விக்கிப்பீடியா:விக்கிசார்பாக அங்கிகாரமற்று இயங்குவதை தடுத்தல் (வரைவு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முன்னுரை[தொகு]

தங்கள் சுயலாபத்திற்கு பலரும் தமிழ் விக்கிபீடியாவை பயன் படுத்துவதை அனுமதிக்க முடியாது

பொறுப்பில் இல்லாத சிலர் தாங்கள் தமிழ் விக்கிபீடியாவில் பொறுப்பில் இருப்பதாக அரசு அல்லது தனியாரிடம் தெரிவித்து கீழ்க்கண்ட செயல்களை செய்ய வாய்ப்புள்ளது. அல்லது சில நேரம் ஒரு பொறுப்பில் இருக்கும் சிலர், அதை கூறாமல், அதை விட அதிகம் பொறுப்பாக இருப்பதாக காட்டிக்கொண்டு செயல்படலாம். வேறு சிலர் அங்கிகாரம் விக்கிக்கு இல்லாமல் நன்கொடை வசூலித்து, அதை தங்களுக்கு பயன்படுத்தலாம். தாங்கள் இல்லாத பொறுப்பில் இருப்பதாக அடையாள அட்டை அல்லது விருந்தினர் அட்டை தயார் செய்யலாம். விக்கியின் சார்பாக அங்கிகாரம் இல்லாமலேயே அரசிடம் அங்கிகாரம் இருப்பது போல் தொடர்பு கொள்ளலாம்

தமிழ் விக்கிபீடியா வளர்ந்து வரும் நிலையில், இது போல் தவறுகள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டியது நமது கடமை

இது போன்ற தனிமனித தவறுகள் ஊடகங்கள் மூலம் வெளிவந்து விக்கிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு, அதன் பிறகு என்ன செய்வது என்று குழம்பாமல், வெள்ளம் வரும் முன்னர் அணை போடுவதை போல், இப்பொழுதே இது குறித்து நடைமுறைகளை வகுக்க வேண்டும் என்பது என் கருத்து

பரிந்துரை[தொகு]

விக்கி சார்பாக போதிய அங்கிகாரமற்று செயல்படுபவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட வேண்டும் என்பதை கொள்கை முடிவாக எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றேன்

பரிந்துரை விளக்கம்

விக்கி சார்பாக[தொகு]

 1. தாங்கள் விக்கிபீடியாவின் அல்லது விக்கிமீடியாவின் சார்பாக இயங்குவதாக கூறுவது, அல்லது அப்படி எண்ணத்தை தோற்றுவிற்பது

போதிய அங்கிகாரமற்று[தொகு]

 1. பொறுப்பில் இல்லாமல் பொறுப்பில் இருப்பதாக கூறுவது
 2. இருக்கும் பொறுப்பை விட கூடுதல் பொறுப்பில் இருப்பதாக கூறுவது
 3. அளிக்கப்படாத பொறுப்பை விட கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டதாக கூறுவது

செயல்படுபவர்களுக்கு[தொகு]

 1. அடுத்தவர்களிடம் நேரில் தெரிவிப்பது
 2. கடிதம் எழுதுவது
 3. அரசை தொடர்பு கொள்வது
 4. அரசிடம் பரிந்துரைத்தல்
 5. தனியாரிடம் நன்கொடை பெறுவது
 6. விருந்தினர் அட்டை அச்சிடுவது
 7. அடையாள அட்டை அச்சிடுவது
 8. சமூக ஊடகங்களில் தெரிவிப்பது
 9. ஊடகங்களில் தெரிவிப்பது

வாழ்நாள் தடை[தொகு]

 1. விக்கியில் இயங்குவதற்கு வாழ்நாள் தடை
 2. விக்கியை வாசிக்க தடை இல்லை

வாக்கெடுப்பு[தொகு]

ஆதரவு[தொகு]

 1. --நந்தினிகந்தசாமி (பேச்சு) 13:52, 21 அக்டோபர் 2013 (UTC)[பதில் அளி]

எதிர்ப்பு[தொகு]

 1. --Natkeeran (பேச்சு) 14:04, 21 அக்டோபர் 2013 (UTC)[பதில் அளி]
 2. --சோடாபாட்டில்உரையாடுக 14:36, 21 அக்டோபர் 2013 (UTC)[பதில் அளி]
 3. --நீச்சல்காரன் (பேச்சு) 15:15, 21 அக்டோபர் 2013 (UTC)[பதில் அளி]
 4. --நந்தகுமார் (பேச்சு) 17:14, 21 அக்டோபர் 2013 (UTC)[பதில் அளி]
 5. --சங்கீர்த்தன் (பேச்சு) 18:58, 21 அக்டோபர் 2013 (UTC)[பதில் அளி]
 6. --மயூரநாதன் (பேச்சு) 19:06, 21 அக்டோபர் 2013 (UTC)[பதில் அளி]
 7. --≈ உழவன் ( கூறுக ) 03:58, 22 அக்டோபர் 2013 (UTC)[பதில் அளி]
 8. இப்பரிந்துரைக்கு ஆதரவு அளிக்க மனம் இசையவில்லை. காரணம்: கருத்து வேறுபாடுகளையும் புரிதல் சிக்கல்களையும் நன்முறையில் தீர்த்துவைக்க விக்கியின் நற்பண்புகளைக் கடைப்பிடித்தாலே போதும். எதிர்பாராமல் மிகப் பெரும் தீங்கு ஏற்படும் நிலை எழுந்தால் அப்போது தீர்வு காண விக்கி சமூகம் முன்வரும் என்னும் உறுதியான நம்பிக்கை உள்ளது.--பவுல்-Paul (பேச்சு) 04:09, 22 அக்டோபர் 2013 (UTC)[பதில் அளி]
 9. --Kanags \உரையாடுக 04:24, 22 அக்டோபர் 2013 (UTC)[பதில் அளி]
 10. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:50, 22 அக்டோபர் 2013 (UTC)[பதில் அளி]
 11. --கலை (பேச்சு) 07:21, 22 அக்டோபர் 2013 (UTC)[பதில் அளி]
 12. --Booradleyp1 (பேச்சு) 04:27, 24 அக்டோபர் 2013 (UTC)[பதில் அளி]

கருத்து[தொகு]

இது தொடர்பாக நாம் ஒரே ஒரு சிக்கலைத் தான் இதுவரை சந்தித்துள்ளோம். அதற்காக எல்லோரும் எல்லா விடயங்களுக்கும் விக்கியில் அனுமதி பெற்று செயற்படுவது என்றால் விக்கியின் செயற்பாடுகள் இறுக்கமடைந்து, பயனர்கள் தம் முனைப்பாக அறிமுகப்படுத்தல்கள், பரவலாக்கல் பணிகள் செய்வது தடைபெற்று விடும். மேலும், அதற்கான தண்டனையாக வாழ்நாள் தடை எல்லாம் என்று கூறி இருப்பது இந்தக் கொள்கை தொலைநோக்காக, எல்லாப் பக்க விளைவுகளையும் சூழ்நிலைகளையும் சிந்தித்து பரிந்துரைக்காதையே சுட்டிக் காட்டுகிறது. இதைக் கடுமையாக எதிர்க்கிறேன். --Natkeeran (பேச்சு) 14:08, 21 அக்டோபர் 2013 (UTC)[பதில் அளி]

ஒரு சிக்கல் வந்து விட்டது. மேலும் சிக்கல்கள் வரக்கூடாது என்பதால் தான் இந்த கொள்கை. தண்டனை என்பது கடுமை என்றால் அதை நீங்கள் மாற்றலாமே. ஏன் எதிர்க்க வேண்டும் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 14:31, 21 அக்டோபர் 2013 (UTC)[பதில் அளி]

விக்கிப்பீடியா நீதிமன்றமல்ல, தண்டனைக்களமுமல்ல. இக்கொள்கையின் நோக்கு என்னவாக இருந்தாலும் இதன் விளைவு சமூக ஒழிப்பு (community destruction) ஆகவே இருக்கும் என்பதில் சிறிதும் எனக்கு ஐயமில்லை.--சோடாபாட்டில்உரையாடுக 14:39, 21 அக்டோபர் 2013 (UTC) 👍 விருப்பம்--கலை (பேச்சு) 07:26, 22 அக்டோபர் 2013 (UTC)[பதில் அளி]

 • வாழ்நாள் தடை என்பதை ஆதரிக்கவில்லை. விக்கியில் எழுதுபவர்கள் எல்லாம் பெறுப்பாளர்கள் தான். ஒவ்வொரு வகையில் விக்கி எழுதுதல் அவரவருக்கு சுயலாபமே(மகிழ்ச்சி, கற்றல், மொழி, தொழிற்நுட்பம்). அந்தப் பொறுப்பைத் விக்கி வளர்ச்சியின்றி தனிமனித சுயலாபத்திற்கு (மட்டும் அல்லது அதிகமாக) பயன்படுத்தினால் தான் அது தவறு. ஆகவே வரைவின் சாரத்தை விரும்பவில்லை --நீச்சல்காரன் (பேச்சு) 15:26, 21 அக்டோபர் 2013 (UTC)[பதில் அளி]
விக்கிப்பீடியாவில் பொறுப்பு, பொறுப்பு அளிப்பது என்பவற்றுக்கெல்லாம் பொருள் எதுவும் கிடையாது. விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்காக எந்தப் பயனரும் தன்னாலான முயற்சிகளைச் செய்யலாம். அப்படித்தான் நடந்துவருகிறது. யாராவது விக்கிப்பீடியாவின் பெயருக்குக் களங்கம் ஏற்படும்படியோ அல்லது பிறரைத் தவறாக வழிகாட்டும்படியோ நடந்து கொண்டால் அதற்கேற்பப் பிற பயனர்கள் தலையிடலாம். முன்னைய சந்தர்ப்பமொன்றில் விக்கியின் பயனர் அல்லாத ஒருவரே அவ்வாறு நடந்துகொண்டிருக்கிறார். அப்படியான சந்தர்ப்பங்களில் நாம் எழுதும் விதிகள் பயன்படா. இப்படியான கடுமையான விதிகள் பயனர்கள் சுதந்திரமாகச் செயல்பட்டு தமிழ் விக்கிப்பீடியாவை வளர்ப்பதைத் தடுத்துவிடலாம். ---மயூரநாதன் (பேச்சு) 19:20, 21 அக்டோபர் 2013 (UTC)👍 விருப்பம்--கலை (பேச்சு) 07:26, 22 அக்டோபர் 2013 (UTC)[பதில் அளி]
விக்கிப்பீடியாவில் பொறுப்பு, பொறுப்பு அளிப்பது என்பவற்றுக்கெல்லாம் பொருள் உண்டு என்றல்லவா நினைத்தேன். ??? புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 02:50, 22 அக்டோபர் 2013 (UTC)[பதில் அளி]
அது விக்கிப்பீடியா எனும் கலைக்களஞ்சியத்தில் அல்ல, புருனோ. விக்கிமீடியா இந்தியா எனும் இலாப நோக்கற்ற நிறுவனம் வெளியிட்டது. அந்த நிறுவனத்துக்கும் விக்கிப்பீடியாவின் உள்நடப்புக்களுக்கும் நேரடித் தொடர்பு கிடையாது. அது விக்கியைப் பற்றிப் பரப்புரை செய்வதற்காகத் தன்னார்வலர்களால் (நான் உட்பட சிலர் இணைந்து) தொடங்கிய அமைப்பு. -- சுந்தர் \பேச்சு 03:30, 22 அக்டோபர் 2013 (UTC)[பதில் அளி]
இதே பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் கருத்திட்டு இருகின்றேன், பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவும் பிற விக்கி உறவுத்திட்டங்களும் விக்கிமீடியாவின் திட்டங்கள். விக்கிமீடியாதான் தாய் நிறுவனம்.--செல்வா (பேச்சு) 03:49, 22 அக்டோபர் 2013 (UTC)[பதில் அளி]