வெளிறிய பூனைப் பருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெளிறிய பூனைப் பருந்து
வெளிறிய பூனைப் பருந்து
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பூனைப் பருந்து
இனம்:
C. macrourus
இருசொற் பெயரீடு
Circus macrourus
(S. G. Gmelin, 1770)
வெளிறிய பூனைப் பருந்தின் வாழிட எல்லை      இனப்பெருக்கம்     வலசை பாதை      இனப்பெருக்கம் செய்யாத இடம்

வெளிறிய பூனைப் பருந்து (Circus macrourus) என்பது பூனைப் பருந்து துணைக் குடும்பத்தைச் சேர்ந்த கொன்றுண்ணிப் புலம்பெயர் பறவையாகும். இதன் அறிவியல் பெயர் பண்டைய கிரேக்க மொழியில் இருந்து உருவாக்கப்பட்டது. [2]

இது கிழக்கு ஐரோப்பாவின் தெற்குப் பகுதி மற்றும் நடு ஆசியா மற்றும் ஈரான் மற்றும் முக்கியமாக இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் குளிர்காலத்தில் இனப்பெருக்கம் செய்கிறது. இது பெரிய பிரித்தானியா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் அரிதான ஆனால் அதிகரித்து வரும் அலைந்துவரும் பறவை ஆகும். 2017 ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் உள்ள ஒரு பார்லி வயலில் ஒரு ஜோடி வெளிறிய பூனைப் பருந்துகள் கூடு கட்டியிருந்தன; அவை நான்கு குஞ்சுகளை வளர்த்தன. அந்த நாட்டில் இந்த இனத்தின் இனப்பெருக்கம் குறித்த முதல் பதிவு இதுவாகும். [3] 2019 ஆம் ஆண்டில், ஒரு ஜோடி பறவைகள் ஸ்பெயினில் முதல் முறையாக வளர்க்கப்பட்டது. [4]

நடுத்தர அளவிலான இந்தக் கொன்றுண்ணிப் பறவையானது திறந்த சமவெளிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் சமநிலக் கானகங்களில் இனப்பெருக்கம் செய்கிறது.

விளக்கம்[தொகு]

சிறிய கட்ச் பாலைவனத்தில் வெளிறிய பூனைப் பருந்து

தனித்து காணப்படும் இது தரையில் இருந்து சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் சுற்றிப் பறந்தபடி இருக்கும் இது பறக்கும்போது இறக்கைகள் முதுகின் மேல் நோக்கி சற்று வளைந்து V வடிவில் அமைந்திருக்க காணலாம். இந்தப் பறவைகளில் ஆண் பெண் பறவைகள் தனிதனியான சிறகுத்தோற்றத்தில் இருப்பது மற்ற பூனைப் பருந்துகளை ஒத்திருக்கிறது. வளர்ந்த பறவைகள் 40-48 செமீ (16-19 அங்குலம்) நீளமும், 95-120 செமீ (37-47 அங்குலம்) இறக்கைகளுடன் அகலமும் இருக்கும். அலகு கருப்பு நிறத்திலும், விழிப் படலமும், கால்களும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆண் பறவைகளின் எடை 315 கிராம் (11.1 அவுன்ஸ்) இருக்கும். அதே சமயம் பெண் பறவைகளின் எடை சற்று கூடுதலாக 445 கிராம் (15.7 அவுன்ஸ்) இருக்கும். ஆணின் உடலின் மேற்பகுதி சாம்பல் நிறம் கலந்த வெளிர் கருப்பாகவும், கீழ்ப்பகுதி வெள்ளையாகவும், இறக்கை விளிம்பு நல்ல கருப்பாகவும், நீண்ட வாலில் வெள்ளையும் சாம்பலுமான பட்டைகள் மாறி மாறி அமைந்திருக்கும். இது அதன் சிறிய அளவு, குறுகலான இறக்கைகள், வெளிர் நிறம் மற்றும் வெவ்வேறு இறக்கை வடிவங்களில் இருந்து கருநீலப் பூனைப்பருந்தில் இருந்து வேறுபடுகிறது. பெண் பறவைகள் உடலின் மேற்பகுதி மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கக் காணலாம். அலகு முகடும், கண் விளிம்பும் வெள்ளையாக இருக்கும். கழுத்தைச் சுற்றிலும் வெள்ளை, பழுப்பு போன்ற நிறங்களில் தூவிகள் இருக்கும். உடலின் கீழ்ப்பகுதி வெண்மையாக அகன்ற மங்கிய பழுப்புப் பட்டைகள் கலந்து காணப்படும். இது பெண் கருநீலப் பூனைப்பருந்தில் இருந்து இது சிறப்பாக வேறுபடுகிறது. இது பெண் மாண்டேகுவின் பூனைப்பருந்தைப் போலவே உள்ளது, ஆனால் வெளிறிய வயிறு மற்றும் நன்கு தெளிவான முக அமைப்பைக் கொண்டுள்ளது. [5]

நடத்தையும் சூழலியலும்[தொகு]

தனித்துக் காணப்படும் இவை தரையில் இருந்து சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் சுற்றி பறந்தபடி இருக்கும். மேடு பள்ளங்களுக்கு ஏற்ப தாழ்ந்தும் உயர்ந்தும் பறக்கும். ஏதாவது இரையைக் கண்டவுடன் அதனைக் காலால் பற்றி வயல் பரப்பிலோ, ஏரிக்கரையிலோ அமர்ந்து தின்னும். தரையில் அமரும் இவை மரங்களில் இவை விரும்பி அமர்வதில்லை. இதன் இந்தப் பழக்கத்தைக் கொண்டே இவற்றை அடையாளம் காணலாம். மற்ற பறவைகளுடன் சேர்ந்து உழுத நிலங்களிலோ, புல் வெளிகளி தரையிலேயே இரவு முழுவதும் கழிக்கும். சுமார் ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு ஒன்றுக்கொன்று நெருக்கமில்லாமல் இவை அமர்ந்திருப்பதைப் இரவில் பார்த்தால் புல் தூறுகள் முளைத்திருப்பதைப் போல தெரியும்.[6]

வெளிறிய பூனைப் பருந்துகள் முதன்மையாக சிறிய பாலூட்டிகளையும் பறவைகளையும் வேட்டையாடுகின்றன. இவை வயல்களிலும் கரம்பைநிலத்திலும் தாழ்வாகப் பறந்து சென்று வேட்டையாடுகின்றன. இவற்றின் மற்ற உணவு ஆதாரங்களில் பெரிய பூச்சிகள் (பொதுவாக வெட்டுக்கிளிகள்), பல்லிகள், தவளைகள் போன்றவை அடங்கும். இந்த இனம் தரையில் புல் தூறுகளில் கூடு அமைக்கும். மூன்று முதல் ஆறு முட்டைகள் இடும். ஆனால் பொதுவாக நான்கு முதல் ஐந்து வெள்ளை நிற முட்டைகள் இடக்கூடும். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Circus macrourus". IUCN Red List of Threatened Species 2018: e.T22695396A132304131. https://www.iucnredlist.org/species/22695396/132304131. பார்த்த நாள்: 6 November 2021. 
  2. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. பக். 109, 236. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4081-2501-4. https://archive.org/details/Helm_Dictionary_of_Scientific_Bird_Names_by_James_A._Jobling. 
  3. "The Pallid Harrier, a new breeding species for the Netherlands". Nature Today. Grauwe Kiekendief - Kenniscentrum Akkervogels. பார்க்கப்பட்ட நாள் 2 November 2022.
  4. "Pallid Harrier breeds in Spain for first time". BirdGuides. 29 July 2019. பார்க்கப்பட்ட நாள் 2 November 2022.
  5. 5.0 5.1 Orta, J; Christie, D A; Kirwan, G M. "Pallid Harrier". Birds of the World. பார்க்கப்பட்ட நாள் 2 November 2022.
  6. க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 76-77. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Circus macrourus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளிறிய_பூனைப்_பருந்து&oldid=3762618" இலிருந்து மீள்விக்கப்பட்டது