உள்ளடக்கத்துக்குச் செல்

நவாஸ் ஷெரீப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மியான் முகமது நவாஸ் ஷெரீப்
Mian Muhammad Nawaz Sharif
میاں محمد نواز شریف
பாகிஸ்தானின் 14வது, 16வது, 20வது
பிரதமர்
பதவியில்
பெப்ரவரி 17 1997  அக்டோபர் 12 1999
குடியரசுத் தலைவர்பரூக் லெகாரி
வசீம் சஜாட்
முன்னையவர்மலீக் காலிட்
பின்னவர்பெர்வேஸ் முஷாரப்
பதவியில்
நவம்பர் 6, 1990  ஏப்ரல் 18, 1993
குடியரசுத் தலைவர்குலாம் இஷாக் கான்
முன்னையவர்குலாம் ஜாட்டோய்
பின்னவர்பலாக் மசாரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 திசம்பர் 1949 (1949-12-25) (அகவை 76)
லாகூர், பாகிஸ்தான்
அரசியல் கட்சிபாகிஸ்தான் முஸ்லிம் லீக்
சமயம்இஸ்லாம்

மியான் முகமது நவாஸ் ஷெரீப் (Mian Muhammad Nawaz Sharif, உருது: میاں محمد نواز شریف, பிறப்பு: டிசம்பர் 25, 1949[1] பாகிஸ்தானின் அரசியல்வாதி ஆவார். இவர் 1990 முதல் 1993 வரையும் பின்னர் 1997 முதல் 1999 வரை இரண்டு தடவைகள் பாகிஸ்தான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலவர் ஆவார். இந்தியாவின் அணுவாயுதப் பரிசோதனைகளுக்குப் பதிலளிக்கும் முகமாக 1998 இல் பாகிஸ்தானில் அணுவாயுதச் சோதனைகளை நடத்துவதற்கு உத்தரவிட்டதில் இவர் பரவலாக அறியப்பட்டவர்[2]. பெர்வேஸ் முஷாரப்பினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் இராணுவப் புரட்சியை அடுத்து இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Biography of Nawaz Sharif". Archived from the original on 2007-12-13. Retrieved 2008-08-28.
  2. World: Monitoring Nawaz Sharif's speech—BBC News, 28 May, 1998

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவாஸ்_ஷெரீப்&oldid=4388719" இலிருந்து மீள்விக்கப்பட்டது