விடாமுயற்சி
விடாமுயற்சி Vidaa Muyarchi | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | மகிழ் திருமேனி |
தயாரிப்பு | சுபாஸ்கரன் அல்லிராஜா |
கதை | மகிழ் திருமேனி |
இசை | அனிருத் ரவிச்சந்திரன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | |
படத்தொகுப்பு | என். பி. சிறீகாந்த் |
கலையகம் | லைக்கா தயாரிப்பகம் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விடாமுயற்சி (Vidaa Muyarchi) என்பது மகிழ் திருமேனி எழுத்து இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அதிரடி பரபரப்பூட்டும் இத்திரைப்படத்தை லைகா புரொடக்சன்சு சார்பாக சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்தார். இப்படத்தில் அஜித் குமார், திரிசா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
முதன்மைப் புகைப்படக் காட்சிகள் அக்டோபர் 2023 இல் தொடங்கியது. தற்போது பெரும்பாலும் அசர்பைஜானில் படமாக்கப்படுகிறது. அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்த இப்படத்திற்கு நிரவ் ஷா, ஓம் பிரகாஷ் ஆகியோர் ஒளிப்பதிவும், என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
நடிகர்கள்
[தொகு]இசை
[தொகு]பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றிற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்தார். இது அனிருத், மகிழ் திருமேனி ஆகியோரின் முதல் கூட்டணியாகும். வேதாளம் (2015) விவேகம் (2017) திரைப்படத்திற்குப் பிறகு அஜித்துடன் மூன்றாவது தடவையாக இணைந்துள்ளார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rajaraman, Kaushik (21 February 2023). "Anirudh, Nirav Shah join Magizh Thirumeni for Ajith's AK62". DT Next. Archived from the original on 26 March 2023. பார்க்கப்பட்ட நாள் 27 October 2023.