உள்ளடக்கத்துக்குச் செல்

வெளிறிய சின்ன ஆந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெளிறிய சின்ன ஆந்தை
ரானா குடா, குசராத்தில் தனித்த ஆந்தை
CITES Appendix II (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இசுடிரிகிபார்மிசு
குடும்பம்:
இசுடிரிகிடே
பேரினம்:
ஓட்டசு
இனம்:
ஓ. புரூசி
இருசொற் பெயரீடு
ஓட்டசு புரூசி
ஹியும், 1873
துணையினம்

ஓ. பு. புரூசி
ஓ. பு. அப்சோலெடசு
ஓ. பு. செமெனொவி
ஓ. பு. எக்சிகுசு

வெளிறிய சின்ன ஆந்தை (Pallid scops owl)(ஓட்டசு புரூசி) என்பது மத்திய கிழக்கிலிருந்து மேற்கு மற்றும் மத்திய ஆசியா வரையிலான காணப்படும் சிறிய ஆந்தை ஆகும். சில சமயங்களில் வரிச் சின்ன ஆந்தை என்று அழைக்கப்படுகிறது.

விளக்கம்

[தொகு]
கள வழிகாட்டி விளக்கம்

வெளிறிய சின்ன ஆந்தை என்பது யூரேசியா சிறிய ஆந்தை போன்ற தோற்றத்தில் சிறிய காதுகள் கொண்ட ஆந்தை ஆகும். ஆனால் இவற்றின் முதுகில் மிகவும் தனித்துவமான கோடுகள் மற்றும் குறைவான சிக்கலான அடையாளங்கள் உள்ளன.

பரவல்

[தொகு]
ஓட்டசு புரூசியின் இனப்பெருக்க பரம்பல்

வெளிறிய சின்ன ஆந்தை மத்திய கிழக்கிலிருந்து மேற்கு மற்றும் நடு ஆசியா வரை பரவியுள்ளது. சில பறவைகள் குளிர்காலத்தில் அரேபியத் தீபகற்பம், எகிப்து மற்றும் பாக்கித்தான் வரை வலசை போகும். இது மரங்கள் மற்றும் புதர்களைக் கொண்ட பகுதி-திறந்த பகுதிகளில் வாழ்கிறது. இதனுடைய வாழிட வரம்பு 6,190,000 km2 (2,390,000 sq mi) என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் இனப்பெருக்க கால வரம்பு 3,560,000 km2 (1,370,000 sq mi) ஆகும்.

2015ஆம் ஆண்டில், இசுரேலின் பிளவு பள்ளத்தாக்கில் 400 இணைகளுக்கு மேலான புதிய ஆந்தைகள் கண்டறியப்பட்டது. மேலும் 2016ஆம் ஆண்டில் ஜோர்தானில் (கிழக்கே ஜோர்தன் நதி வரை) புதிய ஆந்தைகள் காணப்பட்டன. இவை அனைத்தும் பனைத் தோட்டங்களில் கூடு கட்டுகின்றன.[3]

இந்தியாவில் குசராத்து, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்து பல பதிவுகள் உள்ளன. மேலும் தென் மாநிலமான கேரளாவில் உள்ள நெல் வயல்களிலிருந்து இந்த சிற்றினத்தின் பதிவு உள்ளது.

நடத்தை

[தொகு]

உணவு

[தொகு]

முதன்மையாக வெளிறிய சின்ன ஆந்தை, பூச்சி உண்ணி. ஆந்தையின் உணவில் பூச்சிகள், பல்லிகள், சிலந்திகள் மற்றும் சிறிய பாலூட்டிகள் அடங்கும். இது எப்போதாவது பகலில் வேட்டையாடுகிறது. மேலும் வௌவால்கள் மற்றும் பூச்சிகளை இறக்கையில் எடுத்துச் செல்வதாக அறியப்படுகிறது.[4]

கூடு கட்டுதல்

[தொகு]
முட்டை

ஏப்ரல் மற்றும் சூன் மாதங்களுக்கு இடையில் எந்த நேரத்திலும் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. இக்காலத்தில் மரங்கொத்தி துளை போன்ற ஒரு மரத்தின் குழியில் 4 முதல் 6 முட்டைகள் வரை இடும். அடைகாக்கும் காலம் தோராயமாக 27 நாட்கள் ஆகும். மேலும் 30 நாட்களில் குஞ்சுகள் வளர்ந்து கூட்டைவிட்டு வெளியேறும்.

குரல்

[தொகு]

வெளிறிய சின்ன ஆந்தையின் அழைப்பு என்பது குறைந்த, புறா போன்ற குறிப்புகளின் வரிசையாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2016). "Otus brucei". IUCN Red List of Threatened Species 2016: e.T22688631A93203300. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22688631A93203300.en. https://www.iucnredlist.org/species/22688631/93203300. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  3. TY - JOUR AU - Ben Dov, Amir AU - Kiat, Yosef PY - 2016/04/01 SP - 146 EP - 158 T1 - Breeding Pallid Scops Owls in Rift valley, Israel, in spring 2015 VL - 38 JO - Dutch Birding ER -
  4. Striated Scops Owl பரணிடப்பட்டது 2007-05-13 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளிறிய_சின்ன_ஆந்தை&oldid=3478792" இலிருந்து மீள்விக்கப்பட்டது