உள்ளடக்கத்துக்குச் செல்

திரித்துவப் புகழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரித்துவப் புகழ் அல்லது மூவொரு இறைவன் புகழ் என்பது மூவொரு இறைவனைக் குறித்து பல கிறிஸ்தவர்களால் கூறப்படும் புகழ் செபமாகும். இது சிறிய புகப்பா (Minor Doxology) என்றும் வானவர் கீதம் பெரிய புகப்பா (Greater Doxology) எனவும் அழைக்கப்படுகின்றது. சிறப்பாக இது கத்தோலிக்கரின் செபமாலை, மன்றாட்டுக்கள் மற்றும் பரிபூரண பலனடையும் பக்தி முயற்சிகள் முதலியவற்றில் பயன்படுத்தப்படுகின்றது.

அதிகாரப்பூர்வ வடிவங்கள்

[தொகு]
கிரேக்கம்
Δόξα Πατρὶ καὶ Υἱῷ καὶ Ἁγίῳ Πνεύματι,
καὶ νῦν καὶ ἀεὶ καὶ εἰς τοὺς αἰῶνας τῶν αἰώνων. Ἀμήν.
இலத்தீன்
Gloria Patri, et Filio, et Spiritui Sancto,
Sicut erat in principio, et nunc, et semper, et in saecula saeculorum. Amen.

தமிழ் வடிவம்

[தொகு]
வழக்கில் உள்ள வடிவம்
பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும்
மகிமை உண்டாவதாக.
ஆதியிலே இருந்தது போல
இப்பொழுதும் எப்பொழுதும்
என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
புதிய மாற்றப்பட்ட வடிவம்
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும்
மாட்சிமை உண்டாகுக.
தொடக்கத்தில் இருந்ததுபோல
இப்பொழுதும் எப்பொழுதும்
என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரித்துவப்_புகழ்&oldid=2222733" இலிருந்து மீள்விக்கப்பட்டது