விராலிக்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
—  மூலக்காடு ஊராச்சிக்கு உட்பட கிராம பகுதி வீரம் விளைந்த மண் விராலிக்காடு  —
விராலிக்காடு
இருப்பிடம்: விராலிக்காடு
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°49′22″N 77°46′17″E / 11.822799°N 77.771338°E / 11.822799; 77.771338ஆள்கூறுகள்: 11°49′22″N 77°46′17″E / 11.822799°N 77.771338°E / 11.822799; 77.771338
மாவட்டம் சேலம்
வட்டம் மேட்டூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் S. A. ராமன், இ. ஆ. ப. [3]
தலைவர் மனிமொழி
மக்களவைத் தொகுதி தர்மபுரி
சட்டமன்றத் தொகுதி மேட்டூர்
சட்டமன்ற உறுப்பினர்

செ. செம்மலை (அதிமுக)

மக்கள் தொகை 3,480
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


வீரம் விளைந்த மண் விராலிக்காடு, VIRALIKKADU, தமிழகத்தில் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் மூலக்காடு ஊராட்சியில் வீரம் விளைந்த மண் விராலிக்காடு அமைந்துள்ளது. இந்த ஊருக்கு என்று பல்வேறு சிறப்புகள் உள்ளது. இந்த ஊர் இயற்கையாகவே தமிழில் வரும் ஐந்திணை நிலங்களை போன்று அமையப் பெற்ற ஊராகும். ஐந்தினை நிலங்கள் பற்றியும் மற்றும் விராலிக்காடு அமைப்பைப் பற்றியும் பார்ப்போம். ஐந்து வகை கோயில்களும் ஐந்து வகை நிலங்களும் உடைய ஒரு சிறப்பான கிராமம் இந்த விராலிக்காடு.

குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்பனவே தமிழர் நிலத்திணைகள் ஆகும்.

குறிஞ்சி[தொகு]

மலையும்மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணை - விராலிக்காட்டின் மேற்கே அமைந்துள்ள சென்றாய பெருமாள் மலை இருப்பதால் மலையும் மலை சார்ந்த இடமும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது இந்த மலை உச்சியில் பெருமாள் கோவில் அமைந்துள்ளது மற்றும் வெள்ளை பாறை ஊத்து என்று அழைக்கப்படும் அருவியும் மலையின் நடுவே அமைந்திருப்பது சிறப்பு இந்த ஊத்து 2003 ஆம் ஆண்டு வரையும் காணப்பட்டது தற்போது தமிழகத்தில் நிலை வரும் தட்ப வெப்ப சுழ்நிலையின் காரணமாக நீரின் அளவு குறைந்துள்ளது.

முல்லை[தொகு]

காடும் காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணை - ச சென்றாய பெருமாள் மலையின் எல்லைப் பகுதிகளை தாண்டி அடர்ந்த மரங்கள் காணப்படுவதால் இது காடும் காடு சார்ந்த இடமும் என அழைக்கப்படும் இதை சுற்றியுள்ள விவசாயிகள் மரங்களை வளர்ப்பது விவசாயம் செய்வது போன்ற தொழில் செய்து வருகிறார்கள்.

பாலை[தொகு]

இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை எனப்பட்டது - இந்த பாலை நிலத்தில்  முரச மாதியன் என்ற இனத்தைச் சார்ந்த மக்கள் வீடுகட்டிக் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இந்த வகை இனத்தை சார்ந்த மக்கள் மூத்த பண்டைய தமிழ் பூர்வகுடிகள் ஆகும் ஆனால் தற்போது இவர்களை பற்றி யாரும் அறிந்திராத நிலையில் தான் உள்ளார்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் 75  சதவீதம் மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளார்கள்

மருதம்[தொகு]

வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் எனவும் - தற்போது இருக்கும் மேட்டூர் அணையின் பின்புறத்தில் இருக்கும் இந்த நிலங்களில் முரசு மாதியன் பூர்வகுடி மக்கள் விவசாயம் செய்தும் விவசாய கூலி வேலைகள் செய்தும் வருகின்றார்கள் இது வயலும் வயல் சார்ந்த பகுதியும் ஆகும். தற்போது இவர்கள் விவசாயம் செய்யும் அனைத்து நிலப் பரப்பும் முன்பு ஒரு காலத்தில் இந்த நிலங்கள் அனைத்தும்  இவர்களின் நிலம்தான் மேட்டூர் அணை கட்டுவதற்கு முன்னால் அங்கு குடியிருந்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள் அங்கு இருந்த ஊர்களின் பெயர்கள் வன்னிமரத்தூர் மற்றும் ஆண்டாவரத்தேரி. இன்றளவும் மேட்டூர் அணையில் நீர் குறையும் பொழுது இவர்களின் மூதாதையர்கள் பயன்படுத்திய பொருட்கள் நிறைய உள்ளது மேலும் தங்களது மூதாதையர்களின் நிலத்தில் விவசாயம் செய்து தங்களது பிழைப்பை நடத்தி வருகின்றார்கள் அதே போன்று அங்குதான் இவர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்க்கு சான்றாக ஆதாரம் இன்றளவும் இருக்கின்றது. மேட்டூரில் நீரின் அளவு குறையும்போது ஆதாரங்கள் தென்படுகின்றது அதுமட்டுமின்றி அவர்களின் பூர்வ குடி நிலங்களில் விவசாயம் செய்து வருவார்கள்.  இந்த பூர்வ குடிகளின் சான்றுகள் அணையின் நீர்மட்டம் குறையும் பொழுது தற்போது இருக்கும் விராலிகாடு ஊரிலிருந்து கிழக்கில் சுமார் இரண்டு மூன்று கிலோமீட்டர் தொலைவில் மேட்டூர் அணையின் பின்புறத்தில் தெரியவரும்.

நெய்தல்[தொகு]

கடலும்கடல் சார்ந்த இடம் நெய்தல்எனவும் அழைக்கப்பட்டன - தமிழகத்தில் என்றும் வற்றாத நதியாக காணப்படும் மேட்டூர் அணையின் நீர் எப்பொழுதும் இந்த ஊரின் பகுதியில் மட்டும் தான் முழுமையாக தெரியும் அது கடல் போல் காட்சி தருவதால் இது கடலும் கடல் சார்ந்த பகுதியாகும்.

கோவில்[தொகு]

இவ்வாறு சிறப்போடு விளங்குவது மட்டும் அல்லாமல் ஐந்து கோவில்கள் சுற்றிலும் காணப்படுகிறது.  

முதலாவது கோவில்[தொகு]

முதலாவது கோவில் மலையின் அடிவாரத்தில் விராலிகாடு ஏரி நீர் தேக்கத்தில் அருகில் அமையப் பெற்றிருக்கும் எல்லை முனியப்பன் சாமி கோவில் இந்த கோவிலை கருப்பண்ணன் என்பவர்களின் குடும்பம் பராமரித்து செய்து வருகிறது

இரண்டாவது கோவில்[தொகு]

இரண்டாவது கோவில் பெருமாள் கோவில் இது ஊரின் நுழையும் பொழுது இருக்கும் இந்தக் கோவிலை மணி வசந்தா என்பவர்கள் பராமரித்து வருகிறார்கள்.

மூன்றாவது கோவில்[தொகு]

மூன்றாவது கோவில் கற்பக விநாயகர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்த பிரசித்திபெற்ற திருக்கோவில் ஆகும்.

நான்காவது கோவில்[தொகு]

நான்காவதாக அமையப்பெறும் கோவில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் இந்த கோவிலில் அமையப்பெற்ற அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தது இருப்பதால் இதை சக்தி மாரியம்மன் என்று அழைக்கின்றார்கள் இந்த கோவிலில் அனைத்து மக்களும் வழிபட்டுச் செல்வார்கள். இது விராலிக்காட்டின் பொது கோவிலாகும் மக்கள் அனைவராலும் நியமிக்க பட்ட குருநாதன் என்பவர்களின் மகன்கள் மூர்த்தி மற்றும் சீனிவாசன் அவர்கள் பராமரிப்பில் இருந்து வருகிறது.

ஐந்தாவது கோவில்[தொகு]

ஐந்தாவதாக இடம்பெறும் கோவில் ஸ்ரீ பழனி ஆண்டவர் திருக்கோவில் கூடிய விரைவில் பிரபலமாக கூடிய கோவிலாக இது இடம்பெற்று வருகிறது இதை சுங்கப்பன் என்கின்ற பெருமாள் நிர்வகித்து வருகின்றார்.

இந்த ஊரில்தான் சந்தன கடத்தல் வீரப்பனின் நினைவகமும் அமையப் பெற்றுள்ளது.

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விராலிக்காடு&oldid=2887227" இருந்து மீள்விக்கப்பட்டது