உள்ளடக்கத்துக்குச் செல்

வில்சன் கடற் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Oceanites|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
வில்சன் கடற் குருவி
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Oceanites
இனம்:
இருசொற் பெயரீடு
Oceanites oceanicus
Kuhl, 1820
வாழிட எல்லை (நீல நிறத்தில்)

வில்சன் கடற் குருவி ( Wilson's storm petrel ) என்பது ஓசியானிடிடேயின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கடற்பறவை ஆகும். உலகின் மிகுந்த அளவில் காணப்படும் பறவை இனங்களில் இதுவும் ஒன்றாகும். முதன்மையாக இது தெற்கு அரைக்கோளத்தில் உள்ள கடற்பகுதியில் பரவலாக காணப்படுகின்றது. இவை கோடையில் வடக்கு அரைக்கோளம் நோக்கி வருகின்றன. உலக அளவில் இவற்றின் எண்ணிக்கை 2022 இல் 8 முதல் 20 மில்லியன் என்ற எண்ணிக்கையில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. [2] 2010 இல் இது 12-30 மில்லியனாக மதிப்பிடப்பட்டது. [3] 1998 புத்தகம் 50 மில்லியனுக்கும் அதிகமான இணைகளாக இவற்றின் எண்ணிக்கையை மதிப்பிட்டுள்ளது. இதற்கு ஸ்காட்டிஷ்-அமெரிக்க பறவையியலாளர் அலெக்சாண்டர் வில்சனின் நினைவாக பெயர் இடப்பட்டது. ஓசியானைட்ஸ் என்ற இனப் பெயரானது டெதிசின் மூவாயிரம் மகள்களான தொன்ம ஓசியானிட்களைக் குறிக்கிறது. இதன் இனப் பெயர் இலத்தீன் சொல்லான ஓசியனஸ், ("கடல்") என்பதிலிருந்து வந்தது.

விளக்கம்[தொகு]

வில்சன் கடற் குருவியின் விரல்களை பிணைத்திருக்கும் சவ்வு நல்ல மஞ்சள் நிறமுடையது

வில்சனின் கடற் குருவி ஒரு சிறிய பறவை ஆகும். இது 16–18.5 செமீ (6.3–7.3 அங்குலம்) நீளமும், 38–42 செமீ (15–16.5 அங்குலம்) இறக்கையுடன் சேர்த்த அகலம் கொண்டது. இது ஐரோப்பிய கடற் குருவியை விட சற்றே பெரியது. இதன் விழப்படலமும், அலகும் கருப்பாக இருக்கும். கால் விரல்கள் கருப்பு நிறமுள்ளவை. விரல்களை பிணைத்திருக்கும் சவ்வு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் இறகுகள் அடற் பழுப்பு நிற்றத்தில் இருக்கும். ஆனால் பிட்டத்தை ஒட்டிய வால் பகுதியும், இறக்கையின் பக்கவாட்டுப் பகுதியிலும் வெண்மையாக இருக்கும். இப்பறவை பறக்கும்போது அதன் கால்கள் வாலைத் தாண்டி நீண்டிருக்கும். [4] இனப்பெருக்கத்திற்கு முந்தைய வயதில் உள்ள இப்பறவைகளின் கால்விரல்களுக்கு இடையே உள்ள மஞ்சள் நிற சவ்வானது கருப்பு புள்ளிகளுடன் இருக்கும். [5] [6]

பரவலும் வாழ்விடமும்[தொகு]

தெற்கு அரைக்கோளத்தின் கோடை காலத்தில் இந்த இனப் பறவைகள் அண்டார்டிக் கடற்கரையோரங்கள் மற்றும் தெற்கு செட்லேண்ட் தீவுகள் போன்ற அருகிலுள்ள தீவுகளில் இனப்பெருக்கம் செய்கிறன்றன. இவை ஆண்டின் பிற்பகுதியை கடலில் ஓய்வெடுத்து கழிக்கின்றன. தெற்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் நிலவும் காலத்தில் வடக்கு பெருங்கடல்களை நோக்கி நகர்கிறது. இவற்றை தென்னிந்திய கடற்கரை சார்ந்த கடல் பகுதியில் அரியதாகவே காணமுடியும். தென்மேற்கு பருவ மழை பெய்யும்போது வலசை வரும் இவை மேற்கு கடற்கரையை நெருங்கி வருகின்றன.[7] இப்பறவைகள் பசிபிக் பெருங்கடலை விட வடக்கு அத்திலாந்திக்கில் மிகவும் பொதுவாக காணப்படுகின்றன.

தென் துருவ தீவுகளில் இவை இனப்பெருக்கம் செய்கின்றன. இதனால் வில்சன் கடற் குருவியை தரைப்பரப்பில் இருந்து பார்ப்பதற்கு அரிதான பறவையாக உள்ளது. கடுமையான புயல்களின் போது மட்டுமே இந்த இனப் பறவைகள் நிலப்பகுதிகளுக்குள் தள்ளப்படுகின்றன.

நடத்தையும் சூழலியலும்[தொகு]

வில்சன் கடற் பறவை கடல் மேற்பரப்பில் தாழ்வாகப் பறக்கிறது மேலும் கடல் மேற்பரப்பில் இருந்து மிதவைவாழி உணவுப் பொருட்களை எடுக்கும்போது நீர் மேற்பரப்பில் தாவித் தாவி பறக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. [8] ஐரோப்பிய கடற் குருவிகளைப் போலவே, இவை மிகவும் கூட்டமாக காணப்படுகின்றன. மேலும் கப்பல்கள் மற்றும் மீன்பிடி படகுகளையும் பின்தொடரும். இவை முக்கியமாக கடல் மேற்பரப்பில் உள்ள மிதவைவாழிகளான முதுகெலும்பற்ற உயிரினங்களை உணவாக கொள்கின்றன. அரிதாகவே இரையைப் பிடிக்க கடல் மேற்பரப்பிற்குக் கீழே மூழ்கும். இருப்பினும் இவை சில நேரங்களில் தூண்டில்மீன் குடும்பத்தில் 3-8 செ.மீ நீளமுள்ள மீன்களை பிடித்து உண்ணும். [9]

சராசரியாக 40 கிராம் கொண்ட, இவையே அண்டார்டிக் பகுதியில் இனப்பெருக்கம் செய்யும் சிறிய வெப்ப இரத்த விலங்கு ஆகும். [10] இவை கடலுக்கு அருகில் உள்ள தீவுப் பகுதிகளில் பல்லாயிரக் கணக்கில் கூடி பாறை இடுக்குகளில் அல்லது மென்மையான தரையில் சிறிய துளைகளில் கூடு கட்டி ஒற்றை வெள்ளை முட்டையை இடும். அண்டார்டிக்கில், சில நேரங்களில் இவற்றின் கூடு அல்லது குஞ்சுகள் பனிப்பொழிவு ஏற்பட்டு அழிவுக்கு உள்ளாகலாம். பெரிய கடல் புறாக்கள் மற்றும் ஸ்கூவாக்களால் வேட்டையாடப்படுவதில் இருந்து தப்பதற்காக இந்த கடற் குருவிகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களுக்கு இரவு நேரத்தில் மட்டும் செல்லும். மேலும் தெளிவான நிலவொளி இரவுகளில் தரையிறங்குவதைத் தவிர்க்கும். பெற்றோர்கள் இருவரும் கூடுகளை பராமரித்து, தங்களின் ஒற்றை குஞ்சுக்கு உணவளிக்கின்றன. [11] குஞ்சுகள் பசியுடன் இருக்கும் போது மிகவும் தீவிரமாக உணவுக்காக கத்தும். [12] குஞ்சுகள் சுமார் 60 நாட்கள் கூட்டில் இருக்கும். குஞ்சுகளுக்கு உணவாக கிரில், மீன், ஆம்பிபோட்கள் ஆகியவை கொடுக்கபடுகின்றன. [13] பறவை பெற்றோர் தங்கள் கூட்டுத் துளைகள், இடுக்குகளை [14] இருட்டில் அடையாளம் காணும் திறன் கொண்டுள்ளன. [15]

அண்டார்டிகாவில் இவற்றின் எண்ணிக்கை குறித்த மதிப்பீடுகளின் படி 10 5 மற்றும் 10 6 ஜோடிகளுக்கு இடையில் இருப்பதாக மதிப்பிடுகின்றன. [16] அதன் பெரிய வாழிடப் பரப்பினால் வில்சன் கடற் குருவியானது பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு செம்பட்டியலில் தீவாய்ப்பு கவலை குறைந்த இனமாக மதிப்பிடப்பட்டுள்ளது. [1]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 BirdLife International (2018). "Oceanites oceanicus". IUCN Red List of Threatened Species 2018: e.T22698436A132646007. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22698436A132646007.en. https://www.iucnredlist.org/species/22698436/132646007. பார்த்த நாள்: 12 November 2021. 
 2. "Wilson's Storm-petrel (Oceanites oceanicus) - BirdLife species factsheet". datazone.birdlife.org. 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-05-28.
 3. "Oceanites oceanicus — Wilson's Storm-Petrel". Australian Government. பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.
 4. Flood, Robert L.; Thomas, Bryan (2007). "Identification of 'black-and-white' storm-petrels of the North Atlantic". British Birds 100 (7): 407–442. http://scillypelagics.com/BBstormpetrels.pdf. 
 5. Quillfeldt, Petra; Schmoll, Tim; Peter, Hans-Ulrich (2000). "The use of foot web coloration for the estimation of prebreeder numbers in Wilson's storm-petrels, Oceanites oceanicus". Polar Biology 23 (11): 802–804. doi:10.1007/s003000000167. 
 6. Harrison, Peter (1983). "Identification of white-rumped North Atlantic petrels". British Birds 76 (4): 161–174. http://www.britishbirds.co.uk/search?id=5905. 
 7. க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 3–4.
 8. Withers, P.C. (1979). "Aerodynamics and hydrodynamics of the 'hovering' flight of Wilson's Storm Petrel". J. Exp. Biol. 80: 83–91. http://www.avibirds.com/pdf/W/Wilson%20stormvogeltje5.pdf. 
 9. Croxall, J.P.; North, A.W. (1988). "Fish prey of Wilson's storm petrel Oceanites oceanicus at South Georgia (Antarctica)". British Antarctic Survey Bulletin 78: 37–42. http://www.antarctica.ac.uk/documents/bas_bulletins/bulletin78_03.pdf. 
 10. Obst, B.S.; Nagy, Kenneth A.; Ricklefs, Robert E. (1987). "Energy Utilization by Wilson's Storm Petrel (Oceanites oceanicus)". Physiological Zoology 60 (2): 200–210. doi:10.1086/physzool.60.2.30158644. 
 11. Gladbach, A.; Braun, C.; Nordt, A.; Peter, H-U; Quillfeldt, P. (2009). "Chick provisioning and nest attendance of male and female Wilson's storm petrels Oceanites oceanicus". Polar Biology 32 (9): 1315–1321. doi:10.1007/s00300-009-0628-z. http://orn.mpg.de/nwg/quillfeldt/Gladbach.pdf. 
 12. Quillfeldt, P. (2002). "Begging in the absence of sibling competition in Wilson's storm-petrels, Oceanites oceanicus". Animal Behaviour 64 (4): 579–587. doi:10.1006/anbe.2002.3090. 
 13. Quillfeldt, P.; Schmoll, Tim; Peter, Hans-Ulrich; Epplen, Jörg Thomas; Lubjuhn, Thomas (2001). "Genetic Monogamy in Wilson's Storm Petrel". The Auk 118 (1): 242–248. doi:10.1642/0004-8038(2001)118[0242:GMIWSS]2.0.CO;2. https://archive.org/details/sim_auk_2001-01_118_1/page/242. 
 14. Bonadonna, Francesco; Bretagnolle, Vincent (2002). "Smelling home: a good solution for burrow-finding in nocturnal petrels?". Journal of Experimental Biology 205 (16): 2519–2523. பப்மெட்:12124375. http://jeb.biologists.org/content/205/16/2519.abstract. 
 15. Jouventin, P.; Mouret, Vincent; Bonadonna, Francesco (2007). "Wilson's Storm Petrels Oceanites oceanicus Recognise the Olfactory Signature of Their Mate". Ethology 113 (12): 1228–1232. doi:10.1111/j.1439-0310.2007.01444.x. 
 16. Olivier, Frédérique; Wotherspoon, Simon J. (2006). "Distribution and abundance of Wilson’s storm petrels Oceanites oceanicus at two locations in East Antarctica: testing habitat selection models" (in en). Polar Biology 29 (10): 878–892. doi:10.1007/s00300-006-0127-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:0722-4060. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Oceanites oceanicus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்சன்_கடற்_குருவி&oldid=3772691" இலிருந்து மீள்விக்கப்பட்டது