உள்ளடக்கத்துக்குச் செல்

பெனசீர் பூட்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பெனாசீர் பூட்டோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெனசீர் பூட்டோ
Benazir Bhutto
2006 இல் பூட்டோ
பாக்கித்தான் பிரதமர்
பதவியில்
18 அக்டோபர் 1993 – 5 நவம்பர் 1996
குடியரசுத் தலைவர்வசீம் சசாத் (பதில்)
பாரூக் இலெகாரி
முன்னையவர்நவாஸ் ஷெரீப்
பின்னவர்நவாஸ் ஷெரீப்
பதவியில்
2 திசம்பர் 1988 – 6 ஆகத்து 1990
குடியரசுத் தலைவர்குலாம் இசாக் கான்
முன்னையவர்முகம்மது கான் ஜுனேஜோ
பின்னவர்குலாம் முஸ்தபா சட்டோய் (பதில்)
நவாஸ் ஷெரீப்
ஏனைய அரசியப் பதவிகள்
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
17 பெப்ரவரி 1997 – 12 அக்டோபர் 1999
முன்னையவர்நவாஸ் ஷெரீப்
பின்னவர்பசுல்-உர்-ரகுமான்
பதவியில்
6 நவம்பர் 1990 – 18 ஏப்ரல் 1993
முன்னையவர்கான் அப்துல் வாலி கான்
பின்னவர்நவாஸ் ஷெரீப்
பாக்கித்தான் மக்கள் கட்சித் தலைவர்
பதவியில்
12 நவம்பர் 1982 – 27 திசம்பர் 2007
முன்னையவர்நுசுராத் பூட்டோ
பின்னவர்ஆசிஃப் அலி சர்தாரி
பிலவால் பூட்டோ சர்தாரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1953-06-21)21 சூன் 1953
கராச்சி, பாக்கித்தான்
இறப்பு27 திசம்பர் 2007(2007-12-27) (அகவை 54)
இராவல்பிண்டி, பஞ்சாப், பாக்கித்தான்
காரணம் of deathபடுகொலை
இளைப்பாறுமிடம்பூட்டோ குடும்ப சேமக்காலை
தேசியம்பாக்கித்தானியர்
அரசியல் கட்சிபாக்கித்தான் மக்கள் கட்சி
துணைவர்
பிள்ளைகள்
  • பிலவால்
  • பக்தவார்
  • அசீபா
பெற்றோர்சுல்பிக்கார் அலி பூட்டோ
நுசுரத் பூட்டோ
கல்வி
கையெழுத்து
புனைப்பெயர்(s)பீபி
இரும்புப் பெண்

பெனாசிர் பூட்டோ (Benazir Bhutto) (21 ஜூன் 1953 - 27 டிசம்பர் 2007) ஒரு பாக்கித்தானிய அரசியல்வாதியாவார். இவர் 1988 முதல் 1990 வரை மற்றும் மீண்டும் 1993 முதல் 1996 வரை பாக்கித்தானின் 11வது மற்றும் 13வது பிரதமராக பணியாற்றினார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நாட்டில் ஜனநாயக அரசாங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி இவர்தான். கருத்தியல் ரீதியாக ஒரு தாராளவாதியாகவும் மதச்சார்பின்மைவாதியாகவும் இருந்தார். இவர் 1980 களின் முற்பகுதியில் இருந்து 2007இல் படுகொலை செய்யப்படும் வரை பாக்கித்தான் மக்கள் கட்சியின் தலைவராக அல்லது இணைத் தலைவராக இருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் அணுகல்

[தொகு]

பெனாசிர் கராச்சியில் ஒரு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த, பணக்கார பிரபுத்துவ குடும்பத்தில் கலப்பு சிந்தி மற்றும் குர்து பெற்றோருக்கு பிறந்தார். ஆர்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார்.[1][2][3][4] அங்கு இவர் ஆக்சுபோர்டு ஒன்றியத்தின் தலைவராக இருந்தார். இவரது தந்தையும் பாக்கித்தான் மக்கள் கட்சியின் தலைவருமான சமூகவுடைமைவாதி சுல்பிக்கார் அலி பூட்டோ, 1973 இல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பெனாசிர் 1977 இல் பாக்கித்தானுக்குத் திரும்பினார். இவரது தந்தை இராணுவப் புரட்சியின் மூலம் வெளியேற்றப்பட்டு தூக்கிலிடப்படுவதற்கு சிறிது காலம் முன்பு. பூட்டோவும் இவரது தாயார் நுசரத்தும் கட்சியின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டு நாட்டின் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான இயக்கத்தை வழிநடத்தினர். பூட்டோ சியா-உல்-ஹக்கின் இராணுவ அரசாங்கத்தால் மீண்டும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 1984 இல் பிரிட்டனுக்கு நாடு கடத்தப்பட்டார். இவர் 1986 இல் நாடு திரும்பி தாட்சரிச பொருளாதாரத்தின் தாக்கத்தால் கட்சியின் தளத்தை ஒரு சோசலிசத்திலிருந்து தாராளவாதமாக மாற்றினார். 1988 தேர்தலில் கட்சியை வெற்றிக்கு இட்டுச் சென்றார். பிரதமராக, இவரது சீர்திருத்த முயற்சிகள் குடியரசுத் தலைவர் குலாம் இசாக் கான் மற்றும் சக்திவாய்ந்த இராணுவம் உட்பட பழமைவாத மற்றும் இஸ்லாமிய சக்திகளால் தடுக்கப்பட்டன. இவரது நிர்வாகம் ஊழல் மற்றும் உறவினர்களுக்கு தனிச் சலுகை வழங்கியது போன்ற குற்றம் சாட்டப்பட்டு 1990 இல் குலாம் கானால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பழமைவாத இஸ்லாமிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றியை உறுதி செய்வதற்காக உளவுத்துறை அந்த ஆண்டு தேர்தலில் பங்கு கொண்டன. அந்த நேரத்தில் பெனாசிர் எதிர்க்கட்சித் தலைவரானார்.

பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் அரசாங்கமும் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, பெனாசிர் 1993 தேர்தலில் தனது பாக்கித்தான் மக்கள் கட்சியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இவரது இரண்டாவது பதவிக்காலத்தில், பொருளாதார தனியார்மயமாக்கல் மற்றும் பெண்களின் உரிமைகளை முன்னேற்றுவதற்கான முயற்சிகளை மேற்பார்வையிட்டார். இவரது சகோதரர் முர்தாசா படுகொலை, 1995ல் தோல்வியுற்ற ஆட்சிக்கவிழ்ப்பு, மேலும் இவரும் இவரது கணவர் ஆசிஃப் அலி சர்தாரி சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் உள்ளிட்ட பல சர்ச்சைகளால் இவரது அரசாங்கம் வீழ்ந்தது. இதற்கு பதிலடியாக, அதிபர் பாரூக் இலெகாரி இவரது அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்தார். கட்சி1997 தேர்தலில் தோல்வியடைந்தது. மேலும், 1998 இல் இவர் சுயமாக நாட்டிலிருந்து வெளியேறினார். அடுத்த பத்தாண்டுகளுக்கு துபாய் மற்றும் இலண்டன் இடையே வாழ்ந்தார். விரிவாக விசாரிக்கப்பட்ட ஊழல் விசாரணை 2003 இல் சுவிஸ் நீதிமன்றத்தில் ஒரு தண்டனையில் உச்சக்கட்டத்தை அடைந்தது. அமெரிக்கா- பெர்வேஸ் முஷாரஃப் உடனான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இவர் 2008 தேர்தலில் போட்டியிட 2007 இல் பாக்கித்தானுக்குத் திரும்பினார்.

வாழ்வின் கடைசி நொடிகள்

[தொகு]

இராவல்பிண்டியில் ஒரு அரசியல் பேரணியில், இவர் படுகொலை செய்யப்பட்டார் . இச்சம்பவத்திற்கு சலாபி ஜிஹாதி குழு அல் காயிதா பொறுப்பேற்றது. இருப்பினும் பாக்கித்தானின் தெகரிக்கு-இ-தாலிபான் மற்றும் உளவுத்துறையின் தொடர்பு பரவலாக சந்தேகிக்கப்பட்டது. இவர் குடும்பக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

கலவையான கருத்துக்கள்

[தொகு]

பெனாசிர் பூட்டோ ஒரு சர்ச்சைக்குரிய நபராக இருந்தார். இவர் தொடர்ந்து நாட்டை பிளவுபடுத்துகிறார் என்றும் அரசியல் அனுபவமற்றவர் என்று அடிக்கடி விமர்சிக்கப்பட்டார். ஊழல்வாதி என்றும் குற்றம் சாட்டப்பட்டார். மேலும் இவரது மதச்சார்பின்மை மற்றும் நவீனமயமாக்கலுக்காக பாக்கித்தானின் இஸ்லாமிய அமைபுகளின் எதிர்ப்பை எதிர்கொண்டார். இவரது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில், இவர் உள்நாட்டில் பிரபலமாக இருந்தார். மேலும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவையும் பெற்றார். இவர் ஜனநாயகத்தின் வெற்றியாளராக இருந்தார். மரணத்திற்குப் பின், ஆண் ஆதிக்க சமூகத்தில் இவரது அரசியல் வெற்றியின் காரணமாக பெண்களின் உரிமைகளுக்கான சின்னமாக இவர் கருதப்பட்டார்.

சான்றுகள்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Benazir Bhutto
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனசீர்_பூட்டோ&oldid=4096682" இலிருந்து மீள்விக்கப்பட்டது