அக்குபிரசர்
அக்குபிரசர் (அக்குபங்ஞ்சர் மற்றும் அழுத்தம்) ஓர் பரம்பரிய சீன மருத்துவ முறையாகும். மாற்று மருத்துவமுறையான, மருந்தில்லா மருத்துவமான அக்குபிரசர் முறையில் உடலிலுள்ள சக்தி நாளங்களை தூண்டுவதன் மூலம் நோய்களுக்கு தீர்வு காணப்படுகிறது.இயற்கைத் தத்துவங்களை அடிப்படையாகக்கொண்டு மெரிடியன் என்ற உடலில் உள்ள முக்கியப்புள்ளிகளில் அழுத்தம் தர மக்கள் பயனடைகின்றனர். இதை சுஜோக் தெரப்பி என்றும் அக்குபிரசர் என்றும் சொல்லலாம். விரல்கள், முழங்கை முதலியன கொண்டு குறிப்பிட்ட உடற்பகுதிகளில் அழுத்துவதன் மூலம் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு திறனை வெளிக்கொணருவதாகக் கூறப்படுகிறது.அக்குபங்ஞ்சர் முறையும் அதே புள்ளிகளையும் மெரிடியனையும் பயன்படுத்துகிறது, ஆனால் ஊசிகளைக் கொண்டு குத்துவதன் மூலம் குருதி ஓட்டம் தூண்டப்பட்டு இயற்கை சக்திகளை உந்துகிறது. இவை உடற்பயிற்சிகள், மனத்தத்துவம் மற்றும் உடற் பிடித்து விடல் முறைகளை ஒருங்கிணைத்து நோய்களை தடுக்கவும் குணமாக்கவும் செய்கிறது. இதை உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் செய்திருக்கிறது[1].இதனை ஆய்வகசோதனை செய்த கோக்ரேன் கொலாபரேசன் மற்றும் இதழாளர் பந்தோலியர் குறிப்பு இதனை சிறந்த குணமாக்கும் திறன் கொண்டதாக அறிந்துள்ளது.[2]
குறிப்புகள்[தொகு]
- ↑ "இந்திய அக்குபிரசர் வலைத்தளம்". 2009-03-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-11-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ Cochrane library search
வெளியிணைப்புகள்[தொகு]
- அக்குபிரசர் வலைத்தளம்
- அக்குபிரஷர்,ஆசிரியர்: என். தம்மண்ண செட்டியார்,வெளியீடு: வன்னி விநாயகர் புத்தக நிலையம்,மதுரை - 625 001