இருசிறகிப் பூச்சிகள்
இருசிறகிப் பூச்சிகள் ஈ-கொசு வரிசை உயிரிகள் புதைப்படிவ காலம்:Middle Triassic - Recent | |
---|---|
16 வெவ்வேறு ஈக்களையும் கொசுக்களையும் காட்டும் படம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
துணைவகுப்பு: | சிறகிகள்
இப்டெரிகோட்டா (Pterygota) |
உள்வகுப்பு: | முழுவீச்சு சிறகிகள்
Neoptera |
பெருவரிசை: | அகவளர்ச்சி சிறகிகள்
Endopterygota |
வரிசை: | இருசிறகிகள் (டிப்டெரா, Diptera) |
Suborders | |
Nematocera (includes Eudiptera) |
இருசிறகிகள் அல்லது ஈ-கொசு வரிசை என்னும் உயிரினங்கள், உயிரியல் வகைப்பாட்டில் டிப்டெரா அல்லது டைப்டெரா (Diptera) என்று அழைக்கப்படுகின்றது. இவை இரண்டு இறக்கைகள் கொண்ட பறக்கும் பூச்சிகள் வரிசையைச் சேர்ந்த உயிரினங்கள் ஆகும். உயிரியற் பெயராகிய டிப்டெரா அல்லது டைப்டெரா என்பது, di (டை) = இரண்டு, pteron (ப்டெரான்)= இறக்கை, ஆகிய இரண்டுசொற்களின் கூட்டாக உருவான பெயர். இதனைத் தமிழில் இருசிறகிகள் என்று அழைக்கிறோம். இவ் உயிரின வரிசையின் சிறப்புப் பண்புகளில் சில: ஒரேயொரு இறக்கை இணை (இரண்டு இறக்கைகள்) கொண்டுள்ளது, இவற்றின் வாய் அமைப்பு பெரும்பாலும் உறிஞ்சும் அமைப்பு கொண்டதாகவும், ஒரு சிலவற்றில் துளைக்கவோ, கடிக்கவோ ஏற்ற அமைப்பு கொண்டதாகவும் உள்ளன, இவ் இறக்கைகள் (சிறகுகள்), இவ் உயிரியின் முப்பகுப்பான உடலின் நடுப்பகுதில் (மேசோதோராக்ஃசில்) அமைதுள்ளன, உடலில் கடைப்பகுதியில் (மேட்டாதொராக்ஃசில்) பின் இரண்டு இறக்கைகளுக்கு மாறாக, பறக்கும் பொழுது நடுமையை உணரவும், விரைவு முடுக்கத்தை உணரவும் ஏற்ற முடுக்குணர்விகள் அல்லது நிலைப்படுத்திகள் (Halteres, ஆல்ட்டெரீசு) அமைந்துள்ளன.
ஈ-கொசு வரிசை உயிரிகள்
[தொகு]ஈ-கொசு வரிசை உயிரிகளுக்கு இரண்டு சிறகுகள் மட்டும் இருப்பது இவற்றைத் தட்டாரப்பூச்சி, பட்டாம்பூச்சி, வண்டு முதலான நான்கு சிறகுகள் கொண்ட பிற பூச்சிகளில் இருந்து வேறுபடுத்திக் காட்ட உதவுகின்றன. இருசிறகிகளில் ஒருசில வகைகள் தற்காலத்தில் இறக்கைகள் இல்லாமல் ஆகிவிட்டன, குறிப்பாக இப்போபோசுக்காய்டீ (Hippoboscoidea) என்னும் மேற்குடும்ப (superfamily) உயிரினங்களையும், பிற உயிரினங்களின் வாழ்விடங்களில் குடியிருக்கும் பிறக்குடிவாழ்விகளையும் குறிப்பிடலாம்.
இருசிறகிகள் என்பன மிகப்பெரிய உயிரின வரிசை ஆகும். இதில் ஏறத்தாழ 240,000 வகை இனங்கள் அடங்கும்[1]. இவற்றுள் கொசுக்களும், பல்வேறு வகையான ஈக்களும், பெருங்கால்கொசுக்களும் (gnat), நீரீக்களும் (midges, மிட்சீக்கள்) அடங்கும். இவற்றுள் ஏறத்தாழ பாதி இனங்களை (120,000) அறிவியல் முறைப்படி விளக்கி எழுத்தியுள்ளனர் (ஐரோப்பிய மொழிகளில்).[2][3]. பூச்சிகள் வகுப்பில் மாந்தர் வாழ்க்கைக்கும், பொருளாதார நலத்திற்கும், சூழல் நலத்திற்கு, உடல்நலத்துக்கும் முக்கியமான தாக்கங்கள் தரக்கூடியவை இந்த உயிரின வரிசை. குறிப்பாக இவ்வரிசையில் உள்ள கொசுக்கள் குடும்பம் (கொசுவகையி) எனப்படும் குலிசிடீ (Culicidae) குடும்பத்தைச் சேர்ந்த உயிரிகள் மலேரியா, சிக்கன்குனியா, டெங்குகாய்ச்சல், மூளைவீக்க நோய்(Encephalitis) முதலான பலவகை நோய்ப்பரப்பிகளாக இயங்குகின்றன.
இருசிறகிகள் காணப்படுமிடங்கள்
[தொகு]இருசிறகிகள் (ஈ-கொசு வரிசை உயிரிகள்) உலகம் முழுவதிலும் காணப்படுகின்றன. வெப்ப மண்டலப் பகுதிகள் முதல் வடமுனையின் கீழ்ப்பகுதிகள் வரையிலும் உள்ள நிலப்பகுதிகளிலும், உயர் மலைப்பகுதிகளிலும், கடலிலும் கூடக் காணப்படுகின்றன. இவை பரும அளவில் பெரும்பாலும் அரை மில்லிமீட்டர் முதல் 40 மிமீ வரை காணப்படுகின்றன, ஆனால் சில 70 மிமீ வரையிலும் இருக்கும்.
உட்பிரிவுகள்
[தொகு]இருசிறகிகள் மூன்று பெரிய உட்பிரிவுகள் கொண்டவை[4]. :
- நெமட்டோசெரா (Nematocera) அல்லது நெடுவுணர்விழையி (வால் ஈக்கள் (crane flies), மிட்சீக்கள், குறுகொசுகுகள், கொசுக்கள்)
- பிராக்கிசெரா (Brachycera) அல்லது குறுவுணர்விழையி (மாட்டு ஈ அல்லது குதிரை ஈ, கொல்லீ (robber fly), பூ ஈ (bee fly))
- சைக்ளோராஃவா (Cyclorrhapha) (இவை பெரும்பாலும் காய்கறிகள், வாழும் அல்லது இறந்த உயிரிகளின் உடலில் முட்டையிட்டு வளர்வன).
உடலியக்கம்
[தொகு]இனப்பெருக்கம்
[தொகு]வகைப்பாடு
[தொகு]ஊடகங்களில்
[தொகு]இருசிறகிப் பூச்சிகள் தொன்மங்களிலும் இலக்கியங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளன. பண்டைய எகிப்தின் மிகப்பெரிய பத்து தொற்று நோய்களில் ஒன்றான நாலாம் தொற்றுநோய் இந்த இருசிறகிப் பூச்சிகளால் வந்ததாக பதியப்பட்டுள்ளது.[5]
1958ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படமான தி ஃப்ளை (The Fly) என்னும் திரைப்படத்தில் ஒரு விஞ்ஞானி இருசிறகிப் பூச்சிக்கான உடல் பாகங்களை ஒரு விபத்தில் தன் உடல் உருப்புகளோடு மாற்றி சாகசங்கள் செய்தவாறு காட்சிப்படுத்தப் பட்டிருந்தது.
பல்வேறு ஈக்களும் கொசுகுகளும் பற்றிய ஒளிப்படக் காட்சிவரிசை
[தொகு]-
Ceratitis capitata, "நடுத்தரைக்கடல் பழ ஈ"
-
அனாவி'லீ காம்பியே (Anopheles gambiae)என்னும் கொசுகு
-
ராபரீக்கள் (Robberflies) புணர்தல்
-
முன்காலசைவு
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
[தொகு]- ↑ பிரித்தானிக்கா இணைய கலைக்களஞ்சியம் 120,000 வகைகள் என்கின்றது (dipteran." Encyclopædia Britannica. 2009. Encyclopædia Britannica Online. 11 Aug. 2009).
- ↑ B. M. Wiegmann & D. K. Yeates (1996). "Tree of Life: Diptera". Archived from the original on 2009-10-14. பார்க்கப்பட்ட நாள் 2009-08-03.
- ↑ Engel, Michael; Grimaldi, David A. (2005). Evolution of the insects. Cambridge, UK: Cambridge University Press. pp. 491. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-82149-5.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "dipteran." Encyclopædia Britannica. 2009. Encyclopædia Britannica Online. 11 Aug. 2009)
- ↑ Big Fly
உசாத்துணை நூல்கள்
[தொகு]உயிரியல்
[தொகு]- Harold Oldroyd The Natural History of Flies. New York: W. W. Norton.1965.
- Eugène Séguy Diptera: recueil d'etudes biologiques et systematiques sur les Dipteres du Globe (Collection of biological and systematic studies on Diptera of the World). 11 vols. Text figs. Part of Encyclopedie Entomologique, Serie B II: Diptera. 1924-1953.
- Eugène Seguy. La Biologie des Dipteres 1950. pp. 609. 7 col + 3 b/w plates, 225 text figs.
வகைப்பாடு
[தொகு]- Brown, B.V., Borkent, A., Cumming, J.M., Wood, D.M., Woodley, N.E., and Zumbado, M. (Editors) 2009 Manual of Central American Diptera. Volume 1[தொடர்பிழந்த இணைப்பு] NRC Research Press, Ottawa பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-660-19833-0
- Colless, D.H. & McAlpine, D.K.1991 Diptera (flies) , pp. 717–786. In: The Division of Entomology. Commonwealth Scientific and Industrial Research Organisation, Canberra (spons.), The insects of Australia.Melbourne Univ. Press, Melbourne.
- Griffiths, G.C.D. The phylogenetic classification of Diptera Cyclorrhapha, withspecial reference to the structure of the male postabdomen. Ser. Ent. 8, 340 pp. [Dr. W. Junk, N. V., The Hague] (1972).
- Willi Hennig Die Larvenformen der Dipteren. 3. Teil. Akad.-Verlag, Berlin. 185 pp., 3 pls. 1948
- Willi Hennig (1954) Flugelgeader und System der Dipteren unter Berucksichtigung der aus dem Mesozoikum beschriebenen Fossilien. Beitr. Ent. 4: 245-388 (1954).
- F. Christian Thompson. "Sources for the Biosystematic Database of World Diptera (Flies)" (PDF). United States Department of Agriculture, Systematic Entomology Laboratory. Archived from the original (PDF) on 2015-09-18. பார்க்கப்பட்ட நாள் 2009-08-03.
- Willi Hennig: Diptera (Zweifluger). Handb. Zool. Berl. 4 (2 ) (31):1-337. General introduction with key to World Families. In German.
படிவளர்ச்சி அல்லது கூர்ப்பு
[தொகு]- Blagoderov, V.A., Lukashevich, E.D. & Mostovski, M.B. 2002. Order Diptera. In: Rasnitsyn, A.P. and Quicke, D.L.J. The History of Insects, Kluwer Publ., Dordrecht, Boston, London, pp. 227–240.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐக்கிய அமெரிக்க அரசு வேளாண்மைத்தள, இருசிறகிகள் (டைப்டெரா) மையம் பரணிடப்பட்டது 2006-06-29 at the வந்தவழி இயந்திரம்
- பிசப் (Bishop) அருங்காட்சியக இருசிறகிகள் தொல்லுயிர் எச்சங்களின் பட்டியல்
- இருசிறகிகள் தகவல் வாயில்
- உயிரின மரத் திட்டம் (The Tree of Life Project) பரணிடப்பட்டது 2010-06-09 at the வந்தவழி இயந்திரம்
- Diptera திறந்த ஆவணத் திட்டத்தில்
- Chrysomya megacephala
- Lucilia sericata