழிடர் காரணிகள்முதல் கர்ப்பம், பலமுறை கருத்தரித்தல், உடற்பருமன் குடும்பத்தில் யாருக்கேனும் மிகை வாந்தி இருத்தல், உண்ணுதல் கோளாறு[3][4]
நோயறிதல்அறிகுறிகளை வைத்து நோயறியப்படுகிறது.[3]
ஒத்த நிலைமைகள்சிறுநீர்ப்பாதைத் தொற்று, அதிதைராய்டியம்[5]
சிகிச்சைதிரவ,மிதமான உணவு, நரம்புவழி உணவு[2]
மருந்துபைரிடாக்சின், மெட்டோகுளோபிரமைடு[5]
நிகழும் வீதம்கருவுற்ற பெண்களில் 1% [6]

பேறுகால மிகை வாந்தி என்பது ஒரு பெண்ணுக்குக் கருவுற்ற காலத்தில் ஏற்படும் சிக்கலாகும். இது கடுமையான குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் நீரிழப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.[1] இதனால் சில சமயங்களில் இலேசான மயக்கம் வருதலும் ஏற்படலாம். இது மசக்கை எனப்படும் அசாதாரண நிலையை விடக் கடுமையானதாகக் கருதப்படுகிறது. கர்ப்பத்தின் 20 வது வாரத்திற்குப் பிறகு அறிகுறிகள் பெரும்பாலும் மேம்படும், ஆனால் முழு கர்ப்ப காலத்திலும் இந்நிலை நீடிக்கும் வய்ப்புகள் உண்டு.[2]

பேறுகால மிகை வாந்திக்கான சரியான காரணங்கள் தெரியவில்லை. ஆபத்து காரணிகளில் அப்பெண்ணுக்கு இது முதல் கர்ப்பமாக இருத்தல், அடுத்தடுத்து பல கர்ப்பம் ஏற்படல், உடல் பருமன், மிகை வாந்தி ஏற்கவனவே இருத்தல் அல்லது குடும்பத்தாருக்கு இருந்த்தல், கருவில் ஏற்படும் கட்டிகள் மற்றும் உண்ணுதல் கோளாறுகள் ஆகியவை அடங்கும்.[4] கண்டறியப்பட்ட அறிகுறிகள் மற்றும் அடையாளங்களின் அடிப்படையில் நோயறிதல் பொதுவாகச் செய்யப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாக ஒரு நாளைக்கு மூன்று முறைகளுக்கு மேல் வாந்தியெடுத்தலானது பேறுகால மிகை வாந்தி என வரையறுக்கப்பட்டுள்ளது, மேலும் 5% அல்லது மூன்று கிலோகிராம் எடை இழப்பு ஏற்பட்டாலும் சிறுநீரில் கீட்டோன்கள் தென்பட்டாலும் இந்த மிகை வந்திக்கான சாத்தியமுள்ளதாகக் கண்டறியலாம்.[3] அறிகுறிகளின் பிற சாத்தியமான காரணங்கள் விலக்கப்பட வேண்டும், இதில் சிறுநீர் பாதை நோய்த்தொற்று மற்றும் அதிதைராய்டியம் ஆகியவை அடங்கும்.[5]

சிகிச்சையில் மித உணவு, திரவ உனவு ஆகியவை அடங்கும்.[2] பரிந்துரைகளில் எலக்ட்ரோலைட்-மாற்று பானங்கள், தியாமின் மற்றும் அதிக புரதம் அடங்கிய உணவு ஆகியவை இருக்கலாம். சில பெண்களுக்கு நரம்புவழிச் செலுத்தப்படும் திரவங்கள் தேவைப்படுகின்றன. மருந்துகளைப் பொறுத்தவரை, பைரிடாக்சின் அல்லது மெட்டோகுளோபிரமைடு பரிந்துரைக்கப்படுகிறது. இவை பயனுள்ளதாக இல்லாவிட்டால் புரோக்ளோர்பெரசைன், டைமென்ஹைட்ரினேட் அல்லது ஒன்டான்செட்ரான் ஆகியவற்றைப் பயன்படுத்தப்படலாம். தேவையெனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம். உளவியல் சிகிச்சை ஓரளவு இதன் விளைவுகளை மேம்படுத்தக்கூடும். அக்கு பிரசர் சிகிச்சை இதைப் பொறுத்தவரை பயனற்றதாக இருக்கிறது.

கர்ப்ப காலத்தில் வாந்தியெடுப்பது கிமு 2,000 க்கு முன்பே விவரிக்கப்பட்டுள்ளது என்றாலும், பேறுகால மிகை வாந்திக்கான முதல் தெளிவான மருத்துவ விளக்கம் அன்டாயின் டுபோயிஸ் என்பவரால் 1852 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது.[7] பேறுகால மிகை வாந்தி கர்ப்பிணிப் பெண்களில் 0.3–2.0% பாதிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[6] கர்ப்பகால மரணத்திற்கு இது ஒரு பொதுவான காரணம் என்று முன்னர் அறியப்பட்டிருந்தாலும், தற்பொழுது இதற்குச் சரியான சிகிச்சை வழங்கப்படுவதால் கருவுற்ற பெண்களுக்கு இவ்வகை மரணம் இப்போது மிகவும் அரிதானதாகியுள்ளது.[8][9] பாதிக்கப்பட்டவர்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் ஆபத்து குறைவு, ஆனால் முன்கூட்டியே பிறப்பதற்கான அதிக ஆபத்து உள்ளது.[4] சில கர்ப்பிணி பெண்கள் மிகைவாந்தி அறிகுறிகளால் கருக்கலைப்பு செய்ய தேர்வு செய்கிறார்கள்.[10]

அறிகுறிகள்[தொகு]

வாந்தி கடுமையாக இருக்கும்போது, அது பின்வருவனவற்றை ஏற்படுத்தக்கூடும்:[11]

அறிகுறிகள் பசி, சோர்வு, பேறுகாலத்தில் எடுத்துக்கொள்ளும் வைட்டமின்கள் (குறிப்பாக இரும்புச்சத்து கொண்டவை) மற்றும் திட்ட உணவு ஆகியவற்றால் அதிகரிக்கக்கூடும் .[14] பேறுகால மிகைவாந்தி கொண்ட பல பெண்கள் தங்கள் சூழலில் உள்ள நாற்றங்களை உணர்வதில் அதிக உணர்திறன் உடையவர்கள் ; சில வாசனைகள் வாந்திக்கான அறிகுறிகளை அதிகரிக்கக்கூடும். , சியாலோரியா கிராவிடாரம் என்று அழைக்கப்படும் அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு சில பெண்கள் அனுபவிக்கும் மற்றொரு அறிகுறியாகும்.

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பேறுகால மிகை வாந்தி ஏற்படுகிறது [12] மேலும் இது மசக்கையை விட கணிசமாக நீண்ட காலம் நீடிக்கும். பெரும்பாலான பெண்கள் தங்கள் கருத்தரிப்பின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாதத் தொடக்கத்தில் மசக்கை நோய் அறிகுறிகளின் முழுமையான நிவாரணத்தை அனுபவிப்பார்கள. ஆனால் மிகைவாந்தி நோயால் பாதிக்கப்பட்ட சிலர் தங்கள் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை கடுமையான அறிகுறிகளை அனுபவிப்பார்கள், சில சமயங்களில் பிரசவத்திற்குப் பிறகும் கூட இந்நிலை நீடிக்கும்.[15]

ஒரு சிறிய சதவிகிதத்தினருக்கே வாந்தியெடுத்தல் அரிதாக உள்ளது. ஆனால் மிகை வாந்தியினால் ஏற்படும் அதே பிரச்சனைகளில் (அனைத்துமே இல்லையென்றாலும்) பெரும்பாலானவற்றை குமட்டல் ஏற்படுத்துகிறது.   [ மேற்கோள் தேவை ]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Management of hyperemesis gravidarum.. November 2013. 
  2. 2.0 2.1 2.2 2.3 "Pregnancy". Office on Women's Health. September 27, 2010. Archived from the original on 10 December 2015. பார்க்கப்பட்ட நாள் 5 December 2015.
  3. 3.0 3.1 3.2 3.3 Jueckstock, JK (15 July 2010). Managing hyperemesis gravidarum: a multimodal challenge.. 
  4. 4.0 4.1 4.2 Ferri, Fred F. (2012). Ferri's clinical advisor 2013 5 books in 1 (1st ed.). Elsevier Mosby. p. 538. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780323083737. Archived from the original on 2015-12-08.
  5. 5.0 5.1 5.2 Sheehan, P (September 2007). Hyperemesis gravidarum—assessment and management இம் மூலத்தில் இருந்து 2014-06-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140606225903/http://www.racgp.org.au/afpbackissues/2007/200709/200709sheenan.pdf. 
  6. 6.0 6.1 Goodwin, TM (September 2008). Hyperemesis gravidarum. 
  7. Davis, Christopher J. (1986). Nausea and Vomiting : Mechanisms and Treatment. Springer. p. 152. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783642704796. Archived from the original on 2015-12-08.
  8. Kumar, Geeta (2011). Early Pregnancy Issues for the MRCOG and Beyond. Cambridge University Press. p. Chapter 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107717992. Archived from the original on 2015-12-08.
  9. DeLegge, Mark H. (2007). Handbook of home nutrition support. Jones and Bartlett. p. 320. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780763747695. Archived from the original on 2015-12-08.
  10. {{cite book}}: Empty citation (help)
  11. 11.0 11.1 "Emergency management of hyperemesis gravidarum". Emergency Nurse 20 (4): 24–8. 2012. doi:10.7748/en2012.07.20.4.24.c9206. பப்மெட்:22876404. 
  12. 12.0 12.1 "Liver diseases in pregnancy: diseases unique to pregnancy". World J Gastroenterol 19 (43): 7639–46. doi:10.3748/wjg.v19.i43.7639. பப்மெட்:24282353. 
  13. "The role of TSH receptor antibodies in the management of Graves' disease". European Journal of Internal Medicine 22 (3): 213–6. 2011. doi:10.1016/j.ejim.2011.02.006. பப்மெட்:21570635. 
  14. Carlson, Karen J.; Eisenstat, Stephanie J.; Ziporyn, Terra (2004). The New Harvard Guide to Women's Health. Harvard University Press. pp. 392–3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-01343-8.
  15. "Do I Have Morning Sickness or HG?". H.E.R. Foundation. Archived from the original on 30 November 2012. பார்க்கப்பட்ட நாள் 6 December 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேறுகால_மிகை_வாந்தி&oldid=2868519" இலிருந்து மீள்விக்கப்பட்டது