ஹேம் பருவா
ஹேம் பருவா | |
---|---|
![]() | |
பிறப்பு | தேஜ்பூர், அசாம் மாகாணம், பிரித்தானிய இந்தியா | ஏப்ரல் 22, 1915
இறப்பு | ஏப்ரல் 9, 1977 அசாம், இந்தியா | (அகவை 61)
பணி | எழுத்தாளர், அரசியல்வாதி |
ஹேம் பருவா (Hem Barua) அசாமைச் சேர்ந்த ஒரு முக்கிய அசாமிய கவிஞரும் அரசியல்வாதியும் ஆவார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]22 ஏப்ரல் 1915 இல், தேஜ்பூரில் பிறந்த [1] இவர் 1938 இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் தனது முதுகலை பட்டத்தைப் பெற்றார். 1941 இல் அசாமிய மொழியிலும் ஆங்கிலத்திலும் விரிவுரையாளராக ஜோர்ஹாட்டிலுள்ள ஜேபி கல்லூரியில் சேர்ந்தார். அடுத்த ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது கல்லூரியிலிருந்து வெளியேறினார். 1943 இல் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையானதும், குவகாத்தியிலுள்ள பி. பருவா கல்லூரியில் சேர்ந்தார், பின்னர் அதன் முதல்வரானார். [2]
இலக்கியப் பணி
[தொகு]பல புத்தகங்களை எழுதிய இவர் 1972 ஆம் ஆண்டு துப்ரியில் நடைபெற்ற அசாமிய இலக்கிய மன்றத்தின் வருடாந்திர அமர்வில் தலைவராக ஆனார். மேலும் அசாமின் நவீன இலக்கிய இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்பட்டார். [3]
அரசியல் வாழ்க்கை
[தொகு]ஹேம் பருவா 1948-ல் காங்கிரசு கட்சியிலிருந்து விலகி சோசலிசக் கட்சியில் உறுப்பினரானார். பின்னர் பிரஜா சோசலிச கட்சியின் தேசிய நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957, 1962 மற்றும் 1967-ல் குவகாத்தி மக்களவைத் தொகுதியிலிருந்தும், 1967-ல் மங்கள்தோய் மக்களவைத் தொகுதியிலிருந்தும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970 திசம்பர் வரை மக்களவை உறுப்பினராக இருந்தார்.
சான்றுகள்
[தொகு]- ↑ "Profile and Biography of the famous Assamese Poet Hem Barua". Assamspider.com. Retrieved 2013-04-28.
- ↑ "Hem Barua - Assams.Info". www.assams.info. Retrieved 2021-09-05.
- ↑ Desk, Sentinel Digital (2015-04-22). "Hem Barua : A Tribute - Sentinelassam". www.sentinelassam.com (in ஆங்கிலம்). Retrieved 2021-09-05.
{{cite web}}
:|last=
has generic name (help)