உள்ளடக்கத்துக்குச் செல்

அகில மலேசிய இசுலாமிய முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகில மலேசிய இசுலாமிய முன்னணி
Pan-Malaysian Islamic Front
Barisan Jemaah Islamiah Se-Malaysia
தலைவர்உஸ்தாத் அஜி முகமட் யூசுப் அருண்
தொடக்கம்கிளாந்தான் 1977
தலைமையகம்பாசீர் மாஸ், கிளாந்தான்
கொள்கைசுமுகமான சமுதாயம்
நிறங்கள்     Dark Pink
இணையதளம்
http://berjasa.org/

அகில மலேசிய இசுலாமிய முன்னணி (Pan-Malaysian Islamic Front, மலாய்: Barisan Jemaah Islamiah Se-Malaysia, ஜாவி: باريسن جماعه اسلاميه سمليسا என்பது மேற்கு மலேசியா, கிளாந்தான் மாநிலத்தைத் தளமாகக் கொண்ட ஒரு சமய அரசியல் கட்சியாகும்.

1977 ஆம் ஆண்டு, கிளாந்தான் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த டத்தோ ஹாஜி முகமட் நாசிர், மலேசிய இசுலாமிய கட்சியில் இருந்து வெளியேற்றப்ப்ட்டதும், இந்த அகில மலேசிய இசுலாமிய முன்னணி எனும் அரசியல் கட்சியை உருவாக்கினார்.

பொது

[தொகு]

அகில மலேசிய இஸ்லாமிய முன்னணி உருவாக்கம் பெறுவதில் அம்னோ முக்கிய பங்கு வகித்தது. 1970களில் மலேசிய இசுலாமிய கட்சி, பாரிசான் நேசனல் கூட்டணியுடன் இணைந்து இருந்த போது, அதிகப்படியான சலுகைகளை எதிர்பார்த்தது.

மலேசிய இசுலாமிய கட்சியின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்கிப் போக முடியாத பாரிசான் நேசனல் கூட்டணி, அகில மலேசிய இசுலாமிய முன்னணியைத் தோற்றுவிப்பதில் வெற்றி கண்டது. மலேசிய இசுலாமிய கட்சியும் பாரிசான் நேசனல் கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டது.

1978 ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில், பாஸ் கட்சி மிகவும் மோசமான தோல்வியைக் கண்டது. கிளாந்தான் மாநிலத்தின் 36 சட்டமன்றத் தொகுதிகளில், அம்னோவிற்கு 23 இடங்கள், அகில மலேசிய இசுலாமிய முன்னணிக்கு 11 இடங்கள், பாஸ் கட்சிக்கு இரு இடங்கள் கிடைத்தன.[1]

பாரிசான் நேசனல்

[தொகு]

அதன் பின்னர் அகில மலேசிய இசுலாமிய முன்னணி, ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியுடன் இணைந்தது. இருப்பினும், அடுத்து வந்த தேர்தல்களில் அக்கட்சி தோல்விகளையே கண்டு வந்தது.[2][3]

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மலேசிய முசுலிமின் கூட்டமைப்பு எனும் அரசியல் கட்சி, அகில மலேசிய இசுலாமிய முன்னணியின் சார்பில் போட்டியிட்டது.[4][5] ஆனால், அத்தேர்தலில் போட்டியிட்ட அனைவரும் தோல்வி அடைந்தனர்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. In-Won Hwang. Personalized Politics. Alpha Books. pp. 117–8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-230-185-2.
  2. Michael Leifer. Dictionary of the Modern Politics of South-East Asia. Taylor & Francis. p. 73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-23875-7.
  3. "29 political parties register with Election Commission". Archived from the original on 2012-02-12. பார்க்கப்பட்ட நாள் 2013-05-18.
  4. Isma tanding PRU13 guna tiket Berjasa பரணிடப்பட்டது 2014-05-13 at the வந்தவழி இயந்திரம்.
  5. "Senarai Calon ISMA atas tiket BERJASA". Archived from the original on 2013-05-08. பார்க்கப்பட்ட நாள் 2013-05-18.
  6. "Keputusan PRU13 bagi 7 tokoh ISMA". Archived from the original on 2013-05-08. பார்க்கப்பட்ட நாள் 2013-05-18.

மேலும் தகவல்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]