பேச்சு:இருசிறகிப் பூச்சிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு பற்றிக் கருத்து வேண்டல்[தொகு]

இக் கட்டுரை ஈக்கள், கொசுகுகள் முதலான ஈரிறக்கை அல்லது இருசிறகிப் பூச்சிகளைப் பற்றிய கட்டுரை. இதனை என்று பெயரிடுவது பொருந்துமா என ஐயுறுகின்றேன். தேனீ என்று கூறினாலும் அவற்றுக்கு நான்கு சிறகுகள் உண்டு. ஆகவே இக்கட்டுரையின் தலைப்பை இருசிறகிகள் அல்லது இருசிறகிப் பூச்சிகள் எனப்பெயரிடலாம் என நினைக்கிறேன். ஏதும் மாற்றுக்கருத்துகள் இருந்தால் தெரிவிக்கவும்.--செல்வா 16:49, 3 ஆகஸ்ட் 2009 (UTC)

ஈ என்பது இரண்டு என்னும் பொருளில் இரு சிறகுகள் கொண்ட பறக்கும் பூச்சிகள் என்று கொள்ளலாமா? :) --செல்வா 17:18, 3 ஆகஸ்ட் 2009 (UTC)
இருசிறகிப் பூச்சிகள் சரியாக இருக்கும். இரண்டு என்ற பொருள் கொண்டால் எவ்வளவு அழகாக உள்ளது. :) -- சுந்தர் \பேச்சு 17:22, 3 ஆகஸ்ட் 2009 (UTC)
முக்கியமான பக்கத்தை உருவாக்குகின்றீர்கள் செல்வா. ஈக்கள் என்ற பக்கத்திலிருந்தும் வழிமாற்று செய்திடல் வேண்டும். :) --பரிதிமதி 23:02, 3 ஆகஸ்ட் 2009 (IST)
கருத்துகளுக்கும் ஊக்கத்துக்கும் நன்றி.--செல்வா 18:08, 3 ஆகஸ்ட் 2009 (UTC)