விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் திரைப்படம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏற்கெனவே திரைப்படம் தொடர்பில் பெருமளவு கட்டுரைகள் இருக்கின்றன. இவை பெரும்பாலும் மிகச் சிறிய கட்டுரைகள். இத்திட்டத்தின் கீழ் இவற்றையும் மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும். அத்துடன், படங்களையும், நடிகர், நடிகைகளையும் பற்றி மட்டுமன்றி திரைப்படத் தொழில் நுட்பங்கள் குறித்தும், அத்துறையின் துணைத் துறைகள் குறித்தும் நல்ல கட்டுரைகளை எழுதுவது பயனுள்ளது. ---மயூரநாதன் (பேச்சு) 14:08, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பகுப்பு வெளிவரவிருக்கும் திரைப்படங்களில் வார்ப்புரு இணைத்தாச்சு.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:38, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
மயூரநாதன். அனைத்து கட்டுரைகளையும் நிச்சயம் மேம்படுத்தலாம். --பழ.இராஜ்குமார் (பேச்சு) 14:44, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சமூக வலைத்தளங்களில் பரப்புரை[தொகு]

இத்திட்டம் திரைத்துறை சார்ந்த எண்ணற்ற வலைப்பதியும் நண்பர்களை விக்கிப்பீடியாவிற்கு கொண்டுவரும் என்று நம்புகிறேன். உலக திரைப்படங்களை கூட வலைப்பதிவுகளில் அலசும் நண்பர்கள் இணையும் பொழுது தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் கூடுதலாகும். ஆர்வமுள்ளவர்களிடம் இத்திட்டம் சென்று சேர சமூக தளங்களில் பகிர வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:11, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நல்ல யோசனை! வேற்று மொழித் திரைப்படங்களை சிறப்பாக அலசும் நபர்கள் பலர் உள்ளனர். ஆனால், விக்கி நடைக்கேற்ப திருத்துவதில் அவர்களுக்கு விருப்பம் இருக்குமா எனத் தெரியவில்லை. என்றாலும், சிறந்த யோசனை முன்னெடுப்போம். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:42, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
உடனே அவர்கள் விக்கிநடை பழகுவதும், விக்கி நடைமுறை பழகுவதும் கடினம். இருப்பினும் சிறந்தவர்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இசைந்தமைக்கு நன்றி நண்பரே. சில கிசுகிசுக்கள், முறையற்ற செய்திகள் கூட வரும் அதை நாம் சரிபடுத்தி விடுவோம். :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:00, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தானியங்கியைப் பயன்படுத்துங்கள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் பல்லாயிரக்கணக்கான கட்டுரைகள் திரைப்படங்கள் பற்றி உள்ளன. இவற்றுக்கெல்லாம் பேச்சுப் பக்கத்தில் விக்கித்திட்ட வார்ப்புரு இடுவதற்கு தானியங்கி அணுக்கம் உள்ள ஒருவரைக் கொண்டு இணைப்பது நல்லது.--Kanags \உரையாடுக 21:11, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அப்படி செய்ய சொல்லலாம் சிறீதரன். தானியங்கி அணுக்கம் கொண்டவர்கள் தற்போது யாரேனும் இருக்கிறார்களா என தெரியுமா உங்களுக்கு? --பழ.இராஜ்குமார் (பேச்சு) 16:50, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஜெயரத்தினா வைத்துள்ளார். கேட்டுப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 21:59, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நீச்சல்காரனின் தானியங்கி இது தொடர்பாக சோதனை ஓட்டம் ஒன்றைச் செய்தது. அவருடைய தானியங்கியும் உதவும். ஆனால், அதற்கு முன் அவர் முறையான தானியங்கி அணுக்கம் பெற்று விடுவது நல்லது.--இரவி (பேச்சு) 01:25, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
AswnBot தானியங்கி உதவ தயாராக உள்ளது. விக்கித்திட்டம் தனிமங்களுக்கான வார்ப்புரு இணைத்தல் பிழையின்றி ஓடியது, பார்க்கவும். தேவை எனின் குறிப்பிடவும். நன்றி --அஸ்வின் (பேச்சு) 03:01, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இவ்வார கூட்டு முயற்சியில் ஏழு வீரர்கள் திரைப்படம்[தொகு]

மேம்படுத்தி உதவுங்கள்: ஏழு வீரர்கள் (திரைப்படம்)--இரவி (பேச்சு) 12:06, 9 சனவரி 2014 (UTC)[பதிலளி]

இதைப் போல் அடிக்கடி திட்டத்தை செயல்படுத்துவது புத்துணர்ச்சியை அளிக்கிறது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:32, 9 சனவரி 2014 (UTC)[பதிலளி]

தமிழ் திரைப்படங்கள் பொதுவகத்தில் பதிவேற்றம்[தொகு]

சில இந்தியாவில் காப்புரிமை காலாவதியான பொது உரிமைப் பரப்பு தமிழ் திரைப்படங்கள் பதிவேற்றம் செய்துள்ளேன், இவையெல்லாம் விக்கித்தரவுடன் இணைத்துள்ளேன். காண்க: c:Category:Videos of films in Tamil. நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 14:16, 14 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]