வி. பி. மேனன்: நவீன இந்தியாவின் சிற்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. பி. மேனன்: நவீன இந்தியாவின் சிற்பி
நூலாசிரியர்நாராயணி பாசு
நாடுஇந்தியா
மொழிஇந்திய ஆங்கிலம்
வகைசுயசரிதை

வி.பி. மேனன்: நவீன இந்தியாவின் சிற்பி (V.P. Menon: The Unsung Architect of Modern India) என்பது இந்திய வரலாற்றாசிரியர் நாராயணி பாசுவின் புனைகதை அல்லாத புத்தகமாகும். இதை சைமன் & ஸ்கஸ்டர் இந்தியா என்ற நிறுவனம் 2020 இல் வெளியிட்டது. [1] இந்த புத்தகம் இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பில் சர்தார் பட்டேலுக்கு உதவிய இந்திய அரசு ஊழியரான வி. பி. மேனனின் வாழ்க்கை வரலாறாகும். வி. பி. மேனன் சுதேசி சந்தைக் கொள்கைகளை ஆதரித்த சுதந்திரக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். [2] [3]

வெளியீடு[தொகு]

வி.பி. மேனன்: நவீன இந்தியாவின் அன்சங் ஆர்கிடெக்ட் என்ற புத்தகம் வரலாற்றாசிரியரும் ஆய்வாளரும், வி. பி. மேனனின் பேத்தியுமான, நாராயணி பாசு என்பவரால் எழுதப்பட்டது. இதை சைமன் & ஸ்கஸ்டர் இந்தியா என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. [1]

இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் 2020 பிப்ரவரி 12 அன்று இப்புத்தகத்தை வெளியிட்டார். [4] புத்தகத்தில் 432 பக்கங்கள் உள்ளன.

சுருக்கம்[தொகு]

இந்திய அரசு ஊழியராக இருந்த வப்பாலா பங்குண்ணி மேனன், இந்தியாவின் சுதேச அரசுகளின் ஒருங்கிணைப்பில் சர்தார் பட்டேலுக்கு வலது கையாக இருந்தார் என்று பிரபலமாக அறியப்படுகிறார். இவர் கேரளாவில் வேர்களைக் கொண்டிருந்த தாழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர். மெட்ரிகுலேசனுக்கு முன்பாக பள்ளியையும் வீட்டையும் விட்டு வெளியேறிய இவர் கோலார் தங்கச் சுரங்கங்களில் கூலியாக வேலை செய்யத் தொடங்கினார்.[5]

பின்னர், மும்பையில் துண்டுகளை விற்றார். பின்னர் இவருக்கு தட்டச்சராகப் தற்காலிக அரசு வேலை கிடைத்தது. [5] பின்னர் இவர் பிரிட்டிசு அரசில் முக்கியமான ஒரு அரசு ஊழியரானார். பின்னர் இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பில் முக்கிய பங்கு வகித்தார்.

விமர்சனம்[தொகு]

நேரு-பட்டேல் சமன்பாடு[தொகு]

இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் 2020 பிப்ரவரி 12 அன்று புத்தகத்தை வெளியிட்டார். [4] டுவிட்டரில், தொடர்ச்சியான ட்வீட்டுகளில், "நேரு பட்டேலை அமைச்சரவையில் சேர்க்க விரும்பவில்லை என்று புத்தகத்திலிருந்து கற்றுக்கொண்டேன்" என்று கூறினார். [6] [7] பின்னர், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குகா டுவீட்டரில், "இது பேராசிரியர் சிறீநாத் ராகவன் விரிவாக பரப்பப்பட்ட கட்டுக்கதை" என்றார். [8] வெளியுறவு அமைச்சர் "போலி செய்திகளை" விளம்பரப்படுத்தக்கூடாது, இதை பாஜக தொழில்நுட்ப களத்தில் விடக்கூடாது என்றும் அவர் கூறினார். [9] "சில வெளியுறவு அமைச்சர்கள் புத்தகங்களைப் படிக்கிறார்கள்" என்று குகாவுக்கு பதிலளித்த ஜெய்சங்கர், "பேராசிரியர்களுக்கும் ஒரு நல்ல பழக்கம் இருக்கலாம்" என்று மேலும் கூறினார்.

காங்கிரசு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் தொடர் ஆவணங்களையும் கடிதங்களையும் வெளியிட்டார்; ஜெய்சங்கரின் கூற்றை "போலி செய்தி" என்றார். [10] காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், சிறீநாத் ராகவன் எழுதிய கட்டுரையைப் பகிர்ந்து கொண்டார். அதில் நேரு ஒருபோதும் பட்டேலை பட்டியலில் இருந்து விலக்கவில்லை என்று கூறுகிறது. [8] முன்னாள் தூதரும் மற்றும் அரசியல்வாதியுமான கே. நட்வர் சிங், த சன்டே கார்டியனில் " நேரு பட்டேலின் பெயரைச் சேர்க்கவில்லை என்பது தெரியும்" என்று எழுதினார். [11] எச்.வி.ஹட்சன் எழுதிய தி கிரேட் டிவைட் புத்தகத்தில் இதை முதன்முறையாக படித்ததாக அவர் கூறினார்.

புத்தக மதிப்புரைகள்[தொகு]

தி சண்டே கார்டியனுக்கான மதிப்பாய்வில், முன்னாள் இந்திய ஆட்சிப் பணியாளர், அருண் பட்நகர் இந்த படைப்பை ஆராய்ச்சி செய்தார்; பாசுவின் பணி பரந்த அளவிலான ஆய்வையும் காப்பகப் பொருள்களையும் அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார். [12] எனவே, இந்தப்பணி, பட்நாகரின் கூற்றுப்படி, மேனனின் ஆளுமையையும், சாதனைகளையும் குறித்த புறநிலை மதிப்பீட்டை முன்வைப்பதில் வெற்றி பெறுகிறது. "வரவிருக்கும் தலைமுறைக்கு", பட்நாகர் எழுதினார், "நாராயணி பாசுவின் முக்கியமான புத்தகம் குறிப்பாக பொருத்தமானதாக இருக்கும்". இந்தியா டுடேவுக்காக எழுதுகின்ற சுமித் கங்குலி, இந்த புத்தகத்தை "பல காப்பகங்களில் கடினமான ஆராய்ச்சியின் விளைவாக, நினைவுக் குறிப்புகளிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்களை நீக்குதல் மற்றும் வாய்வழி வரலாறுகளின் புத்திசாலித்தனமான பயன்பாடு" என்று அழைத்தார். [13]

தி ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸில் ரிசி ராஜ், அந்த புத்தகம் வெற்றிடத்தை நிரப்பியது என்று எழுதினார். [5] கோப்புகளிலும் வரைவுகளிலும் பொதுவாக புதைக்கப்பட்டிருக்கும் நபரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி பாசு சவாலான வேலையைச் செய்துள்ளார் என்று அவர் கூறினார். "புத்தகத்தின் கடைசி அத்தியாயங்கள்", என்பதை ராஜ் எழுதினார், "நேரு-பட்டேல் சமன்பாட்டைப் பற்றி அதிகம் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது. இது முதல் பிரதமரை மோசமான வெளிச்சத்தில் காட்டுகிறது." எழுத்தாளர் "நாயகர்களும் வில்லன்களும் இல்லாத ஒரு கருத்தியல் அல்லாத கணக்கை எழுதியதற்கு பாராட்டப்பட வேண்டும். ஆனால் மனிதர்கள் தங்கள் பலங்களையும் தவறுகளையும் குறிப்பிட்டே" என்று ராஜ் எழுதினார்.

தி வீக் பத்திரிகையின் பணிகளை மறுபரிசீலனை செய்த சோனி மிஸ்ராவின் கூற்றுப்படி, "சுதந்திர இயக்கம் பற்றிய ஒரு பெரிய கண்ணோட்டத்துடனும், அந்தக் காலத்தைப் பற்றிய புதிய நுண்ணறிவுகளுடனும் பாசு தனது தாத்தாவின் வாழ்க்கையின் அறியப்படாத அம்சங்களுக்கான தேடலை இணைத்துள்ளார்" என்பது புத்தகத்தை சிறப்புறச் செய்கிறது . [14] சாரா ஃபாரூகி, பிசினஸ் ஸ்டாண்டர்டில் மதிப்பாய்வு எழுதுகிறார். புத்தகத்தின் நோக்கம் "பரந்த" என்று அழைக்கப்படுகிறது.

பர்ஸ்ட்போஸ்ட் 2020 பிப்ரவரி 9 அன்று வார புத்தகங்களின் பட்டியலில் புத்தகத்தை பட்டியலிட்டது. [15] இந்துஸ்தான் டைம்ஸ் புத்தகத்தை "வாரத்தின் மிகவும் சுவாரஸ்யமான புத்தகங்களில்" பட்டியலிட்டுள்ளது. [16]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "'Nehru didn't want Patel in cabinet': New book could stir debate on old issue". The Week (ஆங்கிலம்). 2020-02-09 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Biography to explore personal, unheard episodes of V.P. Menon’s life". The Hindu. 2020-01-20. https://www.thehindu.com/books/biography-to-explore-personal-unheard-episodes-of-vp-menons-life/article30606065.ece. பார்த்த நாள்: 2020-02-09. 
  3. Gupta, Shekhar (2020-02-08). "Why Modi is using Nehru to try and demolish the Gandhi dynasty and Congress". ThePrint (ஆங்கிலம்). 2020-02-09 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 February 13, Aasheesh Sharma; February 13, 2020UPDATED:; Ist, 2020 11:51. "Book bares new facts about Patel-Nehru ties". India Today (ஆங்கிலம்). 2020-03-11 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: extra punctuation (link)
  5. 5.0 5.1 5.2 "VP Menon | An account of Sardar Patel's aide and his role in uniting states". The Financial Express (ஆங்கிலம்). 2020-03-08. 2020-03-11 அன்று பார்க்கப்பட்டது.
  6. Bureau, ABP News (2020-02-13). "Nehru Didn't Want Patel In Cabinet': S Jaishankar Cites VP Menon's Biography". news.abplive.com (ஆங்கிலம்). 2020-03-13 அன்று பார்க்கப்பட்டது.
  7. ""...Nehru Didn't Want Patel In Cabinet": S Jaishankar Cites VP Menon's Biography". NDTV.com. 2020-03-13 அன்று பார்க்கப்பட்டது.
  8. 8.0 8.1 "S Jaishankar cites VP Menon's biography to claim Nehru didn't want Patel in Cabinet; Jairam Ramesh, Shashi Tharoor rebut charge". Firstpost. 2020-03-13 அன்று பார்க்கப்பட்டது.
  9. "'Professors should read books too': Here's what prompted S Jaishankar's savage response to historian Ramachandra Guha on Twitter". The Financial Express (ஆங்கிலம்). 2020-02-13. 2020-03-13 அன்று பார்க்கப்பட்டது.
  10. DelhiFebruary 14, Prabhash K. Dutta New; February 14, 2020UPDATED:; Ist, 2020 16:03. "Jaishankar comes between Nehru and Patel as Ramachandra Guha fumes". India Today (ஆங்கிலம்). 2020-03-13 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: extra punctuation (link)
  11. "It's known Nehru didn't include Patel's name". The Sunday Guardian Live (ஆங்கிலம்). 2020-03-13 அன்று பார்க்கப்பட்டது.
  12. "Book on Menon is well researched". The Sunday Guardian Live (ஆங்கிலம்). 2020-02-22. 2020-03-11 அன்று பார்க்கப்பட்டது.
  13. February 21, Sumit Ganguly New Delhi; March 2, 2020 ISSUE DATE:; February 21, 2020UPDATED:; Ist, 2020 15:55. "The PHENOMENAL Mr Menon". India Today (ஆங்கிலம்). 2020-03-11 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: extra punctuation (link)
  14. "Drafting a nation". The Week (ஆங்கிலம்). 2020-03-11 அன்று பார்க்கப்பட்டது.
  15. "Books of the week: From An Officer and His Holiness, to India and the Olympic Games — our picks". Firstpost. 2020-02-09 அன்று பார்க்கப்பட்டது.
  16. "HT Picks: The most interesting books of the week". Hindustan Times (ஆங்கிலம்). 2020-02-07. 2020-02-09 அன்று பார்க்கப்பட்டது.