ஸ்கூவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Bilateria
ஸ்கூவாக்கள்
Stercorarius pomarinusPCCA20070623-3985B.jpg
பொமரின் ஜேகர்
உயிரியல் வகைப்பாடு e
Kingdom: விலங்கு
Phylum: முதுகுநாணி
Class: பறவை
Order: சரத்ரீபார்மசு
Suborder: லேரி
Family: ஸ்கூவா
கிரே, 1871
Genus: ஸ்டெர்கோராரியஸ்


பிரிசன், 1760

ஸ்கூவாக்கள் (ஆங்கிலப் பெயர்: Skuas) என்பவை கடற்பறவைகளின் ஒரு குழு ஆகும். இவை இசுடெர்கோராரிடே குடும்பம், இசுடெர்கோராரியசு பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மூன்று சிறிய ஸ்கூவாக்கள் அமெரிக்க ஆங்கிலத்தில் ஜேகர்கள் (Jaegers) என்றழைக்கப்படுகின்றன.

இவை மித வெப்ப மற்றும் ஆர்க்டிக் பகுதிகளின் நிலத்தில் கூடு கட்டக் கூடியவை. நீண்ட தூரத்திற்கு இடம்பெயரக்கூடியவ. இவை தென் துருவத்திலும் பார்க்கப்பட்டுள்ளன.[1]

இரு இசுகூவாக்களும் ஒரு இராட்சத பெத்ரலும் ஒரு இறந்த அண்டார்க்டிகா ஃபர் கடல்நாய்க்காகச் சண்டையிடுகின்றன.

உயிரியல் மற்றும் குணங்கள்[தொகு]

நீள வால் ஸ்கூவாவில் (எடை 310 கிராம்) இருந்து பழுப்பு ஸ்கூவா (எடை 1.63 கி.கி.) வரை எடையுள்ள ஸ்கூவாக்கள் உள்ளன. சராசரியாக ஒரு ஸ்கூவாவானது அலகில் இருந்து வால் வரை 56 செ.மீ. நீளமும், விரிந்த இறக்கையின் நீளமானது 121 செ.மீ.ம் இருக்கும். இதன் கூட்டின் அருகே செல்லும் கொன்றுண்ணிகளின் தலையைக் குறிவைத்து இவை ஒரு குண்டைப் போல் விழும். அவற்றை விரட்டும்.[2]

ஒரு இசுகூவா குஞ்சு, முட்டைப் பல்லுடன்

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்கூவா&oldid=2454721" இருந்து மீள்விக்கப்பட்டது