ஐரோவாசிய கழுத்துப்பட்டைக் கள்ளிப் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Streptopelia|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
ஐரோவாசிய கழுத்துப்பட்டைக் கள்ளிப் புறா
இராசத்தான், இந்தியா
Call
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Streptopelia
இனம்:
இருசொற் பெயரீடு
Streptopelia decaocto
(Frivaldszky, 1838)

ஐரோவாசிய கழுத்துப்பட்டைக் கள்ளிப் புறா (Eurasian collared dove ( Streptopelia decaocto ) என்பது ஐரோப்பா மற்றும் ஆசியாவைச் சேர்ந்த புறா இனமாகும். இது யப்பான், வட அமெரிக்கா, கரீபியன் தீவுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

வகைபிரித்தல்[தொகு]

கொலம்பா டிகாக்டோ என்பது அங்கேரிய இயற்கை ஆர்வலர் இம்ரே ஃப்ரிவால்ட்ஸ்கியால் 1838 இல் முன்மொழியப்பட்ட அறிவியல் பெயர். அவர் ஐரோவாசிய கழுத்துப்பட்டைக் கள்ளிப் புறாவை விவரித்தார் .[2] பல்கேரியாவில் உள்ள பிளோவ்டிவ் வகை இரகத்தைப் பார்த்தார்.[3] இது இப்போது 1855 இல் பிரெஞ்சு பறவையியல் வல்லுனரான சார்லஸ் லூசியன் போனபார்ட்டால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ட்ரெப்டோபீலியா பேரினத்தில் வைக்கப்பட்டுள்ளது.[4][5]

பர்மிய கழுத்துப்பட்டைக் கள்ளிப் புறா ( S. xanthocycla ) முன்னர் ஐரோவாசிய கழுத்துப்பட்டைக் கள்ளிப் புறாவின் துணையினமாகக் கருதப்பட்டது, ஆனால் அது 2021 இல் பன்னாட்டு பறவையியல் சங்கத்தால் ஒரு தனி இனமாக வகைப்படுத்தப்பட்டது.[6] மற்ற இரண்டு துணையினங்கள் முன்பு சில நேரங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவற்றில் ஒன்றான S. d. stoliczkae மத்திய ஆசியாவில் உள்ள துர்கெஸ்தானில் காணப்படுகிறது. அடுத்தத துணையினமான S. d. intercedens தென்னிந்தியா மற்றும் இலங்கையில் காணப்படுகின்றன. அவை இப்போது பரிந்துரைக்கப்பட்ட துணையினங்களின் இளைய ஒத்த சொற்களால் ( S. d. decaocto ) அழைக்கப்படுகின்றன.

ஐரோவாசிய கழுத்துப்பட்டைக் கள்ளிப் புறா தென்கிழக்காசியாவின் சுண்டா கழுத்துப்பட்டைக் கள்ளிப் புறா மற்றும் சகாரா கீழமை ஆபிரிக்காவின் ஆப்பிரிக்க கழுத்துப்பட்டைக் கள்ளிப் புறாவுடன் நெருங்கிய தொடர்புடையது, இவற்றுடன் சேர்த்தது இது ஒரு மிகையினங்களாக உருவாகிறன்றன.[7]

விளக்கம்[தொகு]

Profile
A pair from Mangaon, Maharashtra, India
மங்கான், மகாராட்டிரம், இந்தியா

ஐரோவாசிய கழுத்துப்பட்டைக் கள்ளிப் புறா என்பது ஒரு நடுத்தர அளவிலான கள்ளிப் புறா ஆகும். இது காட்டுப் புறவை விட முற்றிலும் சிறியது. மாடப்புறாவைப் போலவே நீளமானது, ஆனால் மெலிதான நீண்ட வாலும், இதனுடன் தொடர்புடைய ஐரோப்பிய ஆமை கள்ளிப் புறாவை விட சற்று பெரியது. அலகின் நுனியிலிருந்து வால் நுனி வரை, சராசரியாக 32 cm (13 அங்) நீளம் கொண்டது. இறக்கைள் 47–55 cm (19–22 அங்) அகலம் கொண்டவை. எடை 125–240 g (4.4–8.5 oz) ஆகும். இதன் நிறம் ஒட்டுமொத்தமாக சாம்பல்-பழுப்பு கலந்த மஞ்சள் முதல் இளஞ்சிவப்பு-சாம்பல் வரை இருக்கும். அடிப் பகுதியைவிட மேல் பகுதி சற்று அடர்த்தியாக இருக்கும். இறக்கையடி நீல-சாம்பல் நிறத்தில் இருக்கும். வால் இறகுகள் மேலே சாம்பல்-பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்திலும், அடிப்பகுதி அடர் சாம்பல் நிறத்திலும், கீழ் பகுதியின் முனை வெள்ளையாகவும் இருக்கும். இதன் பின் கழுத்தில் தெளிவான பிறை போன்ற கருப்பு நிற பட்டைக் காணப்படும். அதுவே இப்பறவையின் பெயருக்கு காரணமாக ஆனது. இதன் குட்டையான கால்கள் சிவப்பு நிறமாகவும், அலகு கருப்பு நிறமாகவும் இருக்கும். விழிப்படலம் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் தொலைவில் இருந்து பார்க்கும்போது கண்கள் கருப்பு நிறமாகத் தோன்றும். ஏனெனில் கண்பாவை ஒப்பீட்டளவில் பெரியதாகவும், சிவப்பு-பழுப்பு நிற கருவிழியைச் சுற்றி குறுகிய விளிம்பு மட்டுமே உள்ளது. கண்ணை ஒரு சிறிய வெற்று தோல் பகுதி சூழ்ந்துள்ளது. அது வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இப்பறவையின் இரு பாலினங்களும் கிட்டத்தட்ட ஒன்று போல இருக்கும்.

இவை பறக்கும்போது தரை இறக்குவதற்கு சற்று முன்பு கூ-கூ-கூ என உரத்த குரலில் ஒலி எழுப்பும்.

நடத்தையும் சூழலியலும்[தொகு]

கட்ச்சில் கோர்ட்ஷிப்
Egg

இனப்பெருக்கம்[தொகு]

ஐரோவாசிய கழுத்துப்பட்டைக் கள்ளிப் புறாக்கள் பொதுவாக மனிதர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் இனப்பெருக்கம் செய்கின்றன. கிட்டத்தட்ட இதன் அனைத்து கூடுகளும் மக்கள் வசிக்கும் கட்டிடங்களுக்கு 1 km (0.62 mi) தொலைவுக்குள் இருக்கும். குச்சிகளைக் கொண்டு அமைக்கபட்ட கூட்டில் பெண் பறவை இரு வெள்ளை முட்டைகளை இடுகிறது. பெண் இரவில் அடைகாக்கும், ஆண் பகலில் அடைகாக்கும். அடைகாத்தல் காலம் 14 முதல் 18 நாட்கள் ஆகும். குஞ்சு பொரித்த 15 முதல் 19 நாட்களில் குஞ்சுகள் பறந்து செல்கின்றன. வடகிழக்கு ஐரோப்பா போன்ற குளிர்ச்சிமிக்க குளிர்காலம் உள்ள பகுதிகளில் குளிர்காலத்தில் அரிதாக இனப் பெருக்கம் செய்தாலும், தேவையான உணவு கிடைக்கும்போது ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்கின்றன. ஆண்டுக்கு மூன்று முதல் நான்கு அடைக் காத்தல்கள் பொதுவாக நடக்கும், இருப்பினும் ஒரு ஆண்டில் ஆறு அடைக்காத்தல்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பறவைகள் ஒரு வாழ்க்கைத் துணையையுடைய இனமாகும். மேலும் குஞ்சுகளைப் பராமரிக்கும் பணியில் பெற்றோர் இரண்டும் தங்கள் கடமைகளைப் பகிர்ந்து கொள்கின்றன.[8]

சண்டிகர் அருகில்

உணவு[தொகு]

ஐரோவாசிய கழுத்துப்பட்டைக் கள்ளிப் புறா அச்சமற்று மனிதர்கள் வசிக்கும் இடத்திற்கு மிக அருகில் அவ்வப்போது உணவு தேடுகிறது. இவை தானியக் கடைகளைச் சுற்றி அல்லது கால்நடைகளுக்கு போடப்படும் உணவு தானியங்களை நாடியும் அவ்வப்போது வருகின்றன. இது கூடிவாழ்கின்ற பறவை இனமாகும். குளிர்காலத்தில் தானியம் (இதன் முதன்மை உணவு), விதைகள், தளிர்கள், பூச்சிகள் போன்ற உணவுப் பொருட்கள் கிடைக்கும் இடங்களைச் சுற்றி கணிசமாக கூட்டம் சேர்கின்றன. கூட்டத்தில் பொதுவாக 10 முதல் 50 வரை பறவைகள் இருக்கும். ஆனால் 10,000 வரையிலான பறவைகள் கொண்ட கூட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.[9]

பஞ்சாபின் சுன்னிக்கு அருகில் உள்ள ஐரோவாசிய கழுத்துப்பட்டைக் கள்ளிப் புறா
மொஹாலிக்கு அருகில் ஐரோவாசிய கழுத்துப்பட்டைக் கள்ளிப் புறா

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2019). "Streptopelia decaocto". IUCN Red List of Threatened Species 2019: e.T22727811A154457750. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T22727811A154457750.en. https://www.iucnredlist.org/species/22727811/154457750. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. Imre Frivaldszky (1838). "Balkány vidéki természettudományi utazás" (in hu). Magyar Tudós Társaság Évkönyvei 3 (3): 156–184 [183–184, Plate 8]. https://biodiversitylibrary.org/page/11520321. 
  3. James Fisher (naturalist) (1953). "The collared turtle dove in Europe". British Birds 46 (5): 153–181. https://britishbirds.co.uk/wp-content/uploads/article_files/V46/V46_N05/V46_N05_P153_181_A034.pdf. 
  4. Charles Lucien Bonaparte (1855). "Coup d'oeil sur les pigeons (quatrième partie)" (in fr). Comptes Rendus Hebdomadaires des Séances de l'Académie des Sciences 40: 15–24 [17]. https://biodiversitylibrary.org/page/4616570. 
  5. Gill, F.; Donsker, D.; Rasmussen, P., eds. (2020). "Pigeons". IOC World Bird List Version 10.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 28 February 2020.
  6. "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-13.
  7. {{cite book}}: Empty citation (help)
  8. Hirschenhauser, Katharina; Winkler, Hans; Oliveira, Rui F. (2003). "Comparative analysis of male androgen responsiveness to social environment in birds: the effects of mating system and paternal incubation". Hormones and Behavior 43 (4): 508–519. doi:10.1016/s0018-506x(03)00027-8. பப்மெட்:12788297. http://repositorio.ispa.pt/bitstream/10400.12/1312/1/HB%2043%20508-519.pdf. 
  9. Cramp, S. (1985). "Streptopelia decaocto Collared Dove". Handbook of the Birds of Europe, the Middle East and North Africa: the birds of the Western Palearctic. Volume 4: Terns to woodpeckers. Oxford: Oxford University Press. pp. 340−353. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-857507-8.Cramp, S. (1985).

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Eurasian Collared Dove
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: