தயோனைல் குளோரைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
Sulfurous dichloride
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
7719-09-7 | |
ChEBI | CHEBI:29290 |
ChemSpider | 22797 |
EC number | 231-748-8 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24386 |
வே.ந.வி.ப எண் | XM5150000 |
| |
UNII | 4A8YJA13N4 |
UN number | 1836 |
பண்புகள் | |
SOCl2 | |
வாய்ப்பாட்டு எடை | 118.97 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற திரவம் (நாள்பட மஞ்சள் நிறமாகிறது) |
மணம் | மூக்கைத்துளைக்கும், விரும்பத்தகாத மணம் |
அடர்த்தி | 1.638 கி/செமீ3, திரவம் |
உருகுநிலை | −104.5 °C (−156.1 °F; 168.7 K) |
கொதிநிலை | 74.6 °C (166.3 °F; 347.8 K) |
Reacts | |
கரைதிறன் | தொலுயீன், குளோரோஃபார்ம், டை எத்தில் ஈதர் ஆகிய புரோட்டானைக் கொண்டிராத கரைப்பான்களில் கரைகிறது. ஆல்ககால்கள் போன்ற புரோட்டானைக் கொண்டுள்ள கரைப்பான்களுடன் வினைபுரிகிறது |
ஆவியமுக்கம் |
|
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.517 (20 °செல்சியசு)[2] |
பிசுக்குமை | 0.6 cP |
கட்டமைப்பு | |
மூலக்கூறு வடிவம் | |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 1.44 D |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−245.6 kJ/mol (liquid)[3] |
நியம மோலார் எந்திரோப்பி S |
309.8 kJ/mol (gas)[3] |
வெப்பக் கொண்மை, C | 121.0 J/mol (liquid)[3] |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் |
|
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H302, H314, H331 | |
P261, P280, P305+351+338, P310 | |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாதது |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
None[4] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
C 1 ppm (5 mg/m3)[4] |
உடனடி அபாயம்
|
N.D.[4] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயோனைல் குளோரைடு (Thionyl chloride) என்பது SOCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது விரும்பத்தகாத காரமான நெடியுடன் மிதமான ஆவியாகும் தன்மையுடைய நிறமற்ற திரவமாகும்.முதன்மையாக தயோனைல் குளோரைடு ஒரு குளோரினேற்றம் செய்யப்படும் வினைக்காரணியாகப் பயன்படுத்தப்படுகிறது. 1990 களின் முற்பகுதியில் ஆண்டுக்கு சுமார் 45,000 டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இது நச்சுத்தன்மை வாய்ந்தது. நீருடன் வினைபுரியும் தன்மை உடையது. மேலும் இச்சேர்மங்கள் வேதி ஆயுதங்கள் உடன்படிக்கையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள சேர்மமாகும். ஏனெனில், இச்சேர்மம் வேதியியல் ஆயுதங்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படலாம் என்ற காரணத்தால் இந்தப் பட்டியலில் இச்சேர்மம் சேர்க்கப்பட்டுள்ளது..
தயோனைல் குளோரைடு சில நேரங்களில் சல்பியூரைல் குளோரைடுடன், SO2Cl2 உடன் சேர்த்து தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால், இந்த சேர்மங்களின் பண்புகள் கணிசமாக வேறுபடுகின்றன. சல்பியூரைல் குளோரைடு ஒரு குளோரின் மூலமாகும், அதேசமயம் தயோனைல் குளோரைடு குளோரைடு அயனிகளின் மூலமாகும்.
உற்பத்தி
[தொகு]முக்கிய தொழில்துறை தொகுப்பு முறையானது கந்தக டிரையாக்சைடு மற்றும் கந்தக இருகுளோரைடு ஆகியவற்றின் வினைகளை உள்ளடக்கியது:
- SO 3 + SCl 2 → SOCl 2 + SO 2
இச்சேர்மத்தைத் தயாரிக்க உதவும் பிற முறைகளில் பாஸ்பரஸ் பென்டாகுளோரைடு, குளோரின் மற்றும் கந்தக இருகுளோரைடு அல்லது பாஸ்ஜீன் ஆகியவற்றை உள்ளடக்கிய தொகுப்புகள் அடங்கும்:
- SO 2 + PCl 5 → SOCl 2 + POCl 3
- SO 2 + Cl 2 + SCl 2 → 2 SOCl 2
- SO 3 + Cl 2 + 2SCl2 → 3 SOCl 2
- SO 2 + COCl 2 → SOCl 2 + CO 2
மேற்கூறிய நான்கு வினைகளில் முதலாவது வினையாது பாஸ்பரஸ் ஆக்ஸிகுளோரைடினை (பாஸ்போரைல் குளோரைடு) வழங்குகிறது, இது அதன் பல வினைகளில் தயோனைல் குளோரைடை ஒத்திருக்கிறது.
பண்புகள் மற்றும் அமைப்பு
[தொகு]SOCl 2 ஒரு முக்கோண பிரமிடு மூலக்கூறு வடிவவியலைப் பெற்றுள்ளது. இந்த சேர்மம் Csமூலக்கூறு சமச்சீர்நிலையைக் கொண்டுள்ளது. இந்த வடிவமைப்பு மையத்தில் உள்ள சல்பர்(IV) மையத்தில் காணப்படும் தனித்த இரட்டை எலக்ட்ரான்களின் காரணமாகவே இந்த அமைப்பினை விளக்க முடியும்.
திட நிலையில் SOCl2 சேர்மமானது ஒற்றைச்சாய்வு படிகங்களை புறவெளித்தொகுதி P21/c உடன் உருவாக்குகிறது.
நிலைத்தன்மை
[தொகு]தயோனைல் குளோரைடு அதிக நிலைத்தன்மை கொண்ட சேர்மமாகும். இதை நீண்ட காலம் சேமித்து வைக்க இயலும். இருப்பினும் மிக நீண்ட காலம் சேமித்து வைக்கப்பட்ட இச்சேர்மத்தின் மாதிரி மஞ்சள் நிறத்தை உருவாக்குகின்றது. இது இருகந்தக இருகுளோரைடு உருவாவதன் காரணமாக இருக்கலாம். இச்சேர்மத்தை கொதிநிலைக்கு மேலாக வெப்பப்படுத்தும் போது மெதுவாக S2Cl2, SO2 மற்றும் Cl2 ஆகியவையாக சிதைவடைகிறது.[5] தயோனைல் குளோரைடு ஒளிச்சேர்க்கைக்கு உட்படுகிறது.[6] நீண்ட காலம் சேமித்து வைக்கப்பட்ட மாதிரிகளில் ஏற்படும் நிறமாற்றத்தை குறைந்த அழுத்தத்தின் கீழ் வாலைவடித்தலின் மூலம் துாய்மைப்படுத்தப்படலாம்.[7]
வினைகள்
[தொகு]தயோனைல் குளோரைடு முக்கியமாக கரிமகுளோரைடு சேர்மங்களின் தொழில்துறை உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. அவை பெரும்பாலும் மருந்துகள் மற்றும் வேளாண் வேதியியல் பொருட்களில் இடைநிலைகளாக இருக்கின்றன. பாஸ்பரஸ் பென்டாகுளோரைடு போன்ற பிற வினைக்காரணிகளை விட இது வழக்கமாக விரும்பப்படுகிறது, ஏனெனில் அதன் துணை விளைபொருட்களும் (HCl மற்றும் SO2 ) வாயு நிலையிலேயே உள்ளதால், விளைபொருளின் தூய்மையாக்கல் எளிமையானதாகிறது.
தயோனைல் குளோரைடின் பல விளைபொருட்கள் மிகவும் வினைத்தன்மை உடையனவாக இருக்கின்றன. ஆகவே, மேலும் இச்சேர்மமானது பரவலான வினைகளில் ஈடுபட்டுள்ளது.
ஆக்சிசன் உடன் வினை
[தொகு]தயோனைல் குளோரைடானது நீருடன் வெப்பத்தை வெளியிட்டு வினைபுரிந்து கந்தக ஈராக்சைடு மற்றும் ஐதரோகுளோரிக் அமிலம் ஆகியவற்றைத் தருகிறது:
- SOCl2 + H2O → 2 HCl + SO2
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Thionyl chloride in Linstrom, Peter J.; Mallard, William G. (eds.); NIST Chemistry WebBook, NIST Standard Reference Database Number 69, National Institute of Standards and Technology, Gaithersburg (MD), http://webbook.nist.gov (retrieved 2014-05-11)
- ↑ Patnaik, Pradyot (2003). Handbook of Inorganic Chemicals. New York, NY: McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8.
- ↑ 3.0 3.1 3.2 Lide, David R., ed. (1996). CRC Handbook of Chemistry and Physics (76th ed.). Boca Raton, FL: CRC Press. pp. 5–10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0476-8.
{{cite book}}
: Unknown parameter|displayeditors=
ignored (help) - ↑ 4.0 4.1 4.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0611". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ Brauer, Georg, ed. (1963). Handbook of Preparative Inorganic Chemistry. Vol. 1 (2nd ed.). New York, NY: Academic Press. p. 383. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0121266011.
- ↑ Spectroscopic and kinetic studies of the SO radical and the photolysis of thionyl chloride. 65.
- ↑ Purification of thionyl chloride. 1967.