மசக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மசக்கை (Morning sickness அல்லது nausea gravidarum ) என்பது பெண்களில் கருவுற்ற ஆரம்ப நாட்களில் காணப்படும் உடற்சோர்வு, வாந்தி, மயக்கம் முதலான அசாதாரண உடல்நிலையாகும். இது பொதுவாக கருவுறும் பெண்களில் அரைவாசிக்கு மேல் ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. அனேகமாக காலைவேளைகளிலே இது ஏற்பட்டு பின் படிப்படியாக குறைவதுண்டு. கருவுற்று முதல் 12 வாரங்கள் வரைக் காணப்படும்.

மசக்கையின் போது உணவை வாயருகே கொண்டு சென்றாடலே ஓங்காளமும் வாந்தியும் ஏற்படும். பலருக்குப் பசி எடுப்பதில்லை. சிலரில் பசி எடுத்தாலும் சாப்பிட முடிவதில்லை. வியர்வை மணம், புகை, எண்ணெய் வாசனை எதை நுகர்ந்தாலும் வாந்தி வரும். இவ்வாறு வாந்தி காரணமாக நீரிழப்பு ஏற்பட்டு உடல் வரட்சி அடைவதனால் குருதி அமுக்கம் குறைவடைந்து உடல் சோர்வு காணப்படும்.

மசக்கைக்கான காரணங்கள்[தொகு]

கருத்தரித்தல் காரணமாக

  • குருதியில் ஈத்திரோசன் இயக்குநீர்யின் அளவு அதிகரித்தல். கருத்தரிப்பின்போது ஈத்திரோசன் நூறுமடங்கு அளவிலதிகரிக்கும் என சொல்லப்படுகின்றது.[1][நம்பகத்தகுந்த மேற்கோள்?] எவ்வாறயினும் பெண்களில் ஈத்திரோசன் மற்றும் பிலுரூபின் மட்ட வேறுபாடுகள் காரணமாக நோய் நிலைமை தோன்றுமா? இல்லையா? என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை.[2]
  • குறைப் பிரசவங்களைத் த்டுக்கும் வகையில் கருப்பைத் தசைகளை தளரச் செய்வதற்காக சுரக்கப்படும் புரசெத்திரோன் உதரப்பகுதியியும் தளர்த்தும். இதனால் அதிகளவு உதரச்சாறு சுரப்பது வாந்திக்கு வழிவகுக்கும்.

மசக்கை ஏற்படுத்தும் பாதுகாப்பு முறை[தொகு]

மருத்துவ முறைகள்[தொகு]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "First Trimester Pregnancy". The Visible Embryo. பார்த்த நாள் 2008-07-06.
  2. n Elizabeth Bauchner. "Morning Sickness: Coping With The Worst". NY Metro Parents Magazine. பார்த்த நாள் 2008-07-06.
  3. Erick, Miriam (2004). Managing Morning Sickness: A Survival Guide for Pregnant Women. Bull Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-923521-82-8. http://books.google.com/?id=SdVW-61bJVAC&pg=PA44&lpg=PA44&dq=morning+sickness+Low+blood+sugar. பார்த்த நாள்: 2008-07-06. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மசக்கை&oldid=2745600" இருந்து மீள்விக்கப்பட்டது