கர்நாடக இசைக் கச்சேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மக்கள் ரசிப்பதற்காக வழங்கப்படும் கர்நாடக இசை நிகழ்ச்சி கர்நாடக இசைக் கச்சேரி என அழைக்கப்படும். இசைக் கச்சேரிகள் வாய்ப்பாட்டு ஆகவோ அல்லது தனி வாத்தியக் கச்சேரியாகவோ இருக்கக் கூடும். வயலின், வீணை, மிருதங்கம் போன்ற இசைக் கருவிகள் தற்காலத்தில் தனி வாத்தியக் கச்சேரிகளில் இடம் பெறக்கூடிய இசைக் கருவிகளாக உள்ளன. நாதஸ்வரம் மற்றும் தவில் கச்சேரிகள் நீண்ட காலமாகவே தனிக் கச்சேரியாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன.[1][2][3]

மரபுகள்[தொகு]

கர்நாடக இசைக் கச்சேரிகள் பொதுவாக நிலத்தில் இருந்த நிலையிலேயே நிகழ்த்தப்படுகின்றன.

துணை இசைக் கருவிகள்[தொகு]

தற்காலத்தில், கருநாடக இசைக் கச்சேரிகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான இசைக் கருவிகள் வயலினும், மிருதங்கமுமாகும். கடம், கஞ்சிரா, மோர்சிங், வீணை போன்ற பல இசைக் கருவிகளும் கச்சேரிகளில் பயன்படுவது உண்டு.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rosenthal, E. (1931). "Tyagaraja: A Great South Indian Composer". Musical Quarterly XVII (1): 14–24. doi:10.1093/mq/XVII.1.14. 
  2. V. Subrahmaniam (2012-12-17). "What ails Carnatic music - The Hindu". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/what-ails-carnatic-music/article4208219.ece. பார்த்த நாள்: 2014-04-19. 
  3. L'Armand, A. K.; L'armand, Adrian (1983). "One Hundred Years of Music in Madras: A Case Study in Secondary Urbanization". Ethnomusicology 27 (3): 411–438. doi:10.2307/850653. https://archive.org/details/sim_ethnomusicology_1983-09_27_3/page/411. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்நாடக_இசைக்_கச்சேரி&oldid=3919775" இலிருந்து மீள்விக்கப்பட்டது