பக்கவாத்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பக்கவாத்தியம்
பக்கவாத்தியம்
தாள வாத்தியம்
கண்டுபிடிப்பு14 ஆம் நூற்றாண்டு, முகலாயக் காலத்தில்
தொடர்புள்ள கருவிகள்
மேலதிக கட்டுரைகள்

பக்கவாத்தியம் (Pakhavaj) என்பது பீப்பாய் வடிவிலான, இரண்டு தலை கொண்ட மேளமாகும். இது இந்திய துணைக் கண்டத்திலிருந்து உருவானது. பழைய மிருதங்கத்தின் மாறுபட்ட ஒரு கருவியாகும். கடல்சார் தென்கிழக்காசியாவின் கெண்டங் என்பதும் பக்கவாத்தியமும் பிற தெற்காசிய இரட்டை தலை மேளத்தின் தொலைதூர உறவாகும்.

இது இந்தியப் பாரம்பரிய இசையின் துருபாத் பாணியில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் தாளக் கருவியாகும். மேலும் இது இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளின் பல்வேறு துணை வடிவங்களுக்கு ஒரு தாள இசைக்கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. மிருதங்கத்தைப் போலல்லாமல், இது மரத்தினால் ஆனது. மேலும், குறைந்த, மெல்லிய தொனியைக் கொண்டிருக்கும். இதன் பக்கவாட்டுகள் விலங்குகளின் தோலால் (பெரும்பாலும் ஆட்டுத் தோல்) தயாரிக்கப்படுகின்றன. பக்கவாத்தியக் கலைஞர்கள் கால்களை மடக்கி தரையில் உட்கார்ந்திருக்கும்போது கருவியை தங்களுக்கு முன்னால் கிடைமட்டமாக வைத்து வாசிப்பார்கள்.

சொற்பிறப்பியல்[தொகு]

இந்த சொல் பக்கியா, மற்றும் வாத்யா ("ஒரு இசைக்கருவி") என்ற பிராகிருதச் சொற்களிலிருந்து பெறப்பட்டது. 14 ஆம் நூற்றாண்டின் போது, பெரிய மிருதங்கக் கலைஞர்கள் மிருதங்க கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களைப் பரிசோதித்து, அசல் களிமண்ணுக்கு மாறாக பிரதான உடலுக்கு மரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர் என்று கூறப்படுகிறது. இதனால், பக்கவாத்தியம் என்ற புதிய பெயர் தோன்றியது. அதே நேரத்தில் பழைய பெயரான, மிருதங்கமும் இன்னும் பயன்படுத்தப்படுகிறது. [1]

குறிப்பிடத்தக்கக் கலைஞர்கள்[தொகு]

நானா பன்சே, நாத்வாரா, குடாய் சிங் ஆகிய பள்ளிகள் பக்கவாத்தியத்தின் முதன்மைப் பள்ளிகளாக இருக்கலாம். ஆனால் சமீபத்திய வரலாற்றில் குறைந்தது 11 பாணிகளைக் காணலாம் - ஜாவ்லி, மதுரா, பஞ்சாப், குடாவ் சிங், நானா சாகேப் பான்சே, நாத்வாரா, வங்காளம், குராவ் பரம்பரா, மங்கல்வேதகர், குவாலியர், இராய்கர், குசராத்து, ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் ஆகியவை . [2] கருவியின் நீண்ட வரலாற்றைப் பார்க்கும்போது, முக்கிய கலைஞர்களின் பட்டியலுடன் முழுமையானதாக இருப்பது கடினம், ஆனால் இங்கே சமீபத்திய காலங்களில் இருந்து சில முக்கிய பக்கவாத்திய கலைஞர்கள் உள்ளனர்.

 1. இலாலா பகவந்தாசு
 2. நானாசாகேப் பான்சே
 3. குடாவ் சிங்
 4. புருசோத்தம தாசு (1907-1991)
 5. சுவாமி பகல் தாசு (1920-1997)
 6. பண்டிட் சத்ரபதி சிங் (1919-1998)
 7. பண்டிட் சிறீகாந்த் மிஸ்ரா (1952-2012)
 8. பண்டிட் அயோத்தி பிரசாத்
 9. பண்டிட் தாரநாத் ராவ்
 10. பண்டிட் புருசோத்தம தாசு
 11. மானிக் முண்டே
 12. எஸ்.வி. பட்வர்தன்
 13. அர்ச்சுன் செச்வால்
 14. இராம்ஜி உபாத்யாய்
 15. கோவிந்திராவ் புர்கான்புர்கர்
 16. பண்டிட் முரளிதர் சர்மா
 17. தோட்டா ராம் சர்மா
 18. அகிலேசு குண்டேச்சா
 19. பண்டிட் ரவிசங்கர் உபாத்யாய்
 20. மோகன் சியாம் சர்மா
 21. சஞ்சல் பட்டாச்சார்யா
 22. பண்டிட் தால்சந்த் சர்மா

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. Ralph Lilley Turner (1975). Collected papers, 1912-1973. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780197135822. https://books.google.com/books?id=9TshAAAAMAAJ. பார்த்த நாள்: 25 December 2012. 
 2. Mistrī, Ābāna E. (1999) (in en). Pakhawaj & Tabla: History, Schools, and Traditions. Pt. Keki S. Jijina. https://books.google.com/books?id=_jSKQgAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்கவாத்தியம்&oldid=3093382" இருந்து மீள்விக்கப்பட்டது