எமிரேட்சு பறப்பு 521
A6-EMW, விபத்திற்குள்ளான வகை வானூர்தி, 2009 இல் துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் எடுக்கப்பட்டது | |
விபத்து சுருக்கம் | |
---|---|
நாள் | ஆகத்து 3 2016 |
சுருக்கம் | சக்கரங்களைப் பயன்படுத்தாது இறங்குதல், புலனாய்வில் |
இடம் | துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் துபாய், ஐக்கிய அரபு அமீரகம் முனையம் 3 |
பயணிகள் | 282 |
ஊழியர் | 18 |
காயமுற்றோர் | 0 [1][2] |
உயிரிழப்புகள் | 0 (பயணிகளும் வானூர்திப் பணியாளர்களும்)[1][2] 1 (தரையிலிருந்த தீயணைப்பாளர்)[3] |
தப்பியவர்கள் | 300 (அனைத்துப் பயணிகளும் வானூர்திப் பணியாளர்களும்) |
வானூர்தி வகை | போயிங் 777-31H |
இயக்கம் | எமிரேட்சு |
வானூர்தி பதிவு | A6-EMW |
பறப்பு புறப்பாடு | திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் திருவனந்தபுரம், இந்தியா |
சேருமிடம் | துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் துபாய், ஐக்கிய அரபு அமீரகம் |
எமிரேட்சு பறப்பு 521 (Emirates Flight 521) இந்தியாவின் திருவனந்தபுரத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்க்கு முன்கூட்டியே பதிப்பித்த காலவட்டவணைப்படி பறக்கும் பன்னாட்டு பயணிகள் பறப்பாகும்.[4] எமிரேட்சு வான்வழிச் சேவை நிறுவனம் இதனை போயிங் 777 வானூர்தி கொண்டு இயக்குகின்றது.[5] ஆகத்து 3, 2016 அன்று 282 பயணிகளுடனும்[6] 18 பணியாளர்களுடனும்[7]துபாய் வானூர்தி நிலையத்தில் கிட்டத்தட்ட 12:45க்கு இறங்கும்போது மோதி விபத்திற்குள்ளானது.[8][9] அனைத்துப் பயணிகளும் பணியாளர்களும் விபத்திலிருந்து தப்பினர்; 13 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் பத்து பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் மூவருக்கு வானூர்தி நிலையத்திலேயே சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.[10] இருப்பினும், மீட்பு நடவடிக்கைகளின்போது வானூர்திநிலைய தீயணைப்பாளர் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிகின்றது.[3]
வானூர்தியும் பணியாளர்களும்
[தொகு]விபத்திற்குள்ளான வானூர்தி 13 ஆண்டுகள் இயக்கத்திலிருந்த போயிங் 777-31H இரக வானூர்தியாகும்; இதன் பதிவு எண் A6-EMW, தயாரிப்பாளர் தொடர் எண் 434. இது தனது முதல் பறப்பை மார்ச் 7, 2003இல் மேற்கொண்டது. மார்ச் 28, 2003இல் எமிரேட்சுக்கு வழங்கப்பட்டது. இதில் இரு ரோல்சு-ராய்சு 892 பொறிகள் பொருத்தப்பட்டுள்ளன.[11]
பயணிகளும் பணியாளர்களும்
[தொகு]நாடு | எண் |
---|---|
ஆத்திரேலியா | 2 |
பொசுனியா எர்செகோவினா | 1 |
பிரேசில் | 2 |
குரோவாசியா | 1 |
எகிப்து | 1 |
செருமனி | 2 |
இந்தியா | 226 |
அயர்லாந்து | 4 |
லெபனான் | 1 |
மலேசியா | 2 |
பிலிப்பீன்சு | 1 |
சவூதி அரேபியா | 6 |
தென்னாப்பிரிக்கா | 1 |
சுவிட்சர்லாந்து | 1 |
தாய்லாந்து | 2 |
தூனிசியா | 1 |
துருக்கி | 5 |
ஐக்கிய அரபு அமீரகம் | 11 |
ஐக்கிய இராச்சியம் | 24 |
ஐக்கிய அமெரிக்கா | 6 |
மொத்தம் | 300 |
வானூர்தியில் 282 பயணிகளும் 18 சேவைப் பணியாளர்களும் இருந்தனர்.[13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Dean, Jon (3 August 2016). "Emirates plane crash fire: Live updates after jet crash-lands at Dubai International Airport with 24 Brits on board". Mirror. http://www.mirror.co.uk/news/world-news/emirates-plane-crash-fire-live-8550369. பார்த்த நாள்: 3 August 2016.
- ↑ 2.0 2.1 Burke, Louise (3 August 2016). "Dubai plane crash: Emirates expects network-wide delay after flight EK521 bursts into flames on crash-landing". Telegraph (UK). http://www.telegraph.co.uk/news/2016/08/03/dubai-airport-emergency-emirates-plane-on-fire/. பார்த்த நாள்: 3 August 2016.
- ↑ 3.0 3.1 "Firefighter dies responding to Emirates plane fire at Dubai airport". The National (UAE). 3 August 2016. http://www.thenational.ae/uae/firefighter-dies-responding-to-emirates-plane-fire-at-dubai-airport. பார்த்த நாள்: 3 August 2016.
- ↑ Emirates (3 Aug 2016). "Emirates airline on Twitter" (Tweet).
- ↑ "Playback of Emirates flight EK521". Flightradar24. பார்க்கப்பட்ட நாள் 3 August 2016.
- ↑ Mitchell, Georgina (3 August 2016). "Smoke pours from plane after 'crash-landing' incident at Dubai Airport". smh.com.au. பார்க்கப்பட்ட நாள் 3 August 2016.
- ↑ "Emirates flight EK521 from Thiruvananthapuram crash lands at Dubai airport - Firstpost". 3 August 2016. பார்க்கப்பட்ட நாள் 3 August 2016.
- ↑ Emirates (3 Aug 2016). "Emirates airline on Twitter" (Tweet).
- ↑ "Emirates plane crash-lands at Dubai airport". BBC News Online. பார்க்கப்பட்ட நாள் 3 August 2016.
- ↑ "Accident: Emirates B773 at Dubai on Aug 3rd 2016, touched down during go-around without gear, aircraft on fire". Aviation Herald. பார்க்கப்பட்ட நாள் 3 August 2016.
- ↑ Ranter, Harro. "A6-EMW Accident description". Aviation Safety Network. Flight Safety Foundation. பார்க்கப்பட்ட நாள் 3 August 2016.
- ↑ "Emirates Media Statement 5." எமிரேட்ஸ் எயர்லைன் Official ஃபேஸ்புக் Account (verified). 3 August 2016. Retrieved on 3 August 2016.
- ↑ "Emirates airliner with 300 onboard crash-lands in Dubai ." அசோசியேட்டட் பிரெசு at the Los Angeles Times. August 3, 2016. Retrieved on August 3, 2016.