விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் விக்கிப்பீடியா நண்பர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிப்பீடியா நண்பர்கள் என்று ஒரு விக்கித் திட்டம் துவங்கலாம் என்று விரும்புகிறேன். எல்லோரும் தொடர்ந்து பங்களிக்கும் விக்கிப்பீடியர்களாக விரும்புவதில்லை. அதே வேளை, தமிழ் விக்கிப்பீடியா பற்றிய நன்மதிப்பு கொண்டு இயன்ற வகையில் உதவ விரும்புகிறார்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய விழிப்புணர்வை வலைப்பதிவர்கள், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் என்ற பரந்த வட்டத்தில் கொண்டு செல்வதன் மூலம், இது போல விக்கிப்பீடியா நண்பர்களைப் பெற்றுக் கொள்ள முடியும். தொலைநோக்கில், நமது வீச்சைக் கூட்ட இது உதவும்.

2014 சனவரி முதல் இதனைத் தொடங்கலாம். வாரம் ஒரு வலைப்பதிவர். 52 வாரங்களுக்கு 52 வலைப்பதிவர்கள். 2015ல் கல்வியாளர்கள், 2016ல் சமூகச் செயற்பாட்டாளர்கள் என்பது போன்று தொடர்ந்து இத்திட்டத்தினைத் தொடர்ந்து செயற்படுத்தலாம்.

திட்டத்தின் செயற்பாடு

ஒவ்வொரு வாரமும் ஒரு வலைப்பதிவரைத் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுமாறு வேண்டுவோம். குறைந்தது ஐந்து கட்டுரைகள். அவை ஒவ்வொன்றும் குறைந்தது 3 வரிகள் இருக்க வேண்டும். வலைப்பதிவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தையும் அவரது 5 கட்டுரைகளுக்கான இணைப்புகளையும் முதற்பக்கத்தில் காட்டுவோம். அவரது புகைப்படமும் இடம்பெறும். அவரது வலைப்பதிவுக்குக் கட்டுரைப் பெயர்வெளியில் இருந்தோ முதற்பக்கத்தில் இருந்தோ இணைப்பு தரப் போவதில்லை. ஆனால், அவரது பயனர் பக்கத்தில் வழமை போல் அவரது அனைத்து விவரங்களையும் தள இணைப்புகளையும் தரலாம்.

வலைப்பதிவர்களிடம் இருந்து நாம் எதிர்பார்ப்பது: இவ்வாறு விக்கிப்பீடியாவில் எழுதுவதையும் அவரது கட்டுரைகளுக்கான இணைப்பையும் அவரது வலைப்பதிவு, சமூக ஊடகங்களில் தெரிவிக்க வேண்டும்.

ஏன் வலைப்பதிவர்கள் இதில் ஆர்வம் காட்டக்கூடும்?

ஒவ்வொரு நாளும் 2.5 இலட்சம் பக்கப் பார்வைகள் பெறும் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவது அவர்களுக்குப் பெருமை அளிப்பதாக இருக்கும். முன்பொரு காலத்தில் தமிழ்மண நட்சத்திரப் பகுதிக்கு இருந்த கவனிப்பை ஒப்பிடலாம். முதற்பக்க அறிமுகம் அவர்களுக்குப் புதிய பரப்பைப் பெற்றுத் தரக்கூடும்.

யாரை அழைப்பது?

எந்த வலைப்பதிவரை அழைப்பது, முன்னுரிமை தருவது என்றால் இருக்கிற 10,000+ வலைப்பதிவர்களையும் அழைத்து வரலாம். எப்படி என்றாலும் எல்லாரும் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதலாம் தானே? தற்போது இத்திட்டத்தின் நோக்கத்தை முன்னிட்டுக் கூடிய வீச்சு உள்ள வலைப்பதிவர்களுக்கு முன்னுரிமை தரலாம். கூகுள் PageRank, Alexa வீச்சு முதலிவயற்றைக் கருத்தில் கொண்டு முன்னுரிமை தரலாம்.

தமிழ் விக்கிப்பீடியா பெறும் நன்மை என்ன?

ஒவ்வொரு வாரமும் எழுத்தாற்றல் மிக்க புதிய பங்களிப்பாளர்கள். 52 பேரில் ஓரிருவர் தொடர்ந்து பங்களித்தால் கூட நமக்கு வெற்றியே. இல்லை என்றாலும், தொடர்ந்து கிடைக்கும் சமூக ஊடகப் பரப்புரை நமக்கு நல்ல பயன் தரும்.

அனைவரின் கருத்துகளையும் வரவேற்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 08:18, 25 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 06:18, 1 சனவரி 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:27, 1 சனவரி 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Anton·٠•●♥Talk♥●•٠· 12:02, 1 சனவரி 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 04:39, 2 சனவரி 2014 (UTC)[பதிலளி]
வலைப்பதிவர்கள் அனுபவம் உள்ளவர்களாததால், ஒரு கட்டுரைக்கு குறைந்தது 10 வரிகள் என்பதுப் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 19:13, 1 சனவரி 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் நந்தகுமாரின் கருத்தை ஆமோதிக்கின்றேன். குறைந்தது 10 வரிகள் இருந்தால் நன்று. --சிவகோசரன் (பேச்சு) 06:18, 2 சனவரி 2014 (UTC)[பதிலளி]
அவ்வாறே கேட்டுக் கொள்வோம். பரிந்துரைக்கு நன்றி.--இரவி (பேச்சு) 15:29, 2 சனவரி 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம், விரைந்து செயல்படுத்துங்கள். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:41, 2 சனவரி 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:48, 2 சனவரி 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் - புதுவைபிரபு 06:43, 3 சனவரி 2014 (UTC)
👍 விருப்பம் - --தாரிக் அஸீஸ்  உரையாடுக  15:52, 8 சனவரி 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--ஜெ.மயூரேசன் (பேச்சு) 15:51, 23 சனவரி 2014 (UTC)[பதிலளி]

தனிப்பட்ட வாழ்க்கை, பணியழுத்தம், நேரமின்மை காரணமாக தற்போது இத்திட்டத்தை என்னால் முன்னெடுக்க முடியவில்லை. ஆர்வமுடைய யாராவது பொறுப்பெடுத்துச் செய்யலாம். இல்லையேல், பிறகு இயன்ற போது இத்திட்டத்தை முன்னெடுக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 11:53, 3 பெப்ரவரி 2014 (UTC)