பூனைப் பருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூனைப் பருந்து
மேற்கு சதுப்புநில பூனைப்பருந்து
உயிரியல் வகைப்பாடு
உலகம்: மெய்க்கருவுயிரி
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: அசிபித்ரிபார்மசு
குடும்பம்: அசிபித்ரிடே
பேரினம்: சர்கசு
லேசிபேட், 1799
மாதிரி இனம்
சர்க்கசு ஏருகினோசசு
லின்னேயஸ், 1758
சிற்றினங்கள்

உரையினை காண்க

பூனைப் பருந்து (harrier) என்பது பகலாடி இனத்திலுள்ள, அக்சிபிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஓர் கொன்றுண்ணிப் பறவை ஆகும். பூனைப் பருந்து திறந்த வெளிகளின் மேலாக தாழ்வாகப் பறந்து சிறு பாலூட்டிகள், ஊர்வன அல்லது பறவைகளை வேட்டையாடும் தன்மையுடையது. உலகம் முழுவதும் சுமார் 16 வகையான பூனைப் பருந்து இனங்கள் உள்ளன. அவற்றில் மோண்டாகு ஹாரியர், பேல்லிட் ஹாரியர், யுரேசியன் மார்ஷ் ஹாரியர் உள்ளிட்ட சுமார் 5 வகையான பறவைகள் இந்தியாவுக்கு வலசை வந்து செல்லும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன.[1] இவற்றின் வாழிடம் வறண்ட, புல்வெளி நிலங்கள். எனவே இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள தால் சப்பார் சரணாலயம், குஜராத்தில் உள்ள வேலவதார் தேசியப் பூங்கா, ‘லிட்டில் ரான் ஆஃப் கட்ச்’, ஆந்திராவில் ரோல்லபடு சரணாலயம் போன்ற பகுதிகளில் அதிக அளவில் இவற்றைக் காண முடியும். இவற்றின் வாழிடங்களான புல்வெளிகள்கள் அழிக்கப்பட்டுவருவதால் இந்தப் பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகின்றன.[2]

சிற்றினங்கள்[தொகு]

பூனைப் பருந்து பேரினமான சர்க்கசு பேரினத்தின் கீழ் 16 சிற்றினங்கள் உள்ளன.[3]

  • மாண்டேகுசு பூனைப்பருந்து, சர்க்கசு பைகார்கசு - யூரேசியா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் குளிர்காலம்
  • கருநீலப் பூனைப்பருந்து, சர்க்கசு சைனியசு - யூரேசியா
  • வடக்கு பூனைப்பருந்து, சர்க்கசு கெட்சோனியசு - வட அமெரிக்கா[4]
  • மேற்கு சதுப்பு பூனைப்பருந்து, சர்க்கசு ஏருகினோசசு - ஐரோப்பா, மேற்கு ஆசியா; குளிர்காலத்தில் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகியவை அடங்கும்.
  • கிழக்கு சதுப்பு பூனைப்பருந்து, சர்க்கசு இசுபிலோனோடசு - ஆசியா
  • ஆப்பிரிக்க சதுப்பு பூனைப்பருந்து, சர்க்கசு ரேனிவோரசு - தெற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா
  • சதுப்புநில பூனைப்பருந்து, சர்க்கசு அப்ராக்சிமேனசு- நியூசிலாந்து, ஆத்திரேலியா, பசிபிக் தீவுகள்
  • பப்புவான் பூனைப்பருந்து, சர்க்கசு இசுபிலோதோராக்சு - நியூ கினி (முன்னது ச. இசுபிலோனோடசின் துணையினமாக கருதப்பட்டது, பின்னர் ச. அப்ராக்சிமேனசு கருதப்பட்டது, ஆனால் இப்போது வேறுபட்டதாக கருதப்படுகிறது)
  • மலகாசி பூனைப்பருந்து, சர்க்கசு மேக்ரோசெல்சு (முன்னர் ச. மெயிலார்டியில்) - இந்தியப் பெருங்கடல் (மடகாசுகர் மற்றும் கொமோரோ தீவுகள்)
  • ரீயூனியன் பூனைப்பருந்து, சர்க்கசு மைலார்தி – (இந்தியப் பெருங்கடல்) ரீயூனியன் தீவு
  • நீண்ட இறக்கை பூனைப்பருந்து, சர்க்கசு பபோனி - தென்னமெரிக்கா
  • புள்ளி பூனைப்பருந்து, சர்க்கசு அசிமிலிசு - ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா
  • கருப்பு பூனைப்பருந்து, சர்க்கசு மாரசு - தென் ஆப்பிரிக்கா
  • சைனிரெயசு பூனைப்பருந்து, சர்க்கசு சைனிரெயசு - தென்னமெரிக்கா
  • வெளிறிய பூனைப் பருந்து, சர்க்கசு மேக்ரோரசு - இடம்பெயர்வு: கிழக்கு ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா (குளிர்காலம்)
  • வெள்ளைப் பூனைப் பருந்து, சர்க்கசு மெலனோலூகோசு - ஆசியா

உசாத்துணை[தொகு]

  1. Oatley, Graeme; Simmons, Robert E.; Fuchs, Jérôme (2015). "A molecular phylogeny of the harriers (Circus, Accipitridae) indicate the role of long distance dispersal and migration in diversification". Molecular Phylogenetics and Evolution 85: 150–60. doi:10.1016/j.ympev.2015.01.013. பப்மெட்:25701771. 
  2. ராதிகா ராமசாமி (4 ஆகத்து 2018). "புல்வெளி தொலைந்தால் தொலையும் பறவை". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 5 ஆகத்து 2018.
  3. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (August 2022). "Hoatzin, New World vultures, Secretarybird, raptors". IOC World Bird List Version 12.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 6 December 2022.
  4. Etherington, Graham J.; Mobley, Jason A. (2016). "Molecular phylogeny, morphology and life-history comparisons within Circus cyaneus reveal the presence of two distinct evolutionary lineages". Avian Research 7. doi:10.1186/s40657-016-0052-3. 

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூனைப்_பருந்து&oldid=3879024" இலிருந்து மீள்விக்கப்பட்டது