உள்ளடக்கத்துக்குச் செல்

எமிரேட்சு பறப்பு 521

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எமிரேட்சு பறப்பு 521
A6-EMW, விபத்திற்குள்ளான வகை வானூர்தி, 2009 இல் துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் எடுக்கப்பட்டது
விபத்து சுருக்கம்
நாள்ஆகத்து 3 2016
சுருக்கம்சக்கரங்களைப் பயன்படுத்தாது இறங்குதல், புலனாய்வில்
இடம்துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்
துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
முனையம் 3
பயணிகள்282
ஊழியர்18
காயமுற்றோர்0 [1][2]
உயிரிழப்புகள்0 (பயணிகளும் வானூர்திப் பணியாளர்களும்)[1][2]
1 (தரையிலிருந்த தீயணைப்பாளர்)[3]
தப்பியவர்கள்300 (அனைத்துப் பயணிகளும் வானூர்திப் பணியாளர்களும்)
வானூர்தி வகைபோயிங் 777-31H
இயக்கம்எமிரேட்சு
வானூர்தி பதிவுA6-EMW
பறப்பு புறப்பாடுதிருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்
திருவனந்தபுரம், இந்தியா
சேருமிடம்துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்
துபாய், ஐக்கிய அரபு அமீரகம்

எமிரேட்சு பறப்பு 521 (Emirates Flight 521) இந்தியாவின் திருவனந்தபுரத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்க்கு முன்கூட்டியே பதிப்பித்த காலவட்டவணைப்படி பறக்கும் பன்னாட்டு பயணிகள் பறப்பாகும்.[4] எமிரேட்சு வான்வழிச் சேவை நிறுவனம் இதனை போயிங் 777 வானூர்தி கொண்டு இயக்குகின்றது.[5] ஆகத்து 3, 2016 அன்று 282 பயணிகளுடனும்[6] 18 பணியாளர்களுடனும்[7]துபாய் வானூர்தி நிலையத்தில் கிட்டத்தட்ட 12:45க்கு இறங்கும்போது மோதி விபத்திற்குள்ளானது.[8][9] அனைத்துப் பயணிகளும் பணியாளர்களும் விபத்திலிருந்து தப்பினர்; 13 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் பத்து பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் மூவருக்கு வானூர்தி நிலையத்திலேயே சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.[10] இருப்பினும், மீட்பு நடவடிக்கைகளின்போது வானூர்திநிலைய தீயணைப்பாளர் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிகின்றது.[3]

வானூர்தியும் பணியாளர்களும்[தொகு]

விபத்திற்குள்ளான வானூர்தி 13 ஆண்டுகள் இயக்கத்திலிருந்த போயிங் 777-31H இரக வானூர்தியாகும்; இதன் பதிவு எண் A6-EMW, தயாரிப்பாளர் தொடர் எண் 434. இது தனது முதல் பறப்பை மார்ச் 7, 2003இல் மேற்கொண்டது. மார்ச் 28, 2003இல் எமிரேட்சுக்கு வழங்கப்பட்டது. இதில் இரு ரோல்சு-ராய்சு 892 பொறிகள் பொருத்தப்பட்டுள்ளன.[11]

பயணிகளும் பணியாளர்களும்[தொகு]

நாடுவாரியாக பயணித்தோர்[12]
நாடு எண்
 ஆத்திரேலியா 2
 பொசுனியா எர்செகோவினா 1
 பிரேசில் 2
 குரோவாசியா 1
 எகிப்து 1
 செருமனி 2
 இந்தியா 226
 அயர்லாந்து 4
 லெபனான் 1
 மலேசியா 2
 பிலிப்பீன்சு 1
 சவூதி அரேபியா 6
 தென்னாப்பிரிக்கா 1
 சுவிட்சர்லாந்து 1
 தாய்லாந்து 2
 தூனிசியா 1
 துருக்கி 5
 ஐக்கிய அரபு அமீரகம் 11
 ஐக்கிய இராச்சியம் 24
 ஐக்கிய அமெரிக்கா 6
மொத்தம் 300

வானூர்தியில் 282 பயணிகளும் 18 சேவைப் பணியாளர்களும் இருந்தனர்.[13]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Dean, Jon (3 August 2016). "Emirates plane crash fire: Live updates after jet crash-lands at Dubai International Airport with 24 Brits on board". Mirror. http://www.mirror.co.uk/news/world-news/emirates-plane-crash-fire-live-8550369. பார்த்த நாள்: 3 August 2016. 
 2. 2.0 2.1 Burke, Louise (3 August 2016). "Dubai plane crash: Emirates expects network-wide delay after flight EK521 bursts into flames on crash-landing". Telegraph (UK). http://www.telegraph.co.uk/news/2016/08/03/dubai-airport-emergency-emirates-plane-on-fire/. பார்த்த நாள்: 3 August 2016. 
 3. 3.0 3.1 "Firefighter dies responding to Emirates plane fire at Dubai airport". The National (UAE). 3 August 2016. http://www.thenational.ae/uae/firefighter-dies-responding-to-emirates-plane-fire-at-dubai-airport. பார்த்த நாள்: 3 August 2016. 
 4. Emirates (3 Aug 2016). "Emirates airline on Twitter" (Tweet). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 5. "Playback of Emirates flight EK521". Flightradar24. பார்க்கப்பட்ட நாள் 3 August 2016.
 6. Mitchell, Georgina (3 August 2016). "Smoke pours from plane after 'crash-landing' incident at Dubai Airport". smh.com.au. பார்க்கப்பட்ட நாள் 3 August 2016.
 7. "Emirates flight EK521 from Thiruvananthapuram crash lands at Dubai airport - Firstpost". 3 August 2016. பார்க்கப்பட்ட நாள் 3 August 2016.
 8. Emirates (3 Aug 2016). "Emirates airline on Twitter" (Tweet). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 9. "Emirates plane crash-lands at Dubai airport". BBC News Online. பார்க்கப்பட்ட நாள் 3 August 2016.
 10. "Accident: Emirates B773 at Dubai on Aug 3rd 2016, touched down during go-around without gear, aircraft on fire". Aviation Herald. பார்க்கப்பட்ட நாள் 3 August 2016.
 11. Ranter, Harro. "A6-EMW Accident description". Aviation Safety Network. Flight Safety Foundation. பார்க்கப்பட்ட நாள் 3 August 2016.
 12. "Emirates Media Statement 5." எமிரேட்ஸ் எயர்லைன் Official ஃபேஸ்புக் Account (verified). 3 August 2016. Retrieved on 3 August 2016.
 13. "Emirates airliner with 300 onboard crash-lands in Dubai ." அசோசியேட்டட் பிரெசு at the Los Angeles Times. August 3, 2016. Retrieved on August 3, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எமிரேட்சு_பறப்பு_521&oldid=3970044" இலிருந்து மீள்விக்கப்பட்டது