பெரும்பல்லன் சுறா
பெரும்பல்லன் சுறா புதைப்படிவ காலம்: அக்குடேனியன்–சான்க்ளியன், c.
| |
---|---|
அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ள மெகலோடன் தாடைகளின் மாதிரி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | காண்ட்ரிக்திசு
|
வரிசை: | லேம்னிபார்மிசு
|
குடும்பம்: | ஓட்டோடாண்டிடே
|
பேரினம்: | ஓடோடசு
|
இனம்: | ஓ. மெகலோடான்
|
இருசொற் பெயரீடு | |
ஓடோடசு மெகலோடான் அகாசிசூ, 1843[1] | |
வேறு பெயர்கள் [2][3][4][5][6] | |
பட்டியல்
|
பெரும்பல்லன் சுறா ( Megalodon, ஓட்டோடஸ் மெகாலோடான் ),[6][7][8] என்பது கானாங்கெளுத்தி சுறாவின் அழிந்துபோன இனமாகும். இது சுமார் 23 முதல் 3.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்பகால மியோசீன் முதல் பிளியோசீன் வரை வாழ்ந்தது. [9] இது முன்னர் லாம்னிடே குடும்பத்தின் உறுப்பினராகவும் பெரிய வெள்ளை சுறாவின் நெருங்கிய உறவினராகவும் கருதப்பட்டது. இருப்பினும், இது இப்போது அழிந்துபோன குடும்பமான ஓட்டோடோன்டிடே என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆரம்பகால கிரெட்டேசியஸ் காலத்தில் பெரிய வெள்ளை சுறாவிடமிருந்து உருவான சிற்றினத்தோற்றம் எனப்படுகிறது. எனினும் இதன் இனத்தின் நிலைப்பாடு இன்னும் விவாதிக்கப்படுகிறது.
இதுவரை வாழ்ந்த மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த வேட்டையாடிகளில் ஒன்றாக இது கருதப்பட்டாலும், பெரும்பல்லனின் பாகங்கள் துண்டு துண்டாக மட்டுமே கிடைத்துள்ளது. மேலும் இதன் தோற்றம் மற்றும் அதிகபட்ச அளவு முற்றும்முடிவான ஒன்றல்ல. பெரும்பல்லன் சுறாவின் பற்கள் அளவின் பெரும்பாலான மதிப்பீடுகளில், அதிகபட்ச நீள மதிப்பீடுகள் 14.2–20.3 மீட்டர்கள் (47–67 அடி) [7][8][10] என்றும் சராசரி நீள மதிப்பீடானது 10.5 மீட்டர்கள் (34 அடி) என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. [11] [12] இவற்றின் பெரிய தாடைகள் 108,500 முதல் 182,200 newtons (24,400 முதல் 41,000 lbf) வரை கடிக்கும் சக்தியை செலுத்தலாம் என்று மதிப்பீடபட்டள்ளது. [13] இவற்றின் பற்கள் தடிமனாகவும் உறுதியாகவும் இருந்தன, இரையைப் பிடிக்கவும் அதன் எலும்பை உடைக்கவும் ஏற்றதாக அமைந்திருந்தன.
பெரும்பல்லன் சுறாவானது கடல் சமூகங்களின் கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் எனப்படுகிறது. இது கடற்பாலூட்டிகள் , துடுப்புக்காலிகள், கடலாமைகள் போன்ற பெரிய விலங்குகளை இரையையாகக் கொண்டது.
இந்த பெரும்பல்லன் சுறா வெப்பம் நிறைந்த கடல் பகுதியையிலேயே விரும்பி வாழக்கூடியது. அக்காலத்தில் புவியின் காலநிலை மாற்றத்தினால் பனி யுகம் தொடங்கியது. இதனால் கடல் மட்டம் குறைதல், தேவையான உணவு கிடைக்காமை போன்றவை இதன் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதன் முக்கிய உணவு ஆதாரமான பலீன் திமிங்கிலங்களின் பன்முகத்தன்மையைக் குறைத்தல் மற்றும் துருவப் பகுதிகளை நோக்கிய அவற்றின் பரவல் ஆகியவை பெரும்பல்லனின் முதன்மை உணவு ஆதாரத்தைக் குறைத்திருக்கலாம். இந்த சுறாவின் அழிவில் பலீன் திமிங்கிலங்களின் மாபெரும் செல்திசையானது முக்கிய காரணங்களில் ஒன்றாக ஆனது.
குறிப்புகள்
[தொகு]- ↑ Agassiz, Louis (1843). Recherches sur les poissons fossiles [Research on the fossil fishes] (in பிரெஞ்சு). Neuchatel: Petitpierre. p. 41.
- ↑ "Otodus (Megaselachus) megalodon (Agassiz, 1837)". SharkReferences.com. பார்க்கப்பட்ட நாள் 24 October 2017.
- ↑ Eastman, C. R. (1904). Maryland Geological Survey. Vol. 2. Baltimore, Maryland: Johns Hopkins University. p. 82.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;cappetta
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Hay, O. P. (1901). "Bibliography and Catalogue of the Fossil Vertebrata of North America". Bulletin of the United States Geological Society (179): 308. https://books.google.com/books?id=ZmqWKhTAeqYC&pg=PA308.
- ↑ 6.0 6.1 Shimada, K.; Chandler, R. E.; Lam, O. L. T.; Tanaka, T.; Ward, D. J. (2016). "A new elusive otodontid shark (Lamniformes: Otodontidae) from the lower Miocene, and comments on the taxonomy of otodontid genera, including the 'megatoothed' clade". Historical Biology 29 (5): 1–11. doi:10.1080/08912963.2016.1236795.
- ↑ 7.0 7.1 Shimada, Kenshu (2019). "The size of the megatooth shark, Otodus megalodon (Lamniformes: Otodontidae), revisited". Historical Biology 33 (7): 1–8. doi:10.1080/08912963.2019.1666840. பன்னாட்டுத் தர தொடர் எண்:0891-2963.
- ↑ 8.0 8.1 Cooper, J. A.; Pimiento, C.; Ferrón, H. G.; Benton, M. J. (2020). "Body dimensions of the extinct giant shark Otodus megalodon: a 2D reconstruction". Scientific Reports 10 (14596): 14596. doi:10.1038/s41598-020-71387-y. பப்மெட்:32883981. Bibcode: 2020NatSR..1014596C.
- ↑ "Giant 'megalodon' shark extinct earlier than previously thought". Science Daily. 13 February 2019.
- ↑ Perez, Victor; Leder, Ronny; Badaut, Teddy (2021). "Body length estimation of Neogene macrophagous lamniform sharks (Carcharodon and Otodus) derived from associated fossil dentitions". Palaeontologia Electronica. doi:10.26879/1140. https://palaeo-electronica.org/content/2021/3284-estimating-lamniform-body-size.
- ↑ Pimiento, C.; MacFadden, B. J.; Clements, C. F.; Varela, S.; Jaramillo, C.; Velez-Juarbe, J.; Silliman, B. R. (2016). "Geographical distribution patterns of Carcharocles megalodon over time reveal clues about extinction mechanisms". Journal of Biogeography 43 (8): 1645–1655. doi:10.1111/jbi.12754. https://semanticscholar.org/paper/33f8fdc5db865749b334dba9dc3d0d8e15fb5b06.
- ↑ Pimiento, C.; Balk, M. A. (2015). "Body-size trends of the extinct giant shark Carcharocles megalodon: a deep-time perspective on marine apex predators". Paleobiology 41 (3): 479–490. doi:10.1017/pab.2015.16. பப்மெட்:26321775.
- ↑ Wroe, S.; Huber, D. R.; Lowry, M.; McHenry, C.; Moreno, K.; Clausen, P.; Ferrara, T. L.; Cunningham, E. et al. (2008). "Three-dimensional computer analysis of white shark jaw mechanics: how hard can a great white bite?". Journal of Zoology 276 (4): 336–342. doi:10.1111/j.1469-7998.2008.00494.x. http://www.bio-nica.info/Biblioteca/Wroe2008GreatWhiteSharkBiteForce.pdf.