உள்ளடக்கத்துக்குச் செல்

உண்ணுதல் கோளாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உண்ணுதல் கோளாறு: (eating disorders) என்பது ஒரு மனக்கோளாறு ஆகும். ஒரு தனிநபரின் உடல்நலம் மற்றும் மனநலத்திற்குக் கேடு விளைவிக்கத்தக்க குறைந்த அளவில் அல்லது மிதமிஞ்சிய அளவில் உணவு உட்கொள்ளும் அசாதாரண பழக்கங்கள் உண்ணுதல் கோளாறு அல்லது உணவு உட்கொள்ளல் தொடர்பான நோய்கள் என்று வரையறுக்கப்படுகின்றன.[1] உடற்பருமன் உண்ணுதல் கோளாறாக கருதப்படவில்லை.[2] பிங் உணவுக்கோளாறு- மிகக்குறுகிய காலத்தில் அதிக உண்வு உண்ணுதல், அனோரெக்சியா நெர்வோசா- மிகக்குறைந்த அளவு உண்டு உடல் எடைக் குறைவுடன் காணப்படுதல், புலிமியா நெர்வோசா- அதிகமாக உண்டு பின்பு அதிலிருந்து விடுபட முயற்சித்தல், பைக்கா- உணவுகளல்லாத உணவுப்பொருட்களை உண்ணுதல், ரூமினேசன் கோளாறு- உண்ட உணவைத் திரும்ப வெளியேற்றுதல், ஒதுக்குதல்- மிகக்குறைந்த அளவே உண்ணுதலில் ஆர்வம் காட்டல், பிற உண்ணல் கோளாறுகள் ஆகியவையும் இதில் அடங்கும்..[2][2] மனக்குழப்பம், மனச்சோர்வு, முறைகேடான பழக்கங்கள் ஆகியவை பொதுவாக மக்களிடையே காணப்படும் உணவுக் கோளாறுகளாகும்.

உண்ணுதல் கோளாறுக்கான காரணங்கள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.[3] உடல் மற்றும் சூழல் காரணிகள் இதில் பங்குகொள்கின்றன.[1][3] இதில் கலாச்சார அடையாளங்கள் மெலிதாகப் பங்களிப்பதாக நம்பப்படுகிறது.[3] நடனமாடுபவர்களுக்கு 12 விழுக்காடு உண்ணுதல் கோளாறு பாதிக்கிறது.[4] பாலியல் முறைகேடு அனுபவம் உள்ளவர்களால் உண்ணுதல் கோளாறு அதிகரிக்க வாய்ப்புண்டு.[5] பைக்கா மற்றும் ரூமினேசன் கோளாறு உள்ளவர்களில் சிலருக்கு அடிக்கடி மனவளர்ச்சிக்குறைபாடு ஏற்படுகிறது.[2] ஒரு நேரத்தில் ஒரு ஊண்ணுதல் கோளாறு நோயினை குறிப்பிட்ட நேரத்தில் கண்டறியலாம்.[2] ஓப்பீட்டளவில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

உண்ணுதல் கோளாறுக்கு அடிப்படைன காரணிகள் இன்னும் மருத்துவ உலகில் அறியப்படவில்லை. சில வகை உண்ணுதல் கோளாறுகள் சிகிச்சைகளினால் சரிசெய்யப்ப்படுகிறது.[1] ஆனால் ADHD உள்ள பெண்களில் இந்நோய் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடல் அமைப்புத் தொடர்பான கவலைகள் பெண்களை இந்நோய் அதிகளவில் பாதிக்கக் காரணமாகிறது. சில ஆராய்ச்சிகள் மரபுரிமையாக இந் நோய்களால் இலகுவில் பாதிக்கப்படும் தன்மையைச் சிலர் கொண்டிருப்பதை உறுதி செய்துள்ளன.

இந் நோய்களிற் பெரும்பாலானவை உரிய சிகிச்சை மூலம் குணப்படுத்தக் கூடியவை எனினும் சில மரணத்திற்கும் இட்டுச் செல்லக்கூடியவை. பொதுவாக உளவியல் ஆலோசனை, சரியான உணவு, அளவான உடற்பயிற்சி, உணவைத் தவிர்ப்பதற்கான வாய்ப்பைக் குறைத்தல்[1] ஆகியவை இக்கோளாறுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. சில நேரங்களில் மருத்துவமனையை நாடுதலும் அவசியமாகிறது.[1] சில அறிகுறிகள் கொண்ட உண்ணுதல் கோளாறுகளுக்கு மருந்துகள் தீர்வாக அமைகின்றன.[1] ஐந்தாண்டுகளில் பசியின்மைக் கோளாறான அனோரெக்சியா கோளாறு கொண்டவர்களில்70 % பேரும், புலிமியா கோளாறு கொண்டவர்களில் 50 % பேரும் நலமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[6] திட்டவட்டமாக இல்லாமல் பிங் கோளாறு கொண்டோர்களில் 20% லிருந்து 60% நலமடைந்திருக்கலாமென மதிப்பிடப்பட்டுள்ளது.[6] அனோரெக்சியா, புலிமியா இரண்டும் உயிரிழப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.[6]

வளர்ந்து வரும் உலகில் பிங் உண்ணுதல் கோளாறானது ஒராண்டில் 1.6 விழுக்காடு பெண்களையும் 0.8 விழுக்காடு ஆண்களையும் பாதிக்கிறது.[2] அனோரெக்சியா எனப்படும் பசியின்மை ஓராண்டில் 0.4 விழுக்காடும் புலிமியா கோளாறு 1.3 விழுக்காடு இளம்பெண்களைப் பாதிக்கிறது.[2] சில குறிப்பிட்ட நேரங்களில் 4% க்கு மேற்பட்ட பெண்கள் அனோரெக்சியாவாலும் 25 க்கும் மேற்பட்டவர்கள் புலிமியாவாலும் 25 க்கு மேற்பட்டவர்கள் பிங் கோளாறினாலும் பாதிக்கப்படுகின்றனர்.[6] அனோரெக்சியாவும் புலிமியாவும் ஆண்களை விட பெண்களுக்கு கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகமாக ஏற்படுகிறது.[2] பொதுவாக குழந்தைப் பருவம் கடந்து அல்லது முன் பதின்மப்பருவத்தில் இது தொடங்குகிறது.[1] பிற உண்ணுதல் கோளாறுகளின் புள்ளிவிவரஙக்ள் தெளிவற்றாதாக உள்ளன.[2] குறைவான வளர்ச்சியுடைய நாடுகளில் உண்ணுதல் கோளாறு பாதித்தவர்கள் எண்ணிக்கை விகிதம் மிகவும் குறைந்தே காணப்படுகிறது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "What are Eating Disorders?". NIMH. Archived from the original on 23 May 2015. பார்க்கப்பட்ட நாள் 24 May 2015.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 American Psychiatry Association (2013). Diagnostic and Statistical Manual of Mental Disorders (5th ed.). Arlington: American Psychiatric Publishing. pp. 329–354. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89042-555-8.
  3. 3.0 3.1 3.2 Rikani, AA; Choudhry, Z; Choudhry, AM; Ikram, H; Asghar, MW; Kajal, D; Waheed, A; Mobassarah, NJ (October 2013). "A critique of the literature on etiology of eating disorders.". Annals of Neurosciences 20 (4): 157–61. doi:10.5214/ans.0972.7531.200409. பப்மெட்:25206042. 
  4. Arcelus, J; Witcomb, GL; Mitchell, A (March 2014). "Prevalence of eating disorders amongst dancers: a systemic review and meta-analysis.". European Eating Disorders Review 22 (2): 92–101. doi:10.1002/erv.2271. பப்மெட்:24277724. 
  5. Chen, L; Murad, MH; Paras, ML; Colbenson, KM; Sattler, AL; Goranson, EN; Elamin, MB; Seime, RJ et al. (July 2010). "Sexual Abuse and Lifetime Diagnosis of Psychiatric Disorders: Systematic Review and Meta-analysis". Mayo Clinic Proceedings 85 (7): 618–629. doi:10.4065/mcp.2009.0583. பப்மெட்:20458101. 
  6. 6.0 6.1 6.2 6.3 Smink, FR; van Hoeken, D; Hoek, HW (November 2013). "Epidemiology, course, and outcome of eating disorders.". Current Opinion in Psychiatry 26 (6): 543–8. doi:10.1097/yco.0b013e328365a24f. பப்மெட்:24060914. 
  7. Pike, KM; Hoek, HW; Dunne, PE (November 2014). "Cultural trends and eating disorders.". Current Opinion in Psychiatry 27 (6): 436–42. doi:10.1097/yco.0000000000000100. பப்மெட்:25211499. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்ணுதல்_கோளாறு&oldid=3586276" இலிருந்து மீள்விக்கப்பட்டது