துணிவு (2023 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துணிவு திரைப்படம்
Thunivu Film
துணிவு திரைப்படத்தின் சுவரொட்டி
இயக்கம்வினோத்
தயாரிப்புபோனிக் கபூர்
கதைவினோத்
இசைஜிப்ரான்
நடிப்பு
ஒளிப்பதிவுநீரவ் ஷா
படத்தொகுப்புவிஜய் வேலுக்குட்டி
கலையகம்
  • பேவியூ ப்ராஜெக்ட்
  • ஜீ இசுடுடியோசு
விநியோகம்ரெட் ஜெயன்ட் மூவீசு
வெளியீடு11 சனவரி 2023 (2023-01-11)
ஓட்டம்146 நிமிடங்கள்[1]
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு₹180 கோடி[2]
மொத்த வருவாய்365 கோடி (US$48 மில்லியன்) [3]

துணிவு (ஆங்கிலத்தில்: Thunivu)[4] என்பது 2023 இல் வெளியான ஒரு தமிழ் வங்கிக் கொள்ளை அதிரடி நாடகத் திரைப்படமாகும். இத் திரைப்படத்தின் கதைவசனம் எழுதி வினோத் இயக்கியிருந்தார். போனிக் கபூர் தயாரித்தார். இப்படத்தில் அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பவானி ரெட்டி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்திலும், சான் கொக்கின், மமதி சாரி, அசய், வீரா பகவதி பெருமாள் ஆகியோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர்.

கதைச்சுருக்கம்[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

சென்னையில் பிரதான பகுதியில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் யுவர் பேங்க் என்ற வங்கியிலிருக்கும் பணத்தை கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டம் தீட்டுகிறது. அதன்படி வங்கிக்குள் நுழையும் அந்த கும்பல், துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களையும், அங்கிருக்கும் வாடிக்கையாளர்களையும் பணயக் கைதிகளாக்குகிறது. இதில் வாடிக்கையாளர் போல வரும் டார்க்டெவில் (அஜித் குமார்) கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டு, மொத்த வங்கியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். உடனே டிஜிபி தயாளன் (சமுத்திரக்கனி) தலைமையிலான காவல்துறை, மற்றும் அரசு எந்திரமும் டார்க் டெவிலைப் பிடிப்பதற்காக முயற்சிக்கிறது. இறுதியில் காவல் துறை கையில் டார்க்டெவில் சிக்கினாரா, இவர் எதற்காக வங்கியில் கொள்ளையடிக்க நினைக்கிறார், அங்கிருக்கும் பணம் யாருடையது, இந்தக் கேள்விகளுடன் திகில் கலந்த திரைக்கதையோடு திரைப்படம் நகர்கிறது.[5]

நடிப்புக்கலைஞர்கள்[தொகு]

ஒலிப்பதிவு[தொகு]

துணிவு திரைப்படம்
ஒலிப்பதிவு
வெளியீடு2022
ஒலிப்பதிவு2022
இசைப் பாணிதிரைப்பட ஒலிப்பதிவு
நீளம்10:11
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்ஜீ மியூசிக் சவுத்
இசைத் தயாரிப்பாளர்ஜிப்ரான்
ஜிப்ரான் காலவரிசை
கூகுள் குட்டப்பா
(2022)
துணிவு திரைப்படம்
(2022)
பட்டத்து அரசன்
(2022)

இத்திரைப்படத்திற்க்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். [10]

தடப்பட்டியல்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "சில்லா சில்லா"  அனிருத் ரவிச்சந்திரன், வைசாக், ஜிப்ரான் 3:42
2. "காசேதான் கடவுளடா"  வைசாக், மஞ்சு வாரியர், ஜிப்ரான் 3:08
3. "கேங்க்ஸ்டா"  சபீர், ஜிப்ரான் 3:21
மொத்த நீளம்:
10:11

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thunivu runtime revealed". Cinema Express. 2 சனவரி 2023. 2 January 2023 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2 January 2023 அன்று பார்க்கப்பட்டது.
  2. "'Thunivu' and Varisu' leaked online within hours of their releases". The Times of India. 11 January 2023 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 11 January 2022 அன்று பார்க்கப்பட்டது. 'Thunivu' is reportedly made on a budget of Rs 180 crores, while Vijay's 'Varisu' is estimated to be around Rs 280 crores.
  3. "Varisu and Thunivu box office collection day 6: Vijay races ahead of Ajith as Varisu earns over Rs 155.4 crore". தி இந்தியன் எக்ஸ்பிரஸ். 16 January 2023. 16 சனவரி 2023 அன்று பார்க்கப்பட்டது.
  4. "AK61 is titled Thunivu: Here's the first look poster of Ajith-H Vinoth's next". The Indian Express. 21 September 2022. 5 November 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 21 September 2022 அன்று பார்க்கப்பட்டது.
  5. இந்து தமிழில் கதைச்சுருக்கம்
  6. இந்தியடுடேவில் அஜித் குமாரின் கதாபத்திரப் பெயர்கள் ஆங்கிலத்தில்
  7. "Ajith poses with Bigg Boss Tamil contestants Pavani Reddy, Amir, and Cibi in Thailand. See picture". The Indian Express. 8 October 2022. 27 December 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 27 December 2022 அன்று பார்க்கப்பட்டது.
  8. "After John Kokken, Ajith has another gift for his Thunivu co-star Ciby". OTTPlay. 19 December 2022. 27 December 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 27 December 2022 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Bigg Boss fame Amir begins dubbing for Ajith's 'Thunivu'". The Times of India. 2 November 2022. 2 November 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 14 November 2022 அன்று பார்க்கப்பட்டது.
  10. "Not Anirudh, Ghibran to compose music for Ajith's next". DT Next. 8 January 2022. 10 May 2022 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 May 2022 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துணிவு_(2023_திரைப்படம்)&oldid=3726253" இருந்து மீள்விக்கப்பட்டது