காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளை
Appearance
காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளை (காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளை)(இறப்பு: 1934) என்று அறியப்பட்ட காஞ்சீவரம் சுப்ரமணிய பிள்ளை தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.
இசைப் பயிற்சி
[தொகு]- இவரின் அத்தை, காஞ்சீவரம் தனகோடி எனும் அக்காலத்து புகழ்மிக்க பாடகர் ஆவார். இவரிடமிருந்து பல தமிழ்ப் பாடல்களை நயினாப் பிள்ளை கற்றார்.
- எட்டயபுரத்தைச் சேர்ந்த இராமச்சந்திர பாகவதரிடம் அரிய பல இராகங்களைக் கற்றார்.
- சியாமா சாஸ்திரியின் மாணாக்கர்களிடமிருந்து நேரடியாக பாடம் கற்றவர் 'மெட்டு' காமாட்சி என்பவர். இவர் நயினாப் பிள்ளையின் முன்னோராவார். இவரிடமிருந்து சியாமா சாஸ்திரியின் பாடல்கள் பலவற்றை நயினாப் பிள்ளை கற்றுக் கொண்டார்.
- 'ஜலதரங்கம்' ரமணய்யா செட்டி என்பவரிடமிருந்து தியாகராஜ கீர்த்தனைகள் பலவற்றைத் தெரிந்துகொண்டார்.
- வீணை தனம்மாளின் கற்பித்தலிலும் இவர் இசை பயின்றுள்ளார்.
இசைப் பணி
[தொகு]பல்லவி பாடுவதில் இவர் புகழ்பெற்றவர். வயலின், மிருதங்கம், கொன்னக்கோல், கடம், மோர்சிங், கஞ்சிரா, தோலக், கோட்டு வாத்தியம் எனும் பக்கவாத்தியங்களுடன் இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ளார்.
மாணாக்கர்கள்
[தொகு]- டி. பிருந்தா
- டி. முக்தா
- சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை
மறைவு
[தொகு]எலும்புருக்கி, இரத்தச் சர்க்கரை நோய்களின் காரணமாக மே 3, 1934 அன்று காலமானார். அப்போது அவருக்கு வயது 46.
சிறப்பு
[தொகு]காஞ்சிபுரத்தில் நாயினாப் பிள்ளை வாழ்ந்த தெருவிற்கு சங்கீத வித்வான் நாயினாப் பிள்ளை தெரு என பெயர் சூட்டப்பட்டது. அந்தத் தெரு இப்போது எஸ். வி. நாயினா தெரு என அழைக்கப்படுகிறது.