தொலைக்காட்சியில் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம்
தொலைக்காட்சியில் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் என்பது 2019 ஆண்டில் கோவிட்-19 பெருந்தொற்றுநோய் காரணமாக தொலைக்காட்சித் துறையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது ஆகும். இது அனைத்து கலைத் துறைகளிலும் அதன் தாக்கங்களை ஏட்படுத்தியது. இதன் விளைவாக பல நாடுகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நிறுத்துவது அல்லது தாமதப்படுத்தபட்டு வருவாய் (உரிமைகள் மற்றும் விளம்பர விற்பனை மூலம்) மற்றும் வேலைவாய்ப்புகளில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துதியது.
இது சமூக விலகல், ஊரடங்கு சட்டம் மற்றும் வீட்டிலேயே தங்குவதற்கான உத்தரவின்படி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைவரின் பாதுகாப்பையும் மனதில் கருதி இத்தகைய நடவடிக்கைகள் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன் விளைவாக உலகளவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குறைந்தது 60% நிறுத்தப்பட்டு குறைந்தபட்சம் பாதி நிரல் 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டது.
தமிழ்நாடு
[தொகு]தமிழ்நாட்டில் அனைத்து தொலைக்காட்சி மற்றும் திரைப்பட படப்பிடிப்பு மற்றும் தயாரிப்புகள் 19 மார்ச் 2020 அன்று நிறுத்தப்பட்டது.[1] இதன் காரணமாக சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, கலர்ஸ் தமிழ் மற்றும் ஜீ தமிழ் போன்ற அலைவரிசைகள் தங்களின் பழைய தொடர்கள் அல்லது பழைய அத்தியாயங்களை மீண்டும் ஒளிபரப்பு செய்தது.[2] இந்த கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக சன் தொலைக்காட்சி நிறுவனம் சாக்லேட், அழகு, தமிழ்ச்செல்வி, மின்னலே, ராசாத்தி போன்ற தொடர்களை திடீரென அதிகாரப்பூர்வமாக நிறுத்தியது.[3] அதே போன்று விஜய் தொலைக்காட்சியிலும் அரண்மனை கிளி என்ற தொடரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 7 என்ற பாட்டு போட்டி நிகழ்ச்சியும் நிறுத்தப்பட்டது.
மே 2020 நடுப்பகுதியில் (21 மே 2020) அதிகபட்சமாக 20 நடிகர்களை கொண்ட தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்பைத் தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.[4][5][6] படப்பிடிப்பு நடைமுறைகளின் போது கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பராமரிக்க எச்சரிக்கையும் செய்யப்பட்டது..[7][8][9] 25 மே 2020 நிலவரப்படி தொலைக்காட்சி நாடகத் தொடர்களின் படப்பிடிப்பு தொடங்கியது, ஆனால் தமிழ்நாடு அரசாங்கம் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை மீண்டும் ஊரடங்கு சட்டம் விதித்தது, இதன் விளைவாக தொலைக்காட்சி தயாரிப்புகள் மீண்டும் நிறுத்தப்பட்டன. இருப்பினும் 7 ஜூலை 2020 அன்று அனைத்து புதிய அத்தியாயங்களையும் ஒளிபரப்ப தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தங்களின் தொடர்களை 28 மே 2020 முதல் ஒளிபரப்ப தொடங்கியது. பின்னர் சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ் போன்ற அலைவரிசைகள் 27 ஜூலை 2020 இல் முக்கியமான தொடர்களை மீண்டும் ஒளிபரப்ப தொடங்கியது. [10][11][12][13][14][15]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Coronavirus shuts down Bollywood, TV: Industry to lose Rs 80-90 cr every week, daily soaps worst hit". Hindustan Times.
- ↑ Ramesh, Neeraja; Mar 30, D. Govardan | TNN |; 2020; Ist, 14:57. "Tamil TV channels do a DD, re-telecast old serials | Chennai News – Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-21.
{{cite web}}
:|last3=
has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Sun TV canceled four TV serials, Vijay and Zee insist 25 episodes". Sify (in ஆங்கிலம்). Archived from the original on 2020-07-13. பார்க்கப்பட்ட நாள் 2020-07-21.
- ↑ "20 members not enough to shoot a TV serial, Selvamani tells T.N. government" (in en-IN). The Hindu. 2020-05-24. https://www.thehindu.com/news/national/tamil-nadu/20-members-not-enough-to-shoot-a-tv-serial-selvamani-tells-tn-government/article31663723.ece.
- ↑ "Tamil Nadu announces further easing of curbs for shooting TV serials". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-07-21.
- ↑ "Tamil Nadu govt allows TV serials to resume shooting, industry welcomes move". DNA India (in ஆங்கிலம்). 2020-05-21. பார்க்கப்பட்ட நாள் 2020-07-21.
- ↑ "Tamil film, television industries to suspend all operations during complete lockdown". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-06-18. பார்க்கப்பட்ட நாள் 2020-07-21.
- ↑ Bharadwaj, K. v Aditya (2020-05-17). "Television serials set to resume production from May 25" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/bangalore/television-serials-set-to-resume-production-from-may-25/article31608936.ece.
- ↑ "Television channels can now resume shoot, but strict restrictions will prove to be a challenge – Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-21.
- ↑ "TV serial shoot to resume after July 6 in TN?". Sify (in ஆங்கிலம்). Archived from the original on 2020-07-01. பார்க்கப்பட்ட நாள் 2020-07-21.
- ↑ "Cinema post-production works and TV serial shoot to begin tomorrow!". Sify (in ஆங்கிலம்). Archived from the original on 2020-07-07. பார்க்கப்பட்ட நாள் 2020-07-21.
- ↑ Naig, Udhav (2020-06-09). "Filming for television serials resumes" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/filming-for-television-serials-resumes/article31782951.ece.
- ↑ Delhi, BestMediaInfo Bureau; July 21; 2020. "Zee Tamil resumes shoots, to air fresh content from July 27". bestmediaifo.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-21.
{{cite web}}
:|last3=
has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Fresh episodes of Sembaruthi, Yaaradi Nee Mohini, Rajamagal and other shows to go on-air from Monday – Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-21.
- ↑ "Shoots of Tamil TV shows Idhayathai Thirudadhey and Neethane Enthan Ponvasantham begin post covid-19 hiatus – Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-21.